Search
  • Follow NativePlanet
Share
» » ரூ. 8,000 இல் கூர்க், மைசூர் பட்ஜெட் சுற்றுலா – முழு டூர் பிளான் இதோ!

ரூ. 8,000 இல் கூர்க், மைசூர் பட்ஜெட் சுற்றுலா – முழு டூர் பிளான் இதோ!

இந்த மிதமான வானிலையில் ஒரு சுற்றுலா சென்று வந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறதா! யாருக்கு தான் சுற்றுலா செல்ல பிடிக்காது. ஆனால் அதற்கு செலவாகுமே என்று எண்ணி தான் பிளானை தள்ளிப் போடுகிறார்கள். ஆனால் கவலை வேண்டாம்! IRCTC வெறும் 8,670 ரூபாயில் சென்னையிலிருந்து மைசூர் மற்றும் கூர்க்கிற்கு 4 பகல் 5 இரவு கொண்ட அசத்தல் பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளது! இந்த பேக்கேஜை புக் செய்து ஆனந்தாமாக சுற்றுலா செல்ல இதுவே சரியான நேரமாகும். பட்ஜெட் சுற்றுலாப் பற்றிய முழு விவரங்கள் இதோ!

கர்நாடகாவின் கலாச்சார தலைநகரம்

கர்நாடகாவின் கலாச்சார தலைநகரம்

பாரம்பரிய நகரம், அரண்மனைகளின் நகரம், கர்நாடகாவின் கலாச்சார தலைநகரம், சந்தன நகரம், மல்லிகை நகரம் என்ற பல புனைப்பெயர்களைக் கொண்ட நகரம் தான் மைசூர். செழுமையான கலாச்சாரம், வளமான பாரம்பரியம், அழகான அரண்மனைகள், கட்டிடங்கள், பழமையான கோவில்கள், அழகான தோட்டங்கள் என மைசூர் நம்மை வரவேற்கிறது. இங்கு நீங்கள் சுற்றிப் பார்ப்பதற்கு ஏராளமான விஷயங்கள் உள்ளன. மைசூரின் சந்தனமும் பட்டாடைகளும் உலகப்புகழ் பெற்றவை என்பது நாம் அறிந்த விஷயமே!

இந்தியாவின் ஸ்காட்லாந்து

இந்தியாவின் ஸ்காட்லாந்து

இந்தியாவின் ஸ்காட்லாந்து என்று பிரபலமாக அறியப்படும் கூர்க் ஒரு அழகான மலைவாசஸ்தலமாகும். மேகங்கள் நம்மை தொட்டுச் செல்வதை நாமே உணரலாம், அப்படியென்றால் இங்கே வானிலை எப்படி இருக்கும் என்று நீங்களே யூகித்துக் கொள்ளுங்களேன். மூடுபனி மலைகள், பசுமையான காடுகள், ஏக்கர் கணக்கில் தேயிலை மற்றும் காபி தோட்டங்கள், மடாலயங்கள், தலைக் காவேரி, யானைகள் முகாம், பல்வேறு அழகிய நீர்வீழ்ச்சிகள் என கூர்க்கில் ஏகப்பட்ட சுற்றுலாத் தலங்கள் உள்ளன.

டூர் பேக்கேஜிற்கான கட்டணங்கள்

டூர் பேக்கேஜிற்கான கட்டணங்கள்

ஏழை எளிய மக்களும் கூட அவர்களின் பட்ஜெட்டிற்கு ஏற்றார்போல் சுற்றுலா செல்ல வேண்டும் என்பதே இந்த பேக்கேஜ் அறிமுகப்படுத்தியதற்கான நோக்கமாகும். சாதாரண மக்களுக்கு ஏற்ற விலையில் ஒரு நபருக்கு ரூ.8670 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதில் உணவு, உறைவிடம், ஸ்லீப்பர் கோச்சில் பயணம், நுழைவு சீட்டு கட்டணம், தரிசன டிக்கெட் ஆகிய அனைத்தும் அடங்கும்.

இரண்டாம் நாள் சுற்றுலா

இரண்டாம் நாள் சுற்றுலா

பின்னர் ஸ்ரீரங்கப்பட்டினம், தரியா தௌலத், திஔ சுல்தானின் கோடைகால அரண்மனை, திப்பு சுல்தானின் நினைவிடம், ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயில் பார்த்துவிட்டு, மாலையில் பிருந்தாவன் கார்டனுக்கு செல்வார்கள். இரவு உணவுக்கு பின்னர் பயணிகள் மைசூரிலேயே அந்த இரவு தங்க வைக்கப்படுவார்கள்.

மூன்றாம் நாள் சுற்றுலா

மூன்றாம் நாள் சுற்றுலா

சனிக்கிழமை காலை உணவுக்கு பின்னர் பயணிகள் மைசூரின் பிரபலமான சாமூண்டீஸ்வரி கோவிலுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அதைத்தொடர்ந்து பயணமானது கூர்க் நோக்கி செல்லும், கூர்க் செல்லும் வழியில் குஷால் நகரில் உள்ள பொற்கோவிலை பயணிகள் பார்த்துவிட்டு செல்வார்கள்.

மதியம் மடிகேரியில் உள்ள தங்குமிடத்திற்கு சென்றுவிட்டு இளைப்பாறி மதிய உணவு அருந்திய பின்னர், அபே நீர்வீழ்ச்சி, ஓம்காரேஷ்வர் கோவில் மற்றும் ராஜா சீட் ஆகியவற்றை பார்வையிடுவார்கள். அந்த இரவு கூர்க்கிலேயே பயணிகள் தங்குவார்கள்.

நான்காம் நாள் சுற்றுலா

நான்காம் நாள் சுற்றுலா

ஞாயிறு அன்று காலை காவிரியின் பிறப்பிடமான தலைக்காவேரி மற்றும் பாகமண்டலத்திற்கு செல்வார்கள். இந்த இடத்தின் அழகைக் கண்டு வியந்து போகாமல் இருக்க முடியாது. மேகங்கள் நம்மை உரசி செல்வதும், ரம்மியமான வானிலையும், அங்கே நிலவும் குளிரும் உங்களை அங்கிருந்து அவ்வளவு சீக்கிரம் கிளம்ப விடாது.

பின்னர் அங்கிருந்து காபி தோட்டங்கள், யானைகள் முகாம் ஆகியவற்றிற்கு சென்று விட்டு அங்கிருந்து கிளம்ப வேண்டும். இரவு உணவுக்கு பின்னர் பயணிகள் அனைவரும் 9 மணிக்கு புறப்படும் மைசூர் சென்னை எக்ஸ்பிரஸில் ஏற வேண்டும். பயணிகள் அனைவரும் திங்கள் காலை 7 மணிக்கு சென்னையை அடைந்து விடலாம்.

டூர் பேக்கேஜிற்கான கட்டணங்கள்

டூர் பேக்கேஜிற்கான கட்டணங்கள்

ஏழை எளிய மக்களும் கூட அவர்களின் பட்ஜெட்டிற்கு ஏற்றார்போல் சுற்றுலா செல்ல வேண்டும் என்பதே இந்த பேக்கேஜ் அறிமுகப்படுத்தியதற்கான நோக்கமாகும். சாதாரண மக்களுக்கு ஏற்ற விலையில் ஒரு நபருக்கு ரூ.8670 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதில் உணவு, உறைவிடம், ஸ்லீப்பர் கோச்சில் பயணம், நுழைவு சீட்டு கட்டணம், தரிசன டிக்கெட் ஆகிய அனைத்தும் அடங்கும்.

இப்போதே முன்பதிவு செய்யுங்கள்

இப்போதே முன்பதிவு செய்யுங்கள்

ஆர்வமுள்ள பயணிகள் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷனின் அதிகாரப்பூர்வ https://www.irctctourism.com இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். இன்னும் 10 நாட்களில் நவம்பர் 17 அன்று ஒரு குழு கிளம்ப இருக்கிறது. அது போக ஒவ்வொரு வியாழக் கிழமையிலும் இந்த சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்படுவதால் உங்களுக்கு தோதான நேரத்தில் ஒரு சுற்றுலா சென்று வந்து விடுங்கள்!

Read more about: coorg and mysore irctc
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X