Search
  • Follow NativePlanet
Share
» »குடும்பத்தினருடன் கோவில்களுக்கு ட்ரிப் பிளான் பண்ணும் போது இந்த விஷயங்களை செய்ய மறக்காதீர்கள்!

குடும்பத்தினருடன் கோவில்களுக்கு ட்ரிப் பிளான் பண்ணும் போது இந்த விஷயங்களை செய்ய மறக்காதீர்கள்!

கோவில்களின் மாநிலமான தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான வரலாற்று சிறப்புமிக்க கோவில்கள் உள்ளன. ஆயிரம் ஆண்டுகளாக கம்பீரமாக நிற்கும் தஞ்சை பெரிய கோவில் முதல், பிரமிக்க வைக்கும் மதுரை மீனாட்சி கோயில் வரை தமிழகத்தின் பிரமாண்டமான வரலாற்று கோவில்கள் பஞ்சமே இல்லை. நீங்கள் உங்கள் குடும்பத்தினருடன் தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு சுற்றுலா செல்ல விரும்பினால் எப்படி பிளான் பண்ணுவது, எந்த இடங்களுக்கு செல்ல வேண்டும், என்னென்ன செய்யக் கூடாது என்று நாங்கள் கூறுகிறோம்!

முதலில் கோவில்களை தேர்ந்தெடுக்க வேண்டும்

நீங்கள் எந்த இடத்திற்கு சுற்றுலா செல்ல விரும்புகிறீர்கள் என்று முதலில் தேர்ந்தேடுக்க வேண்டும். எடுத்துக்காட்டாக நீங்கள் காஞ்சி காமாட்சி, ஏகாம்பரேஸ்வரர் மற்றும் வரதராஜர் கோவில்களுக்கு செல்ல விரும்பினால், சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் பிரபல கோவில்களை உங்களது லிஸ்டில் சேர்த்துக் கொள்ளலாம். அதே போல கன்னியாகுமரி செல்லும்போது ராமநாதபுரம், திருச்செந்தூர், தூத்துக்குடி போன்ற இடங்களை சேர்த்து கொள்ளலாம். எந்த இடத்திற்கு செல்லுகிறீர்களோ அதற்கு அருகில் உள்ள பிரபல கோவில்களையும் சேர்த்து கொள்வது புத்திசாலித்தனம் ஆகும்.

temple travel

ஆடைக்குறியீடுகள் இருந்தால் அதனைப் பின்பற்றவும்

இந்தியாவில் உள்ள பல கோவில்கள் மற்றும் ஆன்மீக தளங்களில் பார்வையாளர்கள் அடக்கமாக உடை அணிய வேண்டும் என்று ஆடைக் குறியீடுகள் உள்ளன. இது பொதுவாக தோள்கள் மற்றும் கால்களை மறைக்கும்படியான, குறிப்பாக வெளிப்படையான ஆடைகளை அணிவதைத் தவிர்க்கவும். வசதியான உடைகளை அணிந்துகொள்வது மற்றும் தேவைப்பட்டால் தன்னை மறைப்பதற்கு சால்வை அல்லது தாவணியை எடுத்துச் செல்வது நல்லது.

இந்த ஆன்மீகத் தலங்களுக்குச் செல்ல சிறந்த நேரம் எது

இந்த ஆன்மீக இடங்களுக்குச் செல்வதற்கான சிறந்த நேரம் குறிப்பிட்ட இடத்தைப் பொறுத்து மாறுபடலாம். பொதுவாக, குளிர்கால மாதங்கள் (அக்டோபர் முதல் பிப்ரவரி வரை) இனிமையான வானிலை மற்றும் வருகைக்கு ஏற்றதாக இருக்கும். இருப்பினும், ஒரு பயணத்தைத் திட்டமிடுவதற்கு முன், குறிப்பிட்ட இடத்தின் உள்ளூர் காலநிலை மற்றும் திருவிழா காலெண்டர்களைப் பார்ப்பது நல்லது.

தங்குமிடம் புக் செய்வது எப்படி

ஒவ்வொரு ஊரிலுமே மலிவான தங்குமிடங்கள் முதல் சாத்திரங்கள் வரை நிறைய தமிழ்நாட்டில் உள்ளன. உங்கள் வசதிக்கேற்ப தங்குமிடங்களை முன்கூட்டியே புக் செய்து கொள்ளுங்கள். நீண்ட தூர பயணம் என்றால் பெரும்பாலும் இரவில் பயணம் செய்வது போல பயணத் திட்டத்தை அமைப்பது நல்லது.

temple family travel

வாகனங்கள் தேர்ந்தெடுப்பது

உங்கள் குடும்பத்தினர் மற்றும் உடன் வருபவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றது போல வாகனத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். பெரும்பாலும் பெரிய வாகனத்தை எடுத்து கொள்வது நல்லது. நல்ல அனுபவம் உள்ள டிரைவரை உடன் அழைத்துச் செல்லுங்கள். டிரைவர் தவிர உங்களில் யாரேனும் ஒருவருக்கு டிரைவிங் தெரிந்து வைத்திருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அதே போல இரவில் டிரைவர் வாகனம் ஓட்டும் போது யாரேனும் ஒருவர் அவரிடம் பேச்சுக் கொடுத்த வாறே பயணம் செய்யுங்கள்.

தரமான உணவுகளை உண்ணுங்கள்

நீங்கள் சுற்றுலா கிளம்பும் போதே எந்த ஊர்களுக்கு செல்லுகிறீர்களோ, அந்த ஊர்களில் உள்ள தரமான ஹோட்டல்களை முன் கூட்டியே அறிந்து வைத்திருங்கள். இப்போதெல்லாம் கேஸ் சிலிண்டர், சாப்பாடு செய்யும் பாத்திரங்கள், சமையல் பொருட்களை பெரும்பாலோனோர் எடுத்துச் சென்று சமைத்து சாப்பிடுகின்றனர்.

மருந்து மற்றும் அத்தியாவசிய விஷயங்கள்

பயணத்தில் பெரும்பாலும் தளர்வான காட்டன் உடைகளை அணிய பழகுங்கள். அதே போல தேவையான பெட்ஷீட்கள், உடைகள், மருந்து, காலணிகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்லுங்கள். முக்கியமான ஆவணங்களின் நகலை எடுத்துச் செல்ல வேண்டும். அதிகப்படியான நகைகள் மற்றும் பணத்தை எடுத்துச் செல்ல வேண்டாம்.

இவற்றை எல்லாம் பின்பற்றினால் உங்களது கோவில் சுற்றுலா மிகவும் சுமூகமாக அமையும்.

More News

    Read more about: travel guide temple tamilnadu
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+