Search
  • Follow NativePlanet
Share
» »யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களின் பட்டியலில் இடம் பெறப் போகும் புதுச்சேரி!

யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களின் பட்டியலில் இடம் பெறப் போகும் புதுச்சேரி!

புதுவையில் அமைந்துள்ள இந்திய தேசிய கலை மற்றும் கலாச்சார பாரம்பரிய அறக்கட்டளை (INTACH) யுனெஸ்கோ உலக பாரம்பரிய நகரங்களின் தற்காலிக பட்டியலில் புதுச்சேரியை சேர்க்க அதன் முன்மொழிவு ஆவணத்துடன் தயாராக உள்ளது. ஏற்கனவே அதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்ட நிலையில் INTACH இன் இந்த முன்மொழிவு ஆவணத்தின் மூலம் புதுச்சேரி யுனெஸ்கோ உலக பாரம்பரிய நகரங்களின் பட்டியலில் இடம் பெற தயாராகி விட்டது என்றே தான் சொல்ல வேண்டும்!

புதுச்சேரி பாதுக்கப்படவேண்டியது அவசியம்

முழு நேரமும் இளசுகள் கூட்டத்தினால் நிரம்பி வழியும் புதுச்சேரி விரைவில் உலக பாரம்பரிய தளத்தில் இடம் பெற போகிறது என்றால் நம் அனைவர்க்கும் வியப்பாக இருக்கிறது தானே! ஆம்! புதுச்சேரி யூனியன் பிரதேசம் அந்த மதிப்புமிக்க பட்டியலில் இடம் பெறுவதற்கான நோக்கில் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. பழைய பிரெஞ்சு காலனியாக இருந்த புதுச்சேரி தமிழ் மற்றும் காலனித்துவ சாரத்தின் கண்கவர் கலவையாகும். உலக பாரம்பரிய நகரத்தின் குறிச்சொல்லைப் பெற, இந்த இரண்டும் ஒரே நேரத்தில் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம்!

1

யுனெஸ்கோவின் பாரம்பரிய தளத்தில் இடம்பெறுவது எப்படி?

ஒரு நகரத்தை பாரம்பரிய நகரமாக மாற்றுவது எது? எந்த நகரமும் பாரம்பரிய நகரமாக மாற முடியுமா? மற்ற நகரங்களில் இருந்து பாரம்பரிய நகரம் எப்படி வேறுபடுகிறது? என உங்களுக்குள் ஏகப்பட்ட கேள்விகள் இருக்கலாம். யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய நகரத்தின் குறிச்சொல்லைப் பெறுவதற்கு நினைவுச்சின்னங்கள் மற்றும் இடங்களின் வளர்ச்சி மட்டுமே காரணம் அல்ல. இதற்காக, முழு நகரமும் அதில் உள்ள அனைத்தும் உள்ளூர் மக்களின் அடையாளத்திற்கு இன்றியமையாத அதன் செழுமையான பாரம்பரியம் மற்றும் வரலாறு பராமரிக்கப்படும் வகையில் அதனை பேணி காக்க வேண்டும்.

இந்தியாவில் உள்ள யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்கள்

யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களின் பட்டியலில் இந்தியாவிலிருந்து 43 இடங்கள் இடம் பெற்றுள்ளன. முதன் முதலில் ஆக்ரா கோட்டை மற்றும் அஜந்தா எல்லோரா குகைகள் 1983 இல் இந்தப் பட்டியலில் இடம் பெற்றன. தாஜ்மஹால், கோனார்க் சூரியன் கோவில், மகாபலிபுரம் நினைவுச்சின்னங்கள், ஹம்பி, கஜுராஹோ, பதேபூர் சிக்ரி, கோவாவில் உள்ள தேவாலயங்கள், பட்டாடக்கள், தமிழ்நாட்டில் உள்ள சோழர் கோவில்கள், எலிபெண்டா குகைகள், குதூப்மினார், நீலகிரி மலை ரயில், சாஞ்சி ஸ்தூபி உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து 43 இடங்கள் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இப்போது இந்த பட்டியலில் புதுச்சேரியும் இடம் பெற்றுள்ளது.

புதுச்சேரியில் கண்டெடுக்கப்பட்ட 114 பாரம்பரிய கட்டிடங்கள்

புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பதில் பெரும் உந்துதலைக் கொடுக்கும் வகையில், புதுச்சேரி அரசு, பவுல்வர்டில் உள்ள பிரெஞ்சு மற்றும் தமிழ் குடியிருப்புகளில் உள்ள 114 கட்டிடங்களை பாதுகாக்கப்பட்ட பாரம்பரியக் கட்டிடங்களாக அறிவித்துள்ளது. மாநில அளவிலான பாரம்பரிய பாதுகாப்பு மற்றும் ஆலோசனைக் குழுவின் (SLHCAC) பரிந்துரைகளின் அடிப்படையில் அவை பாரம்பரிய கட்டமைப்புகளாக அறிவிக்கப்பட்டன.

INTACH இன் முயற்சி

INTACH இன் புதுச்சேரி பிரிவின் இணை ஒருங்கிணைப்பாளர் அசோக் பாண்டா கூறுகையில், "புதுச்சேரி ஏற்கனவே இந்த முயற்சியில் மூன்று மைல்கற்களை எட்டியதன் மூலம் அந்தஸ்தை அடைய ஒரு பாய்ச்சலை எடுத்துள்ளது. பாரம்பரிய இடங்கள் மற்றும் பாரம்பரிய வளாகங்களைப் பாதுகாப்பதற்கான விதிமுறைகளை அரசாங்கம் அறிவித்துள்ளது. இது மாநில அளவிலான பாரம்பரிய பாதுகாப்புக் குழுவையும் அமைத்துள்ளது மற்றும் 118 தனியார் மற்றும் 13 மத கட்டிடங்களின் இரண்டாவது பட்டியலை பட்டியலிடப்பட்ட பாரம்பரிய கட்டிடங்களாக அறிவிக்க முன்மொழிந்துள்ளது' என்று கூறினார்

கூடிய விரைவில் உலக பாரம்பரிய தளத்தில் இணையும் புதுச்சேரி

புதுச்சேரியை உலக பாரம்பரிய நகரமாக யுனெஸ்கோ பட்டியலிடுவதற்கான ஆவணத்தைத் தயாரிக்க PPA மற்றும் INTACH அடுத்ததாக வேலை செய்யும். இந்தியாவில் தற்போது அகமதாபாத் மற்றும் ஜெய்ப்பூர் மட்டுமே உலக பாரம்பரிய நகரங்களாக ஐக்கிய நாடுகள் சபையால் பட்டியலிடப்பட்டுள்ளன. பட்டியலிடப்பட்ட பாரம்பரிய கட்டிடங்களைப் பாதுகாப்பது மட்டுமின்றி, சுற்றுப்புறத்தில் உள்ள மற்ற பகுதிகளுக்கும் முறையான உள்கட்டமைப்பு மற்றும் வெளிச்சம் மற்றும் தெருக் காட்சிகளுக்கு இசைவாக அடையாளங்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

More News

    Read more about: puducherry
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+