Search
  • Follow NativePlanet
Share
» »மூத்த குடிமக்களுக்கான ரயில் டிக்கெட்டில் 50 சதவீத சலுகை – இப்படி புக் பண்ணுங்கள்!

மூத்த குடிமக்களுக்கான ரயில் டிக்கெட்டில் 50 சதவீத சலுகை – இப்படி புக் பண்ணுங்கள்!

ரயில்களில் பயணிக்கும் மூத்த குடிமக்களுக்கு ஒரு நற்செய்தி. இந்திய ரயில்களில் பயணிக்கும் மூத்த குடிமக்களுக்கு கட்டணத்தில் 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்பட்டு வந்தது. கொரோனா தொற்றால் பெறும் நஷ்டத்தை சந்தித்த இந்திய ரயில்வே இரண்டு வருடங்களுக்கு முன்னர் மூத்த குடிமக்களுக்கான இந்த சலுகையை தற்காலிகமாக நிறுத்தியது. ஆனால் இந்த சேவை இப்போது சில மாறுதல்களுடன் மறுபடியும் துவங்கவிருக்கிறது. உங்கள் பெற்றோர்களுக்கும், உங்கள் வீட்டு பெரியவர்களுக்கும் ரயில் டிக்கெட் புக் பண்ணும்போது இந்த ஆபரை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்!

கொரோனவால் நிறுத்தப்பட்ட மூத்த குடிமக்களுக்கான சலுகைகள்

கொரோனவால் நிறுத்தப்பட்ட மூத்த குடிமக்களுக்கான சலுகைகள்

2020 இல் கொரோனா வைரஸ் தொற்றுநோய் வெடிப்பதற்கு முன்பு, 58 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஆண்களுக்கு மூத்த குடிமக்களுக்கு சலுகைகள் இருந்தன. கொரானா தொற்றுக்கு முந்தைய காலங்களில் மூத்த குடிமக்களுக்குக் கிடைத்த சலுகையை குறைந்தபட்சம் ஸ்லீப்பர் வகுப்பு மற்றும் III ஏசியில் மதிப்பாய்வு செய்து பரிசீலிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக பயணிகள் குரல் கொடுத்து வந்தனர்.

சலுகைகளை திரும்ப கொடுக்க முயற்சி

சலுகைகளை திரும்ப கொடுக்க முயற்சி

ரயில்வேயின் திட்டத்தின்படி, அனைத்து வகுப்புகளிலும் டிக்கெட் விலையில் பெண் பயணிகளுக்கு 50 சதவீத தள்ளுபடியும், ஆண்களுக்கு 40 சதவீத சலுகையும் அளிக்கப்பட்டது. தொற்றுநோய் வெடித்த பிறகு, இந்திய ரயில்வே மானிய விலைகளை திரும்பப் பெற்றது. யில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்ட பின்னர் தேசிய டிரான்ஸ்போர்ட்டரால் இடைநிறுத்தப்பட்ட சில வகை பயணங்களில் மூத்த குடிமக்கள் சலுகையையாவது மீட்டெடுக்க இந்திய ரயில்வே முயற்சி செய்து வருகிறது.

ஏற்கனவே 55 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கிறது

ஏற்கனவே 55 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கிறது

எதிர்க்கட்சிகள் மற்றும் பயணிகளின் கோரிக்கையை ஏற்று, ரயில்வே துறை ஏற்கனவே பயணிகள் டிக்கெட்டுகளுக்கு 55 சதவீதம் வரை மானியம் வழங்கி வருவதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்திருந்தார். இப்போது ரயில்வே வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2022-23 ஆம் ஆண்டில், ரயில்வேக்கு இதுவரை ஆண்டு அடிப்படையில் ரூ.41,000 கோடி கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது. நடப்பு நிதியாண்டில் இதுவரை ரூ.1,91,162 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது.

சிறு மாறுதல்களுடன் மீண்டும் வரும் சலுகைகள்

சிறு மாறுதல்களுடன் மீண்டும் வரும் சலுகைகள்

இந்திய ரயில்வே வாரியம் மூத்த குடிமக்களுக்கான வயது வரம்பை மாற்றவும், மேலும் சில வகை டிக்கெட்டுகளுக்கு மட்டுமே சலுகையை கட்டுப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. முன்னதாக, அனைத்து வகுப்புகளிலும் உள்ள மூத்த குடிமக்களுக்கு இந்தச் சலுகை இருந்தது. பொது மற்றும் ஸ்லீப்பர் வகுப்புகளுக்கு 70 வயது அல்லது அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு சலுகை வழங்க ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கான மானியத்தைத் தக்க வைத்துக் கொண்டு, இந்தச் சலுகைகளின் செலவை ஈடுகட்ட யோசனை இருப்பதாக ரயில்வே தெரிவித்துள்ளது. கூடிய விரைவில் இந்த சலுகைகள் மீண்டும் பயனர்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்க்கப்படுகிறது. இனி நீங்கள் உங்கள் வீட்டு பெரியவர்களுக்கு டிக்கெட் புக் செய்யும் போது இந்த ஆபரை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்!

More News

    Read more about: irctc indian railways
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+