Search
  • Follow NativePlanet
Share
» »உலகின் மிக நீளமான நடைமேடை - இந்திய ரயில்வே பற்றி நாம் அறிந்திராத ருசிகர தகவல்கள்!

உலகின் மிக நீளமான நடைமேடை - இந்திய ரயில்வே பற்றி நாம் அறிந்திராத ருசிகர தகவல்கள்!

நம் அனைவர்க்குமே ரயில் பயணங்கள் என்றால் மிகவும் பிடிக்கும்! மலிவான வசதியான பயணத்தை வழங்குவதோடு நம் அனைவரின் மனதிற்கும் நெருக்கமாக இருப்பது ரயில் பயணம் தான். தினமும் 1.3 மில்லியனுக்கும் அதிகமான IRCTC ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றன என்பதையும், ஒவ்வொரு நொடியும் ஆயிரக்கணக்கான பயணிகள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு ரயிலில் பயணம் செய்கின்றனர். நம் வாழ்வின் ஒரு அங்கமாக இருக்கும் ரயில்வே பற்றி நமக்கு தெரியாத பல சுவாரஸ்யமான விஷயங்கள் இதோ!

சுதந்திரத்திற்கு முன்பே துவங்கப்பட்ட ரயில் சேவை

இந்திய ரயில்வே 1853 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி நீண்ட காலத்திற்கு முன்பே நடைமுறைக்கு வந்தது. அதன் முதல் பயணிகள் ரயில் மும்பையின் போரி பந்தர் முதல் தானே வரை 34 கிலோமீட்டர் தூரம் ஓடியது. சாஹிப், சுல்தான் மற்றும் சிந்து என்ற மூன்று இன்ஜின்களால் இந்த ரயில் இயக்கப்பட்டது. ரயிலில் 30 வேகன்கள் இருந்தன. இப்போது இந்திய ரயில்வே தன்னுடைய 169 ஆவது வயதில் உள்ளது.

1

உலகின் 4வது பெரிய ரயில் நெட்வொர்க்

68 ஆயிரம் கிலோமீட்டர் ரயில் பாதையுடன் இந்திய ரயில்வே உலகின் 4வது பெரிய ரயில்வே நெட்வொர்க் ஆக உள்ளது, அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யாவுக்கு அடுத்தப்படியான இடத்தில் இந்தியா உள்ளது. தற்போதைய நிலவரப்படி, இது 45 ஆயிரம் கிலோமீட்டருக்கும் அதிகமான மின்மயமாக்கப்பட்ட ரயில் நெட்வொர்க்கைக் கொண்டுள்ளது.

உலகின் மிக நீளமான நடைமேடை

SSS ஹூப்பள்ளி சந்திப்பு என்று அழைக்கப்படும் ஸ்ரீ சித்தரூத சுவாமிஜி ஹுப்பள்ளி சந்திப்பு கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் உள்ள ஒரு ரயில் சந்திப்பு நிலையம் ஆகும். ஹூப்ளி சந்திப்பின் பிளாட்ஃபார்ம் எண் 11,505 மீட்டர் நீளம் கொண்டது, இது தான் உலகிலேயே மிக நீளமான ரயில்வே பிளாட்ஃபார்ம் ஆகும்.

2

இந்திய ரயில்வேக்கு சொந்த சின்னம்

ரயில்வேயின் 150வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 2002 ஆம் ஆண்டு நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன் இந்திய ரயில்வேக்கு ஒரு சொந்த சின்னத்தை உருவாக்கியது. போலு என்ற யானை, ரயில்வே காவலராக உடையணிந்து உருவாக்கப்பட்டது இந்த டிசைன் இருக்கும். மகிழ்ச்சி, நெறிமுறை, பொறுப்பு, நேர்மறை ஆகியவற்றை இந்த போலு குறிக்கிறது.

ஒரே இடத்தில் இரண்டு ஸ்டேஷன்கள்

ஒரே இடத்தில் இரண்டு ஸ்டேஷன்கள் எப்படி இருக்க முடியும் என்று யோசிக்கிறீர்களா? ஆனால் அது உண்மை தான், அகமதுநகர், ஸ்ரீராம்பூர் மற்றும் பேலாபூர் நிலையங்கள் ஒரே இடத்தில் ஆனால் ரயில் பாதையின் எதிர் பக்கங்களில் அமைந்துள்ளன.

உலகின் மிக உயரமான ரயில் பாலம்

செனாப் ஆற்றின் மீது எஃகு மற்றும் கான்கிரீட் மூலம் உலகின் மிக உயரமான ரயில் வளைவுப் பாலத்தை இந்திய ரயில்வே கட்டியுள்ளது. இது ஆற்றில் இருந்து 1178 அடி உயரத்தில் உள்ளது. இந்த பாலம் ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள பக்கல் மற்றும் கவுரியை இணைக்கிறது.

3

பழமையான இந்திய லோகோமோட்டிவ் இன்னும் பயன்பாட்டில் உள்ளது

இந்திய இரயில்வே உருவாக்கிய பழமையான லோகோமோட்டிவான ஃபேரி ராணி இன்னும் பயன்பாட்டில் உள்ளது. இந்த இன்ஜின் நீராவி எஞ்சினுடன் டெல்லிக்கு அல்வார் இடையே சுற்றுலா ரயிலாக இயக்கப்படுகிறது. ரயில் 1885 இல் கட்டப்பட்டது மற்றும் 1909 இல் ஓய்வு பெற்றது. 1997 இல், ஃபேரி குயின் மீண்டும் தொடங்கப்பட்டு தற்போது மணிக்கு 40 கிமீ வேகத்தில் பயணிக்கிறது.

நாட்டின் மிகப்பெரிய நிறுவனம்

இந்திய ரயில்வேயில் நேரடியாக சுமார் 1.4 மில்லியன் மக்கள் பணிபுரிகின்றனர். இந்த நேரடி வேலைவாய்ப்பு தவிர, ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பொருட்கள் மற்றும் சேவைகளை விற்பனை செய்வதன் மூலம் பல லட்சம் பேர் ரயில்வேயால் பயன் பெறுகின்றனர்.

9

ஆடம்பரமான ரயில் சேவைகள்

ராயல் ராஜஸ்தான் ஆன் வீல்ஸ், பேலஸ் ஆன் வீல்ஸ், தி கோல்டன் தேர், தி மஹாராஜாஸ் எக்ஸ்பிரஸ் மற்றும் தி டெக்கான் ஒடிஸி என்ற 5 ராயல் ரயில்களை இந்திய ரயில்வே பெருமையுடன் கொண்டுள்ளது. இந்த ரயில்கள் யாவும் உங்களை ராஜ மரியாதையில் ஆடம்பரமாக பயணிக்க வைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரயில்வேயின் மொத்த வருமானமும் அதை இயக்குவதற்கே செலவிடப்படுகிறது

ரயில்வே என்ன சம்பாதித்தாலும், அது 94% ரயில்களை இயக்குவதற்கும் அதன் சீரான செயல்பாட்டிற்கும் செலவிடுகிறது. உதாரணமாக, 1 ரூபாய் சம்பாதித்தால், ரயில்களை இயக்குவதற்கு 94 பைசா செலவழிக்கிறது. சொல்லப்போனால் சில சமயங்களில் ரயில்வே நஷ்டத்தில் ஓடுகிறது என்றே கூறலாம்.

More News

    Read more about: indian railways irctc
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+