திருமலை திருப்பதியில் தங்கும் பக்தர்கள் ரூம்களை காலி செய்த பின்னர் டெபாசிட் தொகை வர தாமதம் ஆகிறது என்று நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்தனர். அதற்கு நடவடிக்கை எடுக்கும் விதமாக டெபாசிட் பணம் எப்போது உங்கள் பேங்க் அக்கவுண்டில் எப்போது வந்து சேரும் என்பதை தெரிந்துக் கொள்ள வெப்சைட்டில் ஒரு புது 'டிராக்கிங் வசதி' அறிமுகப்படுத்தப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது!
டெபாசிட் பணத்தை ட்ராக் செய்ய புதிய ட்ராக்கிங் வசதி
திருப்பதி திருமலையில் ரூம்களை காலி செய்த பிறகு பக்தர்களுக்கு டெபாசிட் பணத்தை திரும்பக் கொடுப்பதில் தேவஸ்தானம் எந்தத் தவறும், தாமதமும் செய்யவில்லை என்று தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்களது டெபாசிட் பணம் எப்போது அக்கவுண்டில் வந்து சேரும் என்பதை தெரிந்துகொள்ள தேவஸ்தான வெப்சைட்டில் ஒரு புதிய டிராக்கிங் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று தேவஸ்தானம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதிகபட்சம் 5 நாட்கள்
UPI முறையில் பணம் செலுத்தி திருமலையில் ரூம்களைப் பெற்ற பக்தர்களுக்கு ரூம்களை காலி செய்தவுடன் டெபாசிட் தொகை உடனடியாக திருப்பி கொடுக்கப்படுகிறது எனவும், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தி ரூம்களைப் பெறும் பக்தர்களின் அக்கவுண்டில் டெபாசிட் பணம் 3 முதல் 5 வேலை நாட்களுக்கு வரவு வைக்கப்படுகிறது எனவும் TTD தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
அக்கவுண்டை சர்பார்க்குமாறு கோரிக்கை
மேற்கூறிய தகவலை உறுதி செய்யாமல் சில பக்தர்கள் கால் சென்டர்களுக்கு போன் செய்தும், அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பி வருவதாகவும் தெரிகிறது. பக்தர்கள் தங்கள் பேங்க் அக்கவுண்டை நன்கு சரிபார்த்து டெபாசிட் பணம் திரும்ப வராவிட்டால் மட்டுமே தொடர்பு கொள்ளுமாறு TTD தேவஸ்தானம் பக்தர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் எந்த அக்கவுண்டில் இருந்து ரூம் வாடகைக்கு பணம் கட்டுகிறீர்களோ அந்த அக்கவுண்டிற்கு மட்டுமே டெபாசிட் பணம் வந்து சேரும் என்பதையும் பக்தர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்படி செய்தால் டெபாசிட் பணம் கிடைக்காது
தேவஸ்தான கொள்கைகளின்படி ரூமை காலி செய்யாத சில சந்தர்ப்பங்களிலும் சரிபார்ப்புக் குறியீடு கொடுக்காமல் இருப்பது அல்லது ரூம் வாங்கும் போது இருந்த போட்டோ பொருந்தாமல் இருப்பது ஆகிய சூழ்நிலையிலும் பக்தர்களுக்கு டெபாசிட் பணம் திரும்ப கொடுக்கப்பட மாட்டாது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
தெப்பக்குளம் மூடல்
வருடாந்திர பிரமோற்சவத்தை முன்னிட்டு ஸ்ரீவாரி கோவிலுக்கு அருகிலுள்ள சுவாமி புஷ்கரணி எனும் தெப்பக்குளத்தை சுத்தம் மற்றும் சீரமைப்பு செய்ய தெப்பக்குளம் ஆகஸ்ட் மாதம் முழுவதும் மூடப்படும். அதுவரை பக்தர்களின் நலன் கருதி குளத்தின் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

பவித்ர உற்சவ டிக்கெட்டுகள்
ஸ்ரீவாரி கோவிலில் வருடாந்திர பவித்ர உற்சவம் ஆகஸ்ட 27 முதல் 29 வரை நடைபெறும். திருமலையில் CRO அலுவலகத்தில் சோதனை அடிப்படையில் ஜூலை 19 முதல் பணம் செலுத்த SMS மூலம் பணம் செலுத்தும் லிங்க் (Payment link) அனுப்பப்படும். லக்கி டிப் தேர்வுகளில் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளைப் பெற்ற பக்தர்கள், இப்போது டிக்கெட்டுக்கான பணத்தைச் செலுத்துவதற்கும் டிக்கெட் வாங்குவதற்கும் கவுண்டர்களுக்குச் செல்ல வேண்டியதில்லை. UPI, டெபிட் கார்டு, கிரெடிட் கார்ட் மூலம் ஆன்லைனில் பணம் செலுத்தி நேரடியாக டிக்கெட்டுகளை பிரின்ட் எடுத்துக் கொள்ள முடியும்.
தன்னார்வலராக சேர பணம் கொடுக்க வேண்டாம்
ஸ்ரீவாரி சேவா தன்னார்வ சேவைகளில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும் வகையில், பிற மாநிலங்களில் இருந்தும் தன்னார்வலர்களாக சேவை செய்ய பக்தர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் ஆன்லைன் முறை கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் இந்த சேவையில் கலந்துக்கொள்ள யாரிடமும் பணம் கொடுக்க வேண்டாம் எனவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

நேரடியாக சீனியர் சிட்டிசன் டிக்கெட் கொடுக்கப்பட மாட்டாது
சீனியர் சிட்டிசன் டிக்கெட்டை ஆன்லைனில் மட்டுமல்லாமல் நேரடியாகவும் வழங்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். சீனியர் சிட்டிசன் டிக்கெட்டை நேரடியாக வழங்க முடியாது என்றும் இலவச தரிசன டிக்கெட் அல்லது ரூ.300 டிக்கெட் வைத்துள்ள 65 மற்றும் 65 வயதிற்கு மேல் உள்ள முதியோர், கோவில் மகாதுவாரம் அருகே உள்ள பயோமெட்ரிக் கேட் வழியாக ஸ்ரீவாரி சேவகர்களின் உதவியுடன் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
விரைவில் சப்தகிரி ரெஸ்ட் ஹவுசில் வசதிகள்
சப்தகிரி ரெஸ்ட் ஹவுசின் அறைகளின் ஹீட்டர்கள், வெஸ்டர்ன் டாய்லெட்டுகள், அலமாரிகள், பர்னிச்சர் வசதியை ஏற்படுத்துமாறு பக்தர்கள் கேட்டுக் கொண்டனர். திருமலையில் 120 கோடி ரூபாய் செலவில் 6000 அறைகள் நவீனப்படுத்தப்பட்டுள்ளன. சப்தகிரி ஓய்வறையில் உள்ள அறைகளை நவீனப்படுத்த டெண்டர் கோரப்பட்டு அடுத்த 6 மாதங்களில் அறைகளில் நவீனப்படுத்தும் பணி தொடங்கும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.



Click it and Unblock the Notifications





