Search
  • Follow NativePlanet
Share
» » இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழ்நாட்டில் வரவிருக்கும் ஸ்லெண்டர் லோரிஸ் சரணாலயம்!

இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழ்நாட்டில் வரவிருக்கும் ஸ்லெண்டர் லோரிஸ் சரணாலயம்!

ஸ்லெண்டர் லோரிஸ் - பெயரே சற்று வித்தியாசமாக இருக்கிறது அல்லவா! பெயர் மட்டுமல்ல பார்ப்பதற்கும் வித்தியாசமாக இருக்கும் விலங்கு தான் இந்த ஸ்லேன்டர் லோரிஸ். இப்போது தமிழ்நாட்டின் கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஸ்லெண்டர் லோரிஸ் விலங்குகளுக்காக பிரத்யேகமாக ஒரு சரணாலயம் நிறுவப்பட இருக்கிறது. அதனைப் பற்றிய விரிவான தகவல்கள் இதோ!

அழிந்துவரும் பட்டியலில் இருக்கும் ஸ்லெண்டர் லோரிஸ்

அழிந்துவரும் பட்டியலில் இருக்கும் ஸ்லெண்டர் லோரிஸ்

இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IUCN) படி, ஸ்லெண்டர் லோரிஸ் அழிந்துவரும் உயிரினமாக பட்டியலிடப்பட்டுள்ளது. விலங்குகளின் உயிர்வாழ்வு அதன் வாழ்விட முன்னேற்றம், பாதுகாப்பு முயற்சிகள் மற்றும் அச்சுறுத்தல்களைத் தணித்தல் ஆகியவற்றைப் பொறுத்து இந்த பட்டியலில் உயிரினங்கள் பட்டியலிடப்படும்.

வித்தியாசமான பழக்க வழக்கம் கொண்ட ஸ்லெண்டர் லோரிஸ்

வித்தியாசமான பழக்க வழக்கம் கொண்ட ஸ்லெண்டர் லோரிஸ்

ஸ்லெண்டர் லோரிஸ் ஒரு சிறிய இரவு நேர பாலூட்டியாகும், இது தனது வாழ்நாளின் பெரும்பகுதியை மரங்களில் செலவிடுகிறது. அவை விவசாய பயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் விவசாயிகளுக்கு உதவும் பூச்சிகளின் வேட்டையாடி உண்ணுகின்றன. இந்த இனங்கள் பரந்த அளவிலான சூழலியல் பாத்திரங்களையும், நிலப்பரப்பு சுற்றுச்சூழல் அமைப்பில் முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது.

இந்தியாவிலேயே முதல் சரணாலயம் நம் தமிழகத்தில்

அழிந்து வரும் ஸ்லெண்டர் லோரிஸ்களுக்கான இந்தியாவின் முதல் சரணாலயம் தமிழகத்தின் கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் அமைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்வீட்டில், "ஸ்லெண்டர் லோரிஸின் பாதுகாப்பில் இந்த சரணாலயம் முக்கிய பங்கு வகிக்கும், மேலும் தமிழகத்தின் பாதுகாப்பு முயற்சிகளில் மற்றொரு மைல்கல்லாக இருக்கும்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் சரணாலயம்

கரூர் மற்றும் திண்டுக்கல் வனப்பகுதியில் உள்ள 11,806 ஹெக்டேர் நிலங்கள் இதற்காக இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அழிந்து வரும் ஸ்லெண்டர் லோரிஸ்களுக்கான முதல் சரணாலயத்தை அமைக்கும் பெருமை தமிழகத்தை சேர்ந்துள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை பாலூட்டிகளின் வாழ்விடத்தைப் பாதுகாப்பதோடு, அதன் வேட்டையாடுதலைக் குறைக்கவும் உதவும். மேலும் இந்த அரிய விலங்கைக் காணஸ் சுற்றுலாப்பயணிகளும் குழந்தைகளும் ஆர்வம் காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read more about: dindigul tamil nadu
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X