Search
  • Follow NativePlanet
Share
» »என்னப்பா கூட்டத்தையே காணோம் – வந்தே பாரத் ரயில்களில் டிக்கெட் கட்டணத்தை குறைக்க முடிவு!

என்னப்பா கூட்டத்தையே காணோம் – வந்தே பாரத் ரயில்களில் டிக்கெட் கட்டணத்தை குறைக்க முடிவு!

இந்தியாவிலேயே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் நீண்ட தூரத்தை குறைந்த நேரத்தில் கடப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால், வந்தே பாரத் ரயில்கள் இயங்கும் சில வழித்தடங்களில் குறைந்த ஆக்கிரமிப்பு கொண்ட சில குறுகிய தூர வந்தே பாரத் ரயில்களின் கட்டணத்தை குறைக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. எந்தெந்த வழித்தடங்களில் இயங்கும் ரயில்களின் கட்டணம் குறைகிறது தெரியுமா?

1

வந்தே பாரத் ரயில் கட்டணத்தை குறைக்க முடிவு

இந்திய ரயில்வே ஒரு சில குறுகிய தூர வழித்தடங்களில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் கட்டணத்தை குறைக்க பரிசீலித்து வருகிறது. இது ரயில்களில் குறைந்த ஆக்கிரமிப்பு விகிதங்களை பதிவு செய்த பிறகு, விலைகளைக் குறைப்பதற்கும், அவற்றை மக்களுக்கு மிகவும் சாத்தியமானதாக மாற்றுவதற்கும் இந்திய ரயில்வே முடிவெடுத்துள்ளது.

டிக்கெட் குறைக்கப்படும் வழித்தடங்கள்

இந்த அரை-அதிவேக நீல-வெள்ளை ரயிலில் அதிக பயணிகளையும் சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்க உதவும் கட்டணத்தைக் குறைக்க ரயில்வே இந்த முடிவைப் பற்றி யோசித்து வருகிறது. குறிப்பிட்ட வந்தே பாரத் வழித்தடங்களில் கட்டணத்தை குறைக்க இந்திய ரயில்வே பரிசீலித்து வருகிறது. இதில் இந்தூர்-போபால், நாக்பூர்-பிலாஸ்பூர், போபால்-ஜபல்பூர் மற்றும் இன்னும் சில அடங்கும்.

இந்தூர்-போபால் வந்தே பாரத்

ஜூன் மாத இறுதி தரவுகளின்படி, இந்தூர்-போபால் வந்தே பாரத் பயணம் 21 சதவீத ஆக்கிரமிப்புகளை மட்டுமே கண்டுள்ளது. போபால்-இந்தூர், வந்தே பாரத் 29 சதவீத மக்களை மட்டுமே பதிவு செய்துள்ளது. இரண்டு நகரங்களுக்கிடையேயான தூரத்தை வந்தே பாரத் ரயில்கள் இரண்டே மணி நேரத்தில் கடக்கிறது. இதில் ஏசி நாற்காலி கார் டிக்கெட்டுக்கு ரூ.950 மற்றும் எக்ஸிகியூட்டிவ் நாற்காலி கார் டிக்கெட்டுக்கு ரூ.1,525 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

2

நாக்பூர்-பிலாஸ்பூர் வந்தே பாரத்

நாக்பூர்-பிலாஸ்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் கட்டணம் மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ள மற்றொரு இரயில் சராசரியாக 55 சதவிகிதம் பயணிக்கின்றது. நாக்பூர்-பிலாஸ்பூர் வந்தே பாரத் விரைவு ரயிலில் எக்சிகியூட்டிவ் வகுப்பிற்கான கட்டணம் ரூ.2,045 ஆகவும், நாற்காலி காரின் கட்டணம் ரூ.1,075 ஆகவும் உள்ளது. இந்த ரயிலில் ஆட்கள் குறைவாக இருந்ததால் மே மாதம் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டது.

குறைக்கப்படும் கட்டணங்கள்

ரயில்வேயின் ஆய்வுக்குப் பிறகு, அதிகமான மக்கள் ரயில் சேவையைப் பயன்படுத்துவதை உறுதிசெய்ய, இந்த வந்தே பாரத் சேவையின் கட்டணம் கணிசமாகக் குறைக்கப்படலாம் என்று அறிக்கை கூறுகிறது. இருப்பினும் சாமானிய மக்களுக்கு வந்தே பாரத் ரயில்களின் டிக்கெட் விலை சற்று கூடுதலாகவே இருப்பதால், கட்டணம் குறைந்தால் நன்றாக இருக்குமென்று பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

3

தமிழகத்தில் வந்தே பாரத் ரயில்கள்

தமிழ்நாட்டில் ஏற்கனவே சென்னை சென்ட்ரலில் இருந்து மைசூருக்கும், கோயம்புத்தூருக்கும் ஏற்கனவே வந்தே பாரத் ரயில்கள் இயங்குகின்றன. சென்னையிலிருந்து மைசூர் செல்லும் வந்தே பாரத் ரயிலில் எக்ஸிகியூட்டிவ் வகுப்பு கட்டணம் ரூ.2310 ஆகவும், ஏசி நாற்காலிக்கான கட்டணம் ரூ.1215 ஆகவும் வசூலிக்கப்படுகிறது. சென்னையிலிருந்து கோவை செல்லும் வந்தே பாரத் ரயிலில் எக்ஸிகியூட்டிவ் வகுப்பு கட்டணம் ரூ.1880 ஆகவும், ஏசி நாற்காலிக்கான கட்டணம் ரூ. 921 வசூலிக்கப்படுகிறது. கூடிய விரைவில் சென்னையிலிருந்து திருப்பதிக்கும் வந்தே பாரத் ரயில் சேவை துவங்கப்படவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முழு ஆக்கிரமிப்புடன் இயங்கும் ரயில்கள்

இதுவரை, 46 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவைகள் நாட்டின் அனைத்து ரயில்-மின்மயமாக்கப்பட்ட மாநிலங்களுக்கும் சென்றடைந்துள்ளன. காசர்கோடு முதல் திருவனந்தபுரம் ரயில் (183 சதவீதம்), திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரை வந்தே பாரத் ரயில் (176 சதவீதம்), காந்திநகர்-மும்பை சென்ட்ரல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (134 சதவீதம்) ஆகியவை அதிக பயணிகளைக் கொண்ட வந்தே பாரத் ரயில்களில் அடங்கும். ஒரு சிலவற்றைத் தவிர, பெரும்பாலான அரை அதிவேக ரயில்கள் முழு ஆக்கிரமிப்புடன் இயங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதைப்பற்றிய உங்களுடைய கருத்து என்ன? தமிழக வந்தே பாரத் ரயிலிலும் கட்டணம் குறைந்தால் நன்றாக இருக்குமென்று நினைக்கிறீர்களா

More News

    Read more about: irctc indian railways tamilnadu
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+