» »ஆசியாவின் இரண்டாவது பெரிய ஒற்றைப்பாறை மலைக்கு ஒரு ட்ரெக்கிங் பயணம் !

ஆசியாவின் இரண்டாவது பெரிய ஒற்றைப்பாறை மலைக்கு ஒரு ட்ரெக்கிங் பயணம் !

Written By: Staff

புதியவை: திருநள்ளாறுவில் மீண்டும் தடுமாறிய செயற்கைகோள்கள் - உண்மை என்ன தெரியுமா?

"ஹைட்டுனா எனக்கு பயம்" என்று சொல்கிற ஆளா நீங்கள்?. அப்படியென்றால் பிடிக்க கைப்பிடி எதுவும் இல்லாத, கொஞ்சம் பிசகினாலும் மரணத்தை பரிசளிக்ககூடிய ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஒற்றைப்பாறை மலையான மதுகிரிக்கு ட்ரெக்கிங் பயணம் ஒன்று போகலாம்.   

மதுகிரி !!

மதுகிரி !!

கர்நாடக மாநிலம் தும்க்கூர் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது இந்த மதுகிரி மலை.

மது(தேன்), கிரி(மலை) என்பதே இந்த இடத்தினுடைய பெயரின் அர்த்தமாகும்.

Praveen (ప్రవీణ్) Garlapati

மதுகிரி !!

மதுகிரி !!

இம்மலை கடல் மட்டத்தில் இருந்து 3,930 அடி உயரம் கொண்டதாகும். இது தான் ஆசியாவில் இருக்கும் இரண்டாவது மிகப்பெரிய ஒற்றைபாறை மலையாகும்.

Vishal

மதுகிரி !!

மதுகிரி !!

அந்தாரலடா பகிலு, தித்தி பகிலு மற்றும் மைசூரு கேட் ஆகியவை இந்த மலையின் நுழைவு வாயிலாக இருக்கின்றன.

மதுகிரி மலையின் உச்சியில் சிதலமடைந்த கோபாலகிருஷ்ணன் கோயில் ஒன்று இருக்கிறது.

Nagarjun Kandukuru

மதுகிரி !!

மதுகிரி !!

மதுகிரி மலையின் மேல் 1670ஆம் ஆண்டு ராஜா ஹிரா கௌடா என்பவர் ஒரு கோட்டையை கட்டியிருக்கிறார்.

இக்கோட்டையின் வடக்குப்பகுதியில் ஏராளமான தேன் கூடுகள் இருந்திருக்கின்றன. அதனாலேயே இதற்கு 'மதுகிரி' என்ற பெயர் வந்திருக்கிறது.

Nagarjun Kandukuru

மதுகிரி !!

மதுகிரி !!

மட்டகிரி என்றும் அழைக்கப்படும் இந்த இடம் தும்க்கூர் நகரில் இருந்து 43கி.மீ தொலைவிலும் பெங்களூருவில் இருந்து 107கி.மீ தொலைவிலும் அமைந்திருக்கிறது.

Vishal

மதுகிரி !!

மதுகிரி !!

மதுகிரி மலையின் மேல் இருக்கும் வெங்கட்ரமணசுவாமி கோயில் மற்றும் மல்லேஸ்வரா கோயில் விஜயநகர பேரரசர்களால் திராவிட கட்டிடக்கலை முறைப்படி கட்டப்பட்டிருக்கிறது.

இங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் இந்த கோயில்களுக்கு செல்லவே மிகவும் ஆபத்தான ட்ரெக்கிங் பயணத்தை மேற்கொள்கின்றனர்.

Vishal

மதுகிரி !!

மதுகிரி !!

சரியான அளவிலான படிகளோ அல்லது நிலை இழக்காமல் இருக்க கைப்பிடிகளோ எதுவும் இந்த மலையில் இல்லை. எனவே ஏறும்போது சிறு தவறு நடந்தாலும் அது மிகப்பெரிய அசம்பாவிதத்தை ஏற்ப்படுத்தலாம்.

Vishal

மதுகிரி !!

மதுகிரி !!

நண்பர்களுடன் பெங்களூருவில் இருந்து வார விடுமுறைக்கு எங்காவது சுற்றுலா செல்ல வேண்டும் என்றுன் விரும்பினால் நிச்சயம் இந்த மதுகிரி மலைக்கு சென்று வாருங்கள்.

மலையேறி சுவாமி தரிசனம் செய்வதோடு ஆபத்தான மலையேற்ற சாகசத்திலும் ஈடுபடுங்கள்.

Vishal

மதுகிரி !!

மதுகிரி !!

மதுகிரி செல்லும்போது தண்ணீர் பாட்டில்கள், குல்கொஸ், எண்ணெய் சேர்க்காத உணவுகள் போன்றவற்றை உடன் எடுத்துச்செல்ல மறந்துவிடாதீர்கள்.

மூச்சுகோளாறு உள்ளவர்கள், மூட்டு பிரச்சனை உள்ளவர்கள் இந்த ட்ரெக்கிங் பயணத்தை தவிர்ப்பது நல்லது.

Vishal

மதுகிரி !!

மதுகிரி !!

மதுகிரி கோட்டையின் நுழைவு வாயில் !!

Nagarjun Kandukuru

மதுகிரி !!

மதுகிரி !!

மதுகிரியில் இருக்கும் ஆஞ்சநேயர் சிலை !!

Praveen (ప్రవీణ్) Garlapati (గార్లపాటి)

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்