Search
  • Follow NativePlanet
Share
» »ஒட்டகங்களுக்காக நடைபெறும் கண்காட்சி துவங்கிவிட்டது – நீங்களும் கலந்துக் கொள்ளலாம்!

ஒட்டகங்களுக்காக நடைபெறும் கண்காட்சி துவங்கிவிட்டது – நீங்களும் கலந்துக் கொள்ளலாம்!

ராஜஸ்தானின் செழுமையான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கு மக்களை நெருக்கமாக கொண்டு வரும் நோக்கத்துடன் நடத்தப்படும் புஷ்கர் மேளா தொடங்கியது. உலகெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளின் பங்கேற்பைக் காணும் ராஜஸ்தானின் எட்டு நாள் புஷ்கர் கண்காட்சி நவம்பர் 1 அன்று கோலாகலமாக துவங்கியது ஜெய்ப்பூரில் நடைபெற்ற கண்காட்சியை ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.

புஷ்கர் கேமல் ஃபேர் அல்லது புஷ்கர் மேளா என்றும் அழைக்கப்படும் புஷ்கர் கண்காட்சி பொதுவாக அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் புஷ்கர் நகரில் நடைபெறும் ஐந்து நாள் ஒட்டகம் மற்றும் கால்நடை கண்காட்சி ஆகும். அதனைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இதோ!

உலகின் மிகப்பெரிய கால்நடை கண்காட்சி

உலகின் மிகப்பெரிய கால்நடை கண்காட்சி

இது உலகின் மிகப்பெரிய கால்நடை கண்காட்சிகளில் ஒன்றாக இருப்பதாலும், கால்நடைகளை வாங்குவதும் விற்பதும் இருப்பதால், பல ஆண்டுகளாக இது ஒரு முக்கிய உலகளாவிய சுற்றுலாத்தலமாக மாறியுள்ளது. கால்நடைகள், ஒட்டகம் மற்றும் குதிரைகள் போன்ற கால்நடைகளை வியாபாரம் செய்வதற்காக மாநிலம் முழுவதும் இருந்து விவசாயிகள் இந்த கண்காட்சியில் கூடுகிறார்கள். ஆனால், கால்நடைகளுக்கு தோல் நோய் பரவி வருவதால், இந்த ஆண்டு, புஷ்கர் கண்காட்சியில் பிரசித்தி பெற்ற கால்நடை கண்காட்சி இல்லாமல் நடக்கிறது. அது சற்று தொய்வான விஷயம் தான். ஆனால், அதைத் தவிர்த்து மற்ற அனைத்தும் பட்டையை கிளப்பியுள்ளன.

பல்லாயிரக்கணக்கான பயணிகளைக் காணும் திருவிழா

பல்லாயிரக்கணக்கான பயணிகளைக் காணும் திருவிழா

ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகளின் வருகையைக் காணும் பல இந்திய மாநிலங்களில் ராஜஸ்தான் ஒன்றாகும். கோட்டைகள், அரண்மனைகள், ஹவேலிகள், கலாச்சாரம் மற்றும் பல்சுவை உணவுக்கு பெயர் பெற்ற ராஜஸ்தானில் அவ்வப்போது பல கண்காட்சிகளும் திருவிழாக்களும் நடைபெறுவது வழக்கம். அதில் முதன்மையானது இந்த புஷ்கர் கண்காட்சியாகும். இந்த ஆண்டு புஷ்கர் சலோ அபியான் என்ற பெயரில் நடைபெறும் கண்காட்சிக்கு உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகளை மாநில சுற்றுலாத் துறை அழைப்பு விடுத்துள்ளது.

பல சுவாரஸ்யங்கள் நிறைந்த கண்காட்சி

பல சுவாரஸ்யங்கள் நிறைந்த கண்காட்சி

இந்த எட்டு நாள் நிகழ்வில் பல கலாச்சார நிகழ்வுகள் மற்றும் எண்ணற்ற போட்டிகள் நடைபெறுகின்றன. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையேயான கயிறு இழுத்தல், நடனம், மட்கா போட், மணல் கலை திருவிழா, காத்தாடி திருவிழா, ஆன்மீக நடைப்பயணம் மற்றும் நீளமான மீசை போட்டி போன்ற வேடிக்கையான போட்டிகள் கண்காட்சியில் மிகவும் சுவாரஸ்யமானவை. ஒட்டகப் பந்தயம் என்பது நீங்கள் தவறவிடக்கூடாத போட்டியாகும். பாரம்பரிய கைவினைக் கலைகளும் கண்காட்சியில் இடம்பெறும். பாரம்பரிய இசைக்குழுக்கள் மற்றும் ஃபியூஷன் இசைக்குழுக்களும் இந்த மாபெரும் நிகழ்வில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும்.

புஷ்கரை எப்படி அடைவது

புஷ்கரை எப்படி அடைவது

புஷ்கருக்கு அருகில் உள்ள விமான நிலையம் 140 கிமீ தொலைவில் உள்ள ஜெய்ப்பூரில் விமான நிலையம் ஆகும். டெல்லியில் இருந்து அஜ்மீர் மற்றும் புஷ்கருக்கு சாலையில் செல்ல விரும்பினால் நீங்கள் பேருந்துகளை பயன்படுத்திக் கொள்ளலாம் உள்ளன. ராஜஸ்தான் மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தால் சில டீலக்ஸ் மற்றும் செமி டீலக்ஸ் பேருந்துகளை நடத்தப்படுகின்றன. நீங்கள் அஜ்மீருக்கு ரயிலில் சென்று 30 நிமிட பயணத்திற்குப் பிறகு புஷ்கரை அடையலாம்.

Read more about: pushkar rajasthan
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X