Search
  • Follow NativePlanet
Share
» »வழக்கத்தை விட சென்னையில இந்த வருஷம் வெயில் அதிகமா இருக்குமாம் – கத்தரி வந்தா நம்ம காலியா?

வழக்கத்தை விட சென்னையில இந்த வருஷம் வெயில் அதிகமா இருக்குமாம் – கத்தரி வந்தா நம்ம காலியா?

இன்னும் முழுசா கோடைக்காலம் ஆரம்பிக்கவே இல்லை, அதுக்குள்ள சென்னையில வெயில் நம்மை வாட்டி வதைக்க ஆரம்பித்து விட்டது. அதுமட்டுமல்ல, இந்த வருஷம் வழக்கத்தை விட வெயில் அதிகமாக இருக்கும் என்று வல்லுநர்கள் கூறியுள்ளனர். கத்தரி வெயில் எனும் அக்னி நட்சத்திரம் மே 4 அன்று தான் ஆரம்பிக்கிறது. ஆனால் அதற்குள்ளேயே வெயிலின் தாக்கம் பல இடங்களில் சென்னை மக்களை மிரட்டி வருகிறது. இன்னும் கத்தரி வெயில் வந்தால் நம் நிலைமை அவ்வளவு தான் போல, ஆனால் சென்னை வெயிலில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள வல்லுநர்கள் சில வழிகளைக் கூறியுள்ளனர்!

கத்தரி வெயில் என்றால் என்ன?

அக்னி நட்சத்திரம், கத்தரி வெயில் போன்ற வார்த்தைகள் வானிலை ஆய்வாளர்களின் பயன்பாட்டில் இல்லை. கத்தரி வெயில் என்பது, 100 சதவிகிதம் வானிலைத் துறையின் வார்த்தை கிடையாது. அது, பஞ்சாங்கத்தின் வார்த்தை. ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் வெப்பம் அதிகரிப்பது வழக்கம் தான். இது, ஒவ்வொரு ஆண்டும் நிகழும் இயல்பான செயல். எனவே, கத்தரி வெயில் எப்போது தொடங்கும், எப்போது முடியும் என்று வானிலைத் துறை கூறுவதில்லை. ஜோதிடம் மற்றும் பஞ்சாங்கத்தின்படி, பரணி நட்சத்திரம் தொடங்கி கிருத்திகை நட்சத்திரம் வரை சூரியனின் பயண காலமே அக்னி நட்சத்திரம் எனவும், கத்தரி வெயில் எனவும் அழைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்!

kathiriveyil

இந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகம் தான்

அக்னி நட்சத்திரம் என்னும் கத்தரி வெயில் காலமான மே மாதத்தில் உச்சகட்ட வெப்பம் பதிவாக இருக்கும். ஆனால், இந்தாண்டு ஆரம்பத்தில் இருந்தே கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. மார்ச் மாத துவக்கத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரிக்க தொடங்கிவிட்டது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், ஈரோடு, கரூர், வேலூர், சேலம், தர்மபுரி, மதுரை, திருத்தணி, திருப்பத்தூர் உள்ளிட்ட சில இடங்களில் அதிகமாக வெப்பத்தின் தாக்கத்தை உணர முடிந்தது.

2024 இல் கத்தரி தொடங்குவது எப்போது?

அக்னி நட்சத்திரம், கத்திரி வெயில், அக்னி வெயில், அக்னி கார்த்திகை எல்லாம் ஒன்றுதான். தமிழ் நாட்காட்டியின்படி, 2024 ஆம் ஆண்டு அக்னி நட்சத்திரம் மே 4 ஆம் தேதி சனிக்கிழமை காலை 9:31 மணிக்குத் தொடங்கி , செவ்வாய்க் கிழமை மே 28 ஆம் தேதி மாலை 4:37 மணிக்கு முடிவடைகிறது. இந்த ஒரு மாதத்திற்கு வெயிலின் தாக்கம் நம்மை ஒரு வழியாக்கி விடும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

kathiriveyil how to beat the heat

வெயிலில் இருந்து தப்பித்துக்கொள்ள என்ன செய்வது?

1. தினமும் காலையில் இட்லி, தோசை அல்லாமல் இந்த ஒரு மாத காலத்திற்கு பழைய சாதம், கூழ், களி போன்றவற்றை நன்றாக தயிர் ஊற்றி சாப்பிடுங்கள். உடல் சூடு என்பது உங்களை நெருங்காது.

2. இளநீர், நுங்கு, தர்பூசணி, கீர்ணிப்பழம், வெள்ளரிப்பழம் போன்றவற்றை அதிகம் உண்ணுங்கள்.

3. மோர், ஜூஸ் போன்றவற்றை அதிகம் குடியுங்கள். குறிப்பாக தண்ணீர் நிறைய பருகுகுங்கள்.

4. ஆல்கஹால் அல்லது அதிக அளவு சர்க்கரை கொண்ட திரவங்களை குடிக்க வேண்டாம் - இவை உண்மையில் அதிக உடல் திரவத்தை இழக்கச் செய்யும். மேலும், குளிர் பானங்களைத் தவிர்க்கவும், ஏனெனில் அவை வயிற்றுப் பிடிப்பை ஏற்படுத்தும்.

5. வீட்டுக்குள்ளேயே இருங்கள், முடிந்தால் வீட்டிற்கு அருகில் இருக்கும் மர நிழல்களில் ஓய்வெடுங்கள். முடிந்த வரை ஏ.சி பயன்பாட்டை உறங்கும் போது மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். முழு நேரமும் ஏ.சியில் இருப்பது உடலுக்கு நல்லது இல்லை.

6. கைக்குழந்தைகள் மற்றும் இளம் குழந்தைகள் மற்றும் வயதானவர்களை சற்று கூடுதல் ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள்.

7. ஆபத்தில் உள்ள பெரியவர்களை ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது சந்தித்து, வெப்பம் சோர்வு அல்லது வெப்ப பக்கவாதம் போன்ற அறிகுறிகளை உன்னிப்பாகக் கவனிக்கவும்.

8. உங்கள் வெளிப்புற நடவடிக்கைகளை காலை மற்றும் மாலை நேரங்களுக்கு வரம்பிடவும்.

9. நிழலான பகுதிகளில் அடிக்கடி ஓய்வெடுக்க முயற்சி செய்யுங்கள்.

10. அகலமான விளிம்பு கொண்ட தொப்பி (உங்களை குளிர்ச்சியாக வைத்திருக்கும்) மற்றும் சன்கிளாஸ்கள் மற்றும் SPF 15 அல்லது அதற்கு மேற்பட்ட சன்ஸ்கிரீன்களை அணிவதன் மூலம் சூரிய ஒளியில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்

More News

    Read more about: chennai travel guide
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+