Search
  • Follow NativePlanet
Share
» »திருப்பதியில் இலவச ‘சொர்க்கவாசல்’ தரிசன டிக்கெட் பெறுவது எப்படி – இதோ தகவல்கள்!

திருப்பதியில் இலவச ‘சொர்க்கவாசல்’ தரிசன டிக்கெட் பெறுவது எப்படி – இதோ தகவல்கள்!

பூலோக வைகுண்டமாக போற்றப்படும் திருச்சி அரங்கநாதர் கோவிலில் 'மார்கழி வளர்பிறை ஏகாதசி' அன்று சொர்க்க வாசல் திறக்கப்படும் வேலையில் சுவாமி தரிசனம் செய்வது பல புண்ணியங்களை அளிக்கும் என்பது நம்பிக்கை. இதே போல சொர்க்கவாசல் திருப்பதி ஏழுமலையான் கோவிலிலும் உள்ளது, இது 1 நாள் இல்லை மொத்தமாக 1௦ நாட்களுக்க திறந்து இருக்கும். இந்நேரத்தில் சொர்க்க வாசல் வழியாக நீங்கள் பெருமாளை தரிசிக்க செல்லலாம்! இதற்கான இலவச டிக்கெட்டுகளை பெறுவது எப்படி என்று பார்ப்போம்!

திருப்பதியில் வைகுண்ட துவாரம்

வைகுண்ட துவாரம் பிரதான சன்னதியின் இடதுபுறத்தில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இந்த கதவு வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி நாட்களில் மட்டும் அதாவது வருடத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே திறக்கப்படும். இந்த நுழைவாயிலின் மூலம் பிரதான சன்னதிக்குள் நுழைவது மிகவும் மரியாதைக்குரிய மற்றும் மங்களகரமான விஷயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. வைகுண்ட துவாரம் வழியே அந்த வெங்கடேசனை தரிசிப்பது மிகவும் புண்ணியமான விஷயமாகும்.

tirumala

விற்றுத் தீர்ந்த சிறப்பு தரிசன டிக்கெட்டுகள்

திருப்பதி திருமலையில் நடைபெறும் முக்கிய நிகழ்வான வைகுண்ட ஏகாதசி மற்றும் ஆங்கில புத்தாண்டை ஒட்டி ஆன்லைனில் மொத்தமாக வெளியிடப்பட்ட 2,25,000 சிறப்பு டிக்கெட்டுகள் வெறும் 45 நிமிடங்களிலேயே விற்று தீர்ந்து விட்டன. இந்த டிக்கெட்டுகளை நீங்கள் புக் செய்திருந்தால் சொர்க்கவாசல் வழியே சென்று திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வாய்ப்பு கிடைத்து இருக்கும்.

கவலை வேண்டாம் - இலவச தரிசனம் செய்யுங்கள்

எவ்வளவோ முயற்சி செய்தும் உங்களுக்கு இந்த டிக்கெட் கிடைக்கவில்லையா? கவலையே வேண்டாம். உங்களுக்ககாவே இருக்கிறது - இலவச தரிசன டிக்கெட். டிசம்பர் 23 முதல் ஜனவரி 1 வரை நீங்கள் சொர்க்கவாசல் வழியே திருப்பதி பெருமாளை தரிசனம் செய்யலாம். அதற்கான வைகுண்ட ஏகாதசி டிக்கெட்டை நீங்கள் இலவசமாக பெற முடியும்.

வைகுண்ட துவார தரிசனத்திற்கு ஒதுக்கப்பட்ட இலவச டிக்கெட்டுகள்

வரும் டிசம்பர் 22 ஆம் தேதி முதல் கீழ் திருப்பதியில் 9 இடங்களில் அமைக்கப்படவுள்ள 100 கவுண்டர்களில் வரிசையில் நின்று நீங்கள் உங்கள் ஆதார் கார்டை காண்பித்து இந்த இலவச தரிசின டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். இந்த கவுண்டர்களில் ஒரு நாளைக்கு 42,500 டிக்கெட்டுகள் வீதம் 10 நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 4,25,000 இலவச தரிசன டிக்கெட்டுகள் பக்தர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

tirumala vaikunta ekdashi

சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ள TTD தேவஸ்தானம்

கடந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசியில் வழங்கப்பட்டது போலவே டிசம்பர் 22 ஆம் தேதி மதியம் 2 மணி முதல் டிக்கெட்டுகள் கொடுக்கத் தொடங்கி 24 மணி நேரமும் தொடர்ச்சியாக 4,25,000 டிக்கெட்டுகள் தீரும் வரை கொடுக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டில் ஏற்பட்ட கூட்ட நெரிசல், நீண்ட நேரம் காத்திருப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டு அவற்றை தவிர்க்க TTD தேவஸ்தானம் பல சிறப்பான முயற்சிகளை இந்த ஆண்டு எடுத்துள்ளது.

lordbalaji

வைகுண்ட ஏகாதசி இலவச டிக்கெட் வழங்கப்படும் இடங்கள்

1. அலிப்பிரி பேருந்து நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள 'பூதேவி காம்ப்ளக்ஸ்'

2. கீழ் திருப்படி RTC மெயின் பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள 'ஸ்ரீநிவாசம் காம்ப்ளக்ஸ்'

3. திருப்பதி ரயில் நிலையத்திற்கு பின்புறம் உள்ள 'கோவிந்தராஜ சுவாமி 2 மற்றும் 3 ஆவது சத்திரம்'

4. திருப்பதி ரயில் நிலையத்திற்கு எதிரே உள்ள 'விஷ்ணுநிவாசம் காம்ப்ளக்ஸ்'

5. இந்திரா மைதானம்

6. ஜீவகோனா 'Z.P ஜில்லா பரிஷத் உயர்நிலைப்பள்ளி,

7. பைராகிப்பட்டோவில் உள்ள 'ராமாநாயுடு முனிசிபல் உயர்நிலைப்பள்ளி'

8. M.R பள்ளி Z.P உயர்நிலைப்பள்ளி

9. அலிப்பிரி சாலையில் உள்ள 'ராமச்சந்திர புஷ்கரணி'

இந்த இடங்களில் ஏதேனும் ஒன்றுக்கு சென்று உங்களது ஆதார் கார்டு காண்பித்து இலவச டிக்கெட்டை பெற்றுக் கொண்டு வைகுண்ட வாசல் வழியே திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்யுங்கள்!

More News

    Read more about: tirupati tamilnadu
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+