Search
  • Follow NativePlanet
Share
» »ஜெனரல் கிளாஸ் பயணிகளுக்காக வெறும் ரூ.20 க்கு சூப்பரான உணவு வழங்கும் IRCTC!

ஜெனரல் கிளாஸ் பயணிகளுக்காக வெறும் ரூ.20 க்கு சூப்பரான உணவு வழங்கும் IRCTC!

ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மலிவான போக்குவரத்துடன் குறைந்த விலையில் உணவு வழங்க இந்திய ரயில்வே IRCTCயுடன் இணைந்து ஒரு முக்கிய முடிவு செய்துள்ளது. அதன்படி பொது வகுப்பு பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்காக ஒவ்வொரு எகானமி உணவுக்கான விலையும் ரூ.20 ஆகக் குறைக்கப்பட்டுள்ளதுடன், தின்பண்டங்கள் ரூ.50க்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1

பொது பெட்டி பயணிகளுக்காக ரயில்வே எடுத்து முடிவு

இந்திய ரயில்வே பொதுப் பெட்டியில் பயணிக்கும் பயணிகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மலிவு விலையில் உணவு மற்றும் பேக்கேஜ் செய்யப்பட்ட தண்ணீரை வழங்க முடிவு செய்துள்ளது. ரயில்வே வாரியம் பிறப்பித்த உத்தரவின்படி, இந்த உணவுகளை வழங்கும் கவுன்டர்கள் பொதுப் பெட்டிகளுடன் இணைந்த பிளாட்பாரங்களில் வைக்கப்படும்.

சிரமப்படும் ஜெனரல் கோச் பயணிகள்

ஜெனரல் அதாவது பொது பெட்டிகளில் பயணிக்கும் பயணிகள் இரண்டாம் வகுப்பு முன்பதிவு செய்யப்படாத பயணிகளை குறிக்கிறது. பொதுவாக மெயில்/எக்ஸ்பிரஸ் ரயில்கள் உட்பட ஒவ்வொரு ரயிலிலும் குறைந்தபட்சம் இரண்டு ஜெனரல் பெட்டிகள் இருக்கும். ஒன்று இன்ஜினுக்கு அருகில் மற்றும் ரயிலின் முடிவில் என இரண்டு பெட்டிகள் இருக்கும். கவுண்டரில் இருந்து வாங்கப்பட்ட பொது/முன்பதிவு செய்யப்படாத டிக்கெட் உள்ள எவரும் அந்த பெட்டிகளில் பயணிக்கலாம். இந்த பெட்டிகளில் கூட்டம் மிகவும் அதிகமாக இருப்பதனால் வெளியே இறங்கி உணவு வாங்க மிகவும் சிரமப்படுகின்றனர்.

ரூ.20க்கு சூப்பரான உணவு

ஜெனரல் பெட்டிகளுக்கு அருகிலுள்ள நடைமேடையில் வைக்கப்படும் கவுண்டர்கள் மூலம் சிக்கனமான உணவு மற்றும் மலிவு விலையில் பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீரை வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ரயில்வே வாரியம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. ஜெனரல் கோச் பயணிகளுக்கு ஆரோக்கியமான மற்றும் சுவையான உணவு குறைந்த விலையில் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, அவர்கள் பொதுப் பெட்டி பெட்டிக்கு அருகில் உள்ள பிளாட்ஃபார்மில் ரூ.20க்கு உணவை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இரண்டு வகையான உணவு

அதன்படி உணவுகள் இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. வகை ஒன்றில் ஏழு பூரிகள் உருளைக்கிழங்கு ரூ.20க்கு விற்கப்படும். இரண்டாவது வகை உணவில் பயணிகளுக்கு சாதம், ராஜ்மா, சோலே, கிச்சடி குல்சே, பத்தூர், பாவ்-பாஜி மற்றும் மசாலா தோசை ஆகியவை ரூ.50க்கு விற்கப்படுகின்றன.

பொதுப் பெட்டிகளுக்கு இணையான நடைமேடைகளில் உணவுகள் விற்கப்படும்

பொதுப் பெட்டி பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், நியாயமான உணவு மற்றும் பாட்டில் தண்ணீரை வழங்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. ரயில்வே வாரியத்தின் உத்தரவுப்படி, இந்த உணவுகளை வழங்கும் கவுண்டர்கள் பொதுப் பெட்டிகளுக்கு இணையான நடைமேடைகளில் வைக்கப்படும்.

குறையேதும் இருந்தால் கட்டாயம் புகார் அளிக்கலாம்

அனைத்து ஸ்டால்கள் மற்றும் பேண்ட்ரி கார்கள் ஒரு லிட்டர் ரயில் நீர் தண்ணீர் பாட்டில்களை அங்கீகரிக்கப்பட்ட ரூ.15க்கு மட்டுமே விற்க வேண்டும் என்று IRCTC அறிவித்துள்ளது. அதிக கட்டணம் வசூலித்தால், எந்த நிலையத்திலும் அல்லது ஆன்லைன் மூலமாகவும் புகார் அளிக்கலாம்.

கூடிய விரைவில் அணைத்து நிலையங்களிலும் கவுண்டர்கள்

அறிக்கையின்படி, இந்த கவுண்டர்களை எங்கு வைக்க வேண்டும் என்பதை ரயில்வே மண்டலங்கள் தேர்ந்தெடுக்கும். இந்த சேவை தற்போது 51 நிலையங்களில் செயலில் உள்ளது, மேலும் கடந்த வார நிலவரப்படி, 13 கூடுதல் நிலையங்களிலும் இது விரைவில் அறிமுகப்படுத்தப்படும், அதோடு படிப்படியாக அனைத்து பிரதான ரயில் நிலையங்களிலும் இந்த கவுண்டர்கள் வைக்கப்பட்டு உணவுகள் விற்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

More News

    Read more about: irctc indian railways
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+