» »மலையாள நடிகைகள் பிறந்த இடங்கள்ல அப்படி என்னதான் இருக்கு?

மலையாள நடிகைகள் பிறந்த இடங்கள்ல அப்படி என்னதான் இருக்கு?

Posted By: Staff

அதிகம் படித்தவை:

நம்ம தமிழ் நாட்டுக்கும் கேரளாவுக்கும் என்னதான் ஆயிரம் சண்டைகள் இருந்தாலும் எல்லாத்தையும் தாண்டி இரண்டு மாநிலங்களுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறதென்றால் அதற்கு முக்கிய காரணம் தமிழ் சினிமாதான். தமிழ் சினிமாவே தலைகீழாக மாறினாலும் மாறாத ஒரு விஷயமென்றால் அது கேரளத்து நடிகைகள் தமிழுக்கு நடிக்க வருவது தான். அப்படி நடிக்க வந்து தமிழ் இளைஞர்களின் தூக்கத்தை கெடுக்கும் மலையாளத்து நடிகைகள் பிறந்த இடங்களை பற்றி அறிந்து கொள்வோம் வாருங்கள். 

திருவிதாங்கூர் ரகசியங்களை வெளிக்காட்டும் உதயகிரிக் கோட்டைக்கு போயிருக்கீங்களா?

 வித்யா பாலன் - பாலக்காடு :

வித்யா பாலன் - பாலக்காடு :

இவர் பெரிதாக தமிழ் படங்களில் நடித்ததில்லை என்றாலும் 'டர்டி பிக்சர் ' என்ற இந்தி படத்தில் தமிழ் சினிமாவில் ஆகப்பெரும் புகழோடு திகழ்ந்த சில்க் ஸ்மிதாவாக நடித்து பெரும் பரபரப்பை உண்டு பண்ணியவர். இவர் பாலக்காட்டில் உள்ள புத்தூர் என்ற ஊரில் தமிழ் பேசும் பிராமண குடும்பத்தில் பிறந்து இப்போது மும்பையில் வசிக்கிறார்.

 வித்யா பாலன் - பாலக்காடு :

வித்யா பாலன் - பாலக்காடு :

மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது கேரளாவுக்கு தாரைவார்க்கப்பட்ட இடம் தான் இந்த பாலக்காடு ஆகும். தமிழக - கேரள எல்லையில் கோயம்பத்தூரை அடுத்து அமைந்திருக்கிறது பாலக்காடு மாவட்டம். கேரளா மாவட்டத்தில் தமிழர்கள் மிக அதிகமாக வசிக்கும் பகுதியான இங்கு நாம் சுற்றிப்பார்க்க நல்ல நல்ல இடங்களும் இருக்கின்றன.

Photo:dilip ...

பாலக்காடு கோட்டை :

பாலக்காடு கோட்டை :

பாலக்காட்டின் முக்கிய சுற்றுலா ஈர்ப்பாக இருப்பது சுல்தான் ஹைதர் அலியால் 1766ஆம் ஆண்டு கட்டப்பட்ட பாலக்காடு கோட்டையாகும். ஹைதர் அலியின் மகனான திப்பு சுல்தானின் பெயரால் திப்புவின் கோட்டை எனவும் இது விளிக்கப்படுகிறது. இந்த கோட்டையினுள்ளே ஒரு சிறைச்சாலையும், ஹனுமான் கோயில் ஒன்றும் இருக்கிறது.

photo:Hari_Menon

பாலக்காடு கோட்டை :

பாலக்காடு கோட்டை :

இதை தாண்டி பசுமையான வயல்கள் நிறைந்த பகுதியாகவும், கோயில்கள் அதிகம் உள்ள நகரமாகவும் இருக்கிறது. கேரளாவின் மற்ற பகுதிகளை போல இல்லாமல் கடுமையான வெயில் நிலவும் பகுதிகாவே பாலக்காடு இருக்கிறது.

Photo:aphotoshooter

பாலக்காடு கோட்டை :

பாலக்காடு கோட்டை :

பாலக்காடு மணி அய்யர் போன்ற மிகப்பெரிய கர்னாடக இசை ஜாம்பவான்கள் பிறந்த பாலக்காடு நகரம் பாரம்பரிய கலைகளின் கேந்திரமாகவும் திகழ்கிறது. தமிழ்நாட்டின் தஞ்சை மாவட்டத்தை போன்றே 'கேரளத்தின் நெற்களஞ்சியம்' என்ற சிறப்பை பெற்ற நகரமான பாலக்காட்டுக்கு கண்டிப்பாக ஒருமுறை சென்று வாருங்கள்.

Photo:Ranjith shenoy R

பாலக்காடு :

பாலக்காடு :

பாலக்காடு நகரின் சில அழகிய புகைப்படங்கள்.

Photo:Prasanth Chandran

பாலக்காடு :

பாலக்காடு :

பாலக்காடு நகரின் சில அழகிய புகைப்படங்கள்.

Photo:Abhishek Jacob

பாலக்காடு :

பாலக்காடு :

பாலக்காடு நகரின் சில அழகிய புகைப்படங்கள்.

பாலக்காடு கோட்டை.

Photo:Hari_Menon

பாலக்காடு :

பாலக்காடு :

பாலக்காடு நகரின் சில அழகிய புகைப்படங்கள்.

பாலக்காடு கோட்டை.

Photo:Raj

பாலக்காடு :

பாலக்காடு :

பாலக்காடு நகரின் சில அழகிய புகைப்படங்கள்.

பாலக்காடு கோட்டை.

Photo:Groundhopping Merseburg

திரிச்சூர் :

திரிச்சூர் :

கேரளத்தின் கலாச்சார தலைநகராக போற்றப்படும் திரிச்சூரில் தான் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய நாயகிகளாக உருவெடுத்து இப்போது மார்கெட் இன்றி இருக்கும் நடிகைகளான பாவனாவும், கோபிகாவும் பிறந்திருகின்றனர். இதில் கோபிகா 'மிஸ் திரிச்சூர்' பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திரிச்சூர் :

திரிச்சூர் :

சுற்றிப்பார்க்க சுவாரஸ்யமான இடங்கள் அவ்வளவாக ஏதும் இங்கே இல்லை என்றாலும் இங்கு நடக்கும் காலச்சார மற்றும் இலக்கிய விழாக்கள் அதி சிறப்பானவை. ஏப்ரல் - மே மாதங்களில் இங்கு நடைபெறும் 'திரிசூர் பூரம்' விழா பிரசித்தி வாய்ந்ததாகும். செண்டை மேளம் முழங்க அலங்கரிக்கப்பட்ட யானைகள் பவனி வர வண்ணமயமாக இவ்விழா கொண்டாடப்படுகிறது.

Photo:Amit Rawat

திரிச்சூர் :

திரிச்சூர் :

மத பேதமின்றி அனைத்து மதத்தினரும் இவ்விழாவில் பங்கு கொள்கின்றனர். திரிச்சூரில் உள்ள வடக்குன்னத்தான் கோயில் வளாகத்தில் வான வேடிக்கைகளுடன் நடக்கும் இந்த திரிச்சூர் பூரம் விழாவில் கலந்து கொள்வதற்காகவே ஒருமுறை திரிச்சூருக்கு சென்று வர வேண்டும்.

Photo:Prasanth Chandran

திரிச்சூர் :

திரிச்சூர் :

மேலும் திரிச்சூரில் கேரளா சாகித்திய அகெடமி, கேரளா சங்கீத நாடக அகெடமி போன்றவை அமைந்திருகின்றன. நகரின் ஏதேனும் ஒரு மூலையில் எப்போதும் ஒரு இலக்கிய கூட்டம் நடந்துகொண்டே தான் இருக்கிறது.

திரிச்சூர் :

திரிச்சூர் :

திரிச்சூர் நகரின் சில அற்புதமான புகைப்படங்கள்.

Photo:ragesh ev

திரிச்சூர் :

திரிச்சூர் :

திரிச்சூர் நகரின் சில அற்புதமான புகைப்படங்கள்.

புலிகழி நடனம்.

Photo:Ashit Desai

திரிச்சூர் :

திரிச்சூர் :

திரிச்சூர் நகரின் சில அற்புதமான புகைப்படங்கள்.

பூரம் விழா.

Photo:Ashit Desai

திரிச்சூர் :

திரிச்சூர் :

திரிச்சூர் நகரின் சில அற்புதமான புகைப்படங்கள்.

பூரம் விழா.

Photo:Ashit Desai

ரம்யா நம்பீசன் - சோட்டானிக்கரை :

ரம்யா நம்பீசன் - சோட்டானிக்கரை :

'பை பை பை கலாய்ச்சி பை' பாடல் நினைவிருக்கிறதா ?. விஷால் நடித்த பாண்டிய நாடு படத்தில் இடம்பெற்ற இப்பாடல் தமிழகத்தையே ஒரு கலக்கு கலக்கியதென்று சொல்லலாம். அந்த பாடலைப்பாடியவர் பிஸ்சா படத்தின் நாயகியான ரம்யா நம்பீசன் தான். 1950களுக்கு பின்பு நடிக்கவும் பாடவும் செய்யும் வெகு சில நடிகைகளில் இவரும் ஒருவர்.

ரம்யா நம்பீசன் - சோட்டானிக்கரை :

ரம்யா நம்பீசன் - சோட்டானிக்கரை :

இவர் பிறந்த ஊர் கேரளா மாநிலத்தில் இருக்கும் சோட்டானிக்கரை ஆகும். எர்ணாகுளத்தில் அமைந்திருக்கும் இந்த ஊரில் உள்ள பகவதி அம்மன் கோயில் இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற ஹிந்து கோயில்களுள் இதுவும் ஒன்றாகும்.

இந்த பகவதி அம்மன் காலையில் சரஸ்வதியாகவும், மதியம் லக்ஷ்மி தேவியாகவும், மாலையில் துர்க்கை அம்மனாகவும் வழிபடப்படுகிறார். மாந்த்ரீக நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தும் இடமாகவும் இந்த கோயில் இருக்கிறது.

Photo:RoninMax