Search
  • Follow NativePlanet
Share
» »கன்னியாகுமரி - தலைக்காவிரி : எங்கவெல்லாம், எப்படியெல்லாம் போகலாம்னு தெரியுமா ?

கன்னியாகுமரி - தலைக்காவிரி : எங்கவெல்லாம், எப்படியெல்லாம் போகலாம்னு தெரியுமா ?

காவிரி தற்போதைய கர்நாடாக மாநிலத்தில் குடகு மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உற்பத்தியாகி கர்நாடகத்தில் இருந்து தமிழக எல்லையான கிருஷ்ணகிரி, மேட்டூர் வழியாக தமிழகத்திற்குள் நுழைவது நாம் அறிந்த ஒன்றுதான். இந்த நீர் உற்பத்தியாகும் பகுதியாக பிரம்மகிரி என்ற மலையில் தலைக்காவிரி என்ற இடம் அறியப்படுகிறது. இயற்கை எழில்கொஞ்சும் மலைப் பிரதேசமும், சுற்றுலாப் பயணிகளுக்காகவே கடவுள் தந்த வரம் போல் பல்வேறு அம்சங்களும் இப்பகுதி தலைசிறந்த சுற்றுலாத் தலமாக திகழ்கிறது. தமிழகம், கேரளத்தில் இருந்து கர்நாடகாவிற்குள் செல்ல எளிதான நுழைவுவாயிலாகவும் இது திகழ்கிறது. சரி வாருங்கள், தமிழகத்தின் தென்கோடி முனையான கன்னியாகுமரியில் இருந்து தலைக் காவிரி செல்ல சூப்பர் ரூட்டைப் பார்ப்போம்.

கன்னியாகுமரி - திருவனந்தபுரம்

கன்னியாகுமரி - திருவனந்தபுரம்

கன்னியாகுமரியில் இருந்து சுமார் 105 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது திருவனந்தபுரம். தமிழக எல்லையைக் கடந்து கேரளாவில் நாம் முதலில் சென்றடையும் இடம் இது தான். அரபிக் கடலோரத்தை ஒட்டியே நாம் பயணிக்கும் இந்த பயணத்தில் வரும் கேரள தலைநகரான இங்கு தேசிய அளவிலான பல்வேறு சுற்றுலா அம்சங்கள் உள்ளன. அவற்றுள் ஸ்ரீ பத்மநாப சுவாமி கோவில், ஐரோப்பிய பாணியிலான கிறிஸ்டியன் கதீட்ரல், கனககுண்ணு அரண்மனை போன்றவை கட்டாயம் பயணிக்க வேண்டிய தலங்களாகும்.

wikipedia

சுற்றுலாத் தலங்கள்

சுற்றுலாத் தலங்கள்

தலைக் காவிரி நோக்கிய இந்தப் பயணித்தில் அவ்வப்போது சற்று ஓய்வெடுக்க ஏற்ற தலங்களும் உள்ளன. அதில், திருவனந்தபுரத்தில் உள்ள நேப்பியர் மியூசியம், கரமனா ஆறு, அக்குளம் ஏரி போன்ற இடங்களின் இயற்கை எழில் பின்னணியும் நீங்கள் தவறவிடக்கூடாத அம்சமாகும். மேலும், வனவிலங்குப்பூங்கா, நெய்யார் அணை மற்றும் காட்டுயிர் சரணாலயங்கள் உள்ளிட்ட இடங்களும் திருவனந்தபுரம் வரும்போது தவறாமல் பயணிக்க வேண்டிய இடங்களாகும்.

Shishirdasika

திருவனந்தபுரம் - ஆலப்புழா

திருவனந்தபுரம் - ஆலப்புழா

உங்களது இந்தப் பயணத்தின் போது ஒரு பகுதியில் மட்டும் கூடுதலாக ஒரு நாள் செலவிட விரும்பினால் அது ஆலப்புழாவாக இருக்கட்டும். திருவனந்தபுரத்தில் இருந்து 146 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆலப்புழாவில் சுற்றிப் பார்க்க வேண்டிய தலங்களை முன்கூட்டியே தேர்வு செய்திருந்தீர்கள் என்றால் இங்குள்ள உப்பங்கழி இயற்கைக்காட்சிகள், படகுப் பயணங்கள் மற்றும் இயற்கை எழிலை ரசித்து திரும்புவது நிச்சயம் உங்களுக்கு புத்துணர்வூட்டும் சுற்றுலா அனுபவமாக இருக்கும்.

Shameer Thajudeen

தவறவிடக்கூடாத தலங்கள்

தவறவிடக்கூடாத தலங்கள்

ஆலப்புழாவைச் சுற்றிலும் பல்வேறு சுற்றுலா அம்சங்கள் நிறைந்து காணப்படுகின்றன. அவற்றுள், முக்கியமாக பார்க்க வேண்டிய ஒரு சுற்றுலா அம்சம் பத்திரமண்ணல் எனும் தீவுத் திடலாகும். மேலும், இங்குள்ள காயம்குளம் ஏரி, அம்பலப்புழா ஸ்ரீ கிருஷ்ணர் கோவில், செயிண்ட் செபாஸ்டியன் தேவாலயம், திருவனந்தபுரத்தில் இருந்து அடுத்தடுத்து வரும் வர்களா மற்றும் கொல்லம் கடற்கரை உள்ளிட்டவை முக்கியச் சுற்றுலாத் தலங்களாகும்.

Challiyil Eswaramangalath Vipin

கொல்லம்

கொல்லம்

திருவனந்தபுரத்திற்கும் ஆலப்புழாவிற்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது கொல்லம் நகரம். எண்ணற்ற எழில் அம்சங்களையும், சுற்றுலாத் தலங்களையும் தன்னுள் கொண்டுள்ள இப்பகுதி வருடம் முழுவதும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை கேரளாவை நோக்கி ஈர்ப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. கொல்லம் பீச், தங்கசேரி பீச், அட்வெஞ்சர் பார்க் மற்றும் திருமுல்லாவரம் பீச் போன்றவை பயணிகளுக்கு எல்லையற்ற உற்சாகத்தை அளிக்கும் பொழுதுபோக்கு அம்சங்களாகும். இவைத் தவிர, மன்ரோ தீவு, நீண்டகரா துறைமுகம், சாஸ்தாம்கொட்டா ஏரி ஆகியவை ரம்மியமான இயற்கை எழில் நிரம்பிய சுற்றுலாத் தலங்களாக இங்கே பிரசித்தி பெற்றுள்ளன.

Rajeev Nair

ஆலப்புழா - கொல்லம்

ஆலப்புழா - கொல்லம்

ஆலப்புழாவில் இருந்து அரபிக் கடலோரம் ஒட்டியே கொச்சி, குருவாயூர் கடந்தால் 230 கிலோ மீட்டர் தொலைவில் கோழிக்கோட்டை அடைந்து விடலாம். கேரளாவில் பிற பகுதிகளை விட மற்ற எல்லாவற்றையும் விட, கோழிக்கோடு மாவட்டம், தனித்தன்மையான கலாச்சாரம் மற்றும் ருசியான உணவுவகைகள் மூலம் பயணிகளையும், வரலாற்று ஆர்வலர்களையும் வெகுவாக கவர்கின்றன. பேப்பூர் மற்றும் கப்பட் பீச், அதிகமான பறவையினங்கள் காணப்படும் கடலுண்டி பறவைகள் சரணாலயம் உள்ளிட்டவை பயணிகளை வெகுவாக ஈர்க்கக் கூடியவையாகும்.

Dhruvaraj S

சுற்றுலாத் தலங்கள்

சுற்றுலாத் தலங்கள்

பல்வேறு சுற்றுலா அம்ங்கள் கோழிக்கோட்டில் காணப்பட்டாலும், பயண நாட்களைக் கருத்தில் கொண்டு ஒரு சில தலங்களை மட்டுமே சுற்றிப் பார்க்க முடியும். அவற்றுள், துஷாகிரி நீர்வீழ்ச்சி, பெருவண்ணாமுழி அணை, ஸ்கொயர், பழசிராஜா மியூசியம், கலிபொயிக்கா, தலி கோவில், கக்கயம், கிருஷ்ண்ட மேனன் மியூசியம் மற்றும் பிளானேட்டேரியம் சுற்றுலாத் தலங்களுக்கு சென்று வரலாம்.

Sajetpa

கோழிக்கோடு பீச்

கோழிக்கோடு பீச்

சூரிய அஸ்தமனத்தை ரசித்தபடியே கோழிக்கோடு கடற்கரையில் ஒரு மாலை நேரத்தை கழிப்பது பயணத்தால் உடலுக்கும் மனதுக்கும் ஏற்பட்டுள்ள சோர்வை நீக்கி புத்துணர்ச்சியூட்டும் அனுபவமாக இருக்கும். மேலும், இங்குள்ள திக்கொட்டி லைட் ஹவுஸ் சுவாரசியமான சுற்றுலா அம்சமாகும். இந்த கலங்கரை விளக்கத்தை சுற்றிலுமுள்ள பகுதி பாறை நிலப்பகுதியாக காணப்படுகிறது. இதன்மீதிருந்து அரபிக்கடலில் அமைந்துள்ள வெல்லியம்கல்லு எனும் பாறைத்திட்டு அமைப்பை நன்றாக பார்த்து ரசிக்கலாம்.

Abbyabraham

கோழிக்கோடு - தலைக் காவிரி

கோழிக்கோடு - தலைக் காவிரி

கோழிக்கோட்டில் உள்ள சுற்றுலா அம்சங்களை முழுவதுமாக அனுபவித்துவிட்டு தொடர்ந்து பயணத்தை மேற்கொண்டால் வடகரா, தலச்சேரி கடந்து 203 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தலைக் காவிரியை அடைந்துவிடலாம். இந்த இடைப்பட்ட தொலைவில் உள்ள வடகரை பீச், மடப்பள்ளி உள்ளிட்ட பகுதிகள் ஓய்வுக்கு ஏற்ற சிறந்த பகுதிகளாகும். தொடர்ந்து பயணத்தி மேற்கொண்டீர்கள் என்றால் கேரளாவின் கூட்டுபுழா பாலத்தைக் கடந்தால் கர்நாடகாவின் எல்லைக்குள் நுழைந்து தலைசேரி - மைசூர் சாலையில் பயணிக்க வேண்டும்.

Nikhil Verma

வரவேற்கும் பிரம்மகிரி

வரவேற்கும் பிரம்மகிரி

கேரளாவில் இருந்து கர்நாடகத்தின் எல்லையில் நுழைந்ததுமே நம்மை முதலில் வரவேற்பது பிரம்மகிரி காட்டுயிர் சரணாலயம் தான். கேரளாவின் வயநாடு பகுதிக்கும் வடக்குப்பகுதியில் கர்நாடகாவின் குடகு பகுதிக்கும் இடையில் அமைந்துள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த சரணாலயத்தின் உயர்ந்த சிகரமாக பிரம்மகிரி மலை உள்ளது.

The MH15

பிரம்மகிரி சரணாலயம்

பிரம்மகிரி சரணாலயம்

அடர்த்தியாகவும், பசுமைமாறா மரங்களையும் கொண்டதாக காணப்படும் பகுதிதான் பிரம்மகிரி சரணாலயம். மலையேற்றம் செய்ய விரும்புபவர்களுக்கு இது மிகவும் பிடித்தமான இடமாக விளங்குகிறது. பிரம்மகிரி காட்டுயிர் சரணாலயத்தில் சிங்கவால் குரங்கு, யானை, காட்டெருமை, புலி, கரடி, சாம்பார் மான், மலபார் ராட்சத அணில், பறக்கும் ராட்சத அணில், அரிய வகை இனமான நீலகிரி மரநாய் என பல்வேறு உயிரினங்கள் உள்ளது.

Join2manish

விராஜ்பேட்- மைசூர் நெடுஞ்சாலை

விராஜ்பேட்- மைசூர் நெடுஞ்சாலை

சரணாலயத்தைக் கடந்து விராஜ்பேட்- மைசூர் நெடுஞ்சாலையில் பயணத்தை தொடர்ந்தால் அடுத்த 60 கிலோ மீட்டர் பயணத்தில் தலைக் காவிரியை அடைந்துவிடலாம். இருபுறமும் ரம்மியமான மலைக் காடுகளின் வழியே பயணிக்கும் இந்த காட்டுவழிச்சாலையில் அவ்வப்போது யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளையும் கண்டு ரசிக்கலாம்.

தலைக்காவேரி

தலைக்காவேரி

தமிழகத்தில் கன்னியாகுமரியில் தொடங்கிய இப்பயணம் கேரளாவில் பல்வேறு தலங்களைக் கடந்து கர்நாடகாவின் கூர்க் மலையில் உள்ள தலைக் காவிரியை வந்தடைந்துள்ளது. கூர்கில் இருக்கும் மிகப் பிரபலமான சுற்றுலாத்தலம் தலைக்காவேரி. கூர்கின் தலைநகரான மடிகேரியில் இருந்து 48 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிரம்மகிரி மலையின் மேல் அமைந்திருக்கும் இந்த இடத்திலிருந்து தான் காவிரி ஆறு உற்பத்தியாகிறது.

Nikhil Verma

பாகமண்டலா

பாகமண்டலா

தலைக்காவிரி பகுதியில் உள்ள பாகமண்டலா முக்கியச் சுற்றுலாத் தலமாகும். காவேரி, கனகே, சுஜ்யோதி என்ற மூன்று ஆறுகளும் ஒன்று சேரும் இடம்தான் பாகமண்டலம். தலைக் காவிரியிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் இது அமைந்துள்ளது.

Rkrish67

ஹொன்னம்மன ஏரி

ஹொன்னம்மன ஏரி

தலைக் காவிரிக்கு அருகே உள்ள சுற்றுலா அம்சங்களில் பிரசிதிபெற்றது ஹொன்னம்மன ஏரி. இந்த ஏரிக்கு இரு புறமும் கவிபெட்டா மற்றும் மோரிபெட்டா என்ற அழகான மலைகளாலும், அதிலுள்ள சிகரங்கள் மற்றும் காபி தோட்டங்களாலும் சூழப்பட்டுள்ளன. ஏரியைச் சுற்றிலும் இயற்கை எழில் நிரம்பி வழிவதால் இந்த ஏரிக்கு வரும் பயணிகளுக்கு அந்த இடத்தை விட்டு விலகவே மனம் வராது.

wikipedia

மல்லலி நீர்வீழ்ச்சி

மல்லலி நீர்வீழ்ச்சி

கூர்க் பகுதியில் சோம்வார்பேட் கரத்தில் உள்ள இந்த நீர்வீழ்ச்சியை தலைக் காவிரியில் இருந்து எளிதில் சென்றடையலாம். மழைக் காலத்தில் தன் முழு வேகத்துடன் உயரத்திலிருந்து நீர் விழும் இந்த நீர்வீழ்ச்சியில் தோன்றும் நீராவி போன்ற நீர்ச்சிதறல் சொர்க்கலோகத்தை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி நம் மனதை மெய் மறக்கச் செய்யும்.

Shanmugamp7

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more