Search
  • Follow NativePlanet
Share
» »வெறும் அபராதம் விதித்தே ரூ.11,456 கோடியை வருமானமாக ஈட்டிய இந்திய ரயில்வே!

வெறும் அபராதம் விதித்தே ரூ.11,456 கோடியை வருமானமாக ஈட்டிய இந்திய ரயில்வே!

நீங்கள் அடிக்கடி ரயில்களில் பயணிப்பவராக இருந்தால், ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் விதிகள் மீறுபவர்களை அதிகாரிகள் பிடித்து அபராதம் விதிப்பதை பார்த்திருப்பீர்கள்! இந்திய ரயில்வேயின் விதிகளில் சிலவற்றை மீறுவது உங்களுக்கு கடுமையான எச்சரிக்கையை தரக்கூடும், சில அபராதம் மற்றும் சிறைத்தண்டனை கூட ஏற்படலாம். அப்படி அபராதம் விதித்தே ரூ. 11,456 கோடி வருமானத்தை ஈட்டியுள்ளது!

ரயில்வே விதிமீறல்களால் விதிக்கப்படும் அபராதம்

நீங்கள் இந்திய இரயில்வேயில் அடிக்கடி பயணிப்பவராக இருந்தால், ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் விதிகள் மற்றும் அறிவிப்புகளைப் புறக்கணிக்கும் ஒரு சிலரையாவது நீங்கள் கட்டாயம் பார்த்திருப்பீர்கள். ரயில் தண்டவாளத்தில் குப்பை கொட்டுவது, தண்டவாளங்களை கடப்பது முதல், டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வது ஆகியவை தண்டனைக்குரிய குற்றங்களாகும். ஆனால் சில விதிகளை மீறுவது உங்களுக்கு கடுமையான எச்சரிக்கையை மட்டுமே தரக்கூடும், சில அபராதம் மற்றும் சிறைத்தண்டனை கூட ஏற்படலாம்.

1

பத்து ஆண்டுகளில் எகிறிய அபாரதத் தொகை

முந்தைய பத்து நிதியாண்டுகளில் (FY), இந்திய ரயில்வே (IR) பயணச்சீட்டு இல்லாமல் அல்லது குறைபாடுள்ள டிக்கெட்டுடன் UBL (முன்பதிவு செய்யப்படாத லக்கேஜ்) எடுத்துச் சென்ற பயணிகளிடமிருந்து ரூ.11,456 கோடிக்கு மேல் அபராதம் வசூலித்துள்ளது.

வருடாந்திர அளவில் உயரும் விதிமீறல்களின் எண்ணிக்கை

இந்திய ரயில்வேயால் குறிப்பிடப்பட்ட குற்றங்களுக்காக வசூலிக்கப்படும் அபராதத் தொகை 2014 மற்றும் 2023 ஆண்டுகளுக்கு இடையில் மூன்று மடங்குக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது, இது 2014 ஆம் ஆண்டில் ரூ.688.11 கோடியாக இருந்த தொகை சமீபத்திய நிதியாண்டில் ரூ.2,260.05 கோடியாக உயர்ந்துள்ளது. அதே காலக்கட்டத்தில் 26.03 கோடி பயணிகள் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்துள்ளனர் என்றும், 2020 ஆம் ஆண்டில் 3.5 கோடி பயணிகள் UBL அல்லது முறையற்ற பயணச்சீட்டு பெற்று பயணம் செய்ததாக இந்திய ரயில்வே கூறுகிறது.

2

இதை செய்தால் கண்டிப்பாக அபராதம் தான்

தகுந்த பயணச்சீட்டு இல்லாமல் அல்லது மோசடியாகப் பயணம் செய்யும் ஒரு நபருக்கு அதிகபட்சமாக ஆறு மாத சிறைத் தண்டனையும் ரூ.1,000 அபராதமும் அல்லது சில சமயங்களில் இரண்டும் விதிக்கப்படும். மறுபுறம், ரயில்வே சட்டத்தின் பிரிவு 138 ஐ மீறுவது மற்றும் பொருத்தமான பாஸ் அல்லது டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வது நிதி அபராதம் ஏற்படலாம். இதில் பயணித்த தூரத்திற்கான டிக்கெட்டின் விலை மற்றும் குறைந்தபட்சம் ரூ.250 அபராதம் விதிக்கப்படும்.

மண்டல வாரியாக கொட்டிய நிதி

மண்டல வாரியாக, கடந்த 10 நிதியாண்டுகளில் அதிகபட்சமாக ரூ.1,506.09 கோடி அபராதத் தொகையை மும்பையை தலைமையிடமாகக் கொண்ட மத்திய ரயில்வே வசூலித்துள்ளது. மத்திய ரயில்வேயைத் தொடர்ந்து வடக்கு ரயில்வே ரூ.1,489.42 கோடி அபராதத் தொகையும், தெற்கு-மத்திய ரயில்வே ரூ.1,176.57 கோடி அபராதத் தொகையும், மேற்கு ரயில்வே ரூ.1,034.17 கோடி அபராதத் தொகையும் மற்றும் கிழக்கு மத்திய இரயில்வே ரூ. 974.85 கோடி அபராதத் தொகையும் கிழக்கு கடற்கரை ரயில்வே ரூ.266.48 கோடி அபராதத் தொகையும் ஈட்டியுள்ளது. கவுகாத்தியை தலைமையிடமாகக் கொண்ட வடகிழக்கு எல்லை ரயில்வே, மிகக் குறைந்த அபராத தொகையாக ரூ. 59 லட்சம் அபராதத் தொகையை ஈட்டியுள்ளது.

ஆக மொத்தம், இந்திய ரயில்வே கடந்த 10 ஆண்டுகளில் மொத்தமாக ரூ.11,456 கோடி ரூபாயை அபராதம் விதித்தே சம்பாதித்துள்ளது.

More News

    Read more about: irctc indian railways
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+