Search
  • Follow NativePlanet
Share
» »பெங்களூர் டூ கெம்மனுண்டி- இப்படியொரு ரூட்டு தெரியுமா ?

பெங்களூர் டூ கெம்மனுண்டி- இப்படியொரு ரூட்டு தெரியுமா ?

பெரும்பாலானோர் அறியாத இன்னும் பசுமை நிறைந்த காடாக இருக்கும் கெம்மனுண்டி மலைப் பிரதேசத்திற்கு எப்படிச் செல்லாம், என்ன சிறப்பு என பார்க்கலாம் வாங்க.

கர்நாடக மாநிலம் நகரம், சமவெளிக் காடுகள், சரணாலயங்கள், மலைப் பிரதேசங்கள், கடற்கரை என பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட சுற்றுலாத் தலங்களை கொண்டுள்ளது. குறிப்பாக, மலை ஏறும் ஆர்வமுள்ளவர்களை ஈர்க்கும் வகையிலான சவன்துர்கா, சிவகிரி, கூர்க், அந்தர்கங்கே உள்ளிட்ட இடங்கள் திகழ்கின்றன. அந்த வகையில் பெரும்பாலானோர் அறியாத இன்னும் பசுமை நிறைந்த காடாக இருக்கும் கெம்மனுண்டி மலைப் பிரதேசத்திற்கு எப்படிச் செல்லாம், என்ன சிறப்பு என பார்க்கலாம் வாங்க.

பெங்களூர் - கெம்மனுண்டி

பெங்களூர் - கெம்மனுண்டி


பெங்களூரில் இருந்து தேசிய நெடுஞ்சாலை 73-யில் சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவில் சிக்மங்களூர் அருகே உள்ளது கெம்மனுண்டி மலைப் பிரதேசம். பெங்களூரில் இருந்து பல நெடுஞ்சாலைகள் சிக்மங்களூரை இணைப்பதாக இருந்தாலும், துமகுரு சாலை வழியாக நெடுஞ்சாலை 73யில் பயணிப்பது உங்களது பயண நேரத்தை குறைப்பதோடு, போக்குவரத்து நெரிசல் சற்று குறைவான சாலையாகவும் இருக்கும்.

RakeshRaju M

பெங்களூர் - கிப்பனஹல்லி

பெங்களூர் - கிப்பனஹல்லி

பெங்களரில் இருந்து சுமார் 125 கிலோ மீட்டர் தொலைவில் தேசிய நெடுஞ்சாலை 73-ம், தேசிய நெடுஞ்சாலை 150ம் இணையும் பகுதிதான் கிப்பனஹல்லி கிராசிங் சந்திப்பு. திப்தூர் செல்லும் முக்கிய நெடுஞ்சாலையும் இதுதான்.

Likhith N.P

கிப்பனஹல்லி - கெம்மனுண்டி

கிப்பனஹல்லி - கெம்மனுண்டி


கிப்பனஹல்லியில் இருந்து 126 கிலோ மீட்டர் தித்தூர், பனவாரா, கதூர் வழியாக பயணித்தால் கெம்மனுண்டியை அடைந்துவிடலாம். கர்நாடக மாநிலம் சிக்மங்கலூருவில் கடல் மட்டத்தில் இருந்து 1500 அடி உயரத்தில் அமைந்துள்ள அழகிய மலைப் பிரதேசம் தான் இது.

Srinivasa83

கெம்மனுண்டி

கெம்மனுண்டி


மலை முகடுகளின் ஊடாக பாயும் பசுமை ஓடைகள், போர்வை போர்த்தியது போன்ற புல்வெளி நிலங்கள்,எங்கு காணிணும் இயற்கை காட்சி நம் மனதை கொள்ளையடித்துவிடும். அத்தனை அழகுடையது இந்த மலைப் பகுதி.

Vinayak wiki

காட்சித் தளம்

காட்சித் தளம்


கெம்மனுண்டி மலையிலேயே உயரமான மலைக்குன்றில் அமைந்திருக்கும் இடம் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்க்கும் தலமாகும். 'Z' பாயிண்ட் என்று அழைக்கப்படும் இந்த குன்று தோற்றத்தில் ஆங்கில எழுத்தான Z வடிவில் அமைந்திருப்பதால் இந்தப் பெயரை பெற்றுள்ளது.

Bdeepu

ஹெப்பே அருவி

ஹெப்பே அருவி


கெம்மனுண்டியில் அமைந்துள்ள மற்றொரு பிரசிதிபெற்ற சுற்றுலாத் தலம் ஹெப்பே அருவி. சுமார், 160 மீட்டர் உயரத்தில் இருந்து கொட்டும் இந்த ஹெப்பே அருவி பெரிய அருவி மற்றும் சிக்கா அருவி என இரண்டு பகுதியாக உள்ளது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து இத அருவியை அருகில் சென்று ரசிக்க வாகன வசதிகளும் உள்ளது.

Srinivasa83

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X