» »கின்னர் கைலாச மலையில் ஒரு தெய்வீகப் பயணம் போக விருப்பமா? உங்களுக்கான அருமையான கைடு இது!!

கின்னர் கைலாச மலையில் ஒரு தெய்வீகப் பயணம் போக விருப்பமா? உங்களுக்கான அருமையான கைடு இது!!

Written By: Balakarthik Balasubramanian

மயக்கும் தன்மையுடன் காட்சிகளால் கவரும் கின்னர் கைலாஷ் பகுதியில் பார்ப்பதற்கு அப்படி என்ன தான் இருக்கிறது! 1993 ஆம் ஆண்டு வரை, இந்தப் பகுதி காட்சிப்படுத்தபடக் கூடாத தடை விதிக்கப்பட்ட ஒரு இடமாக இருந்தது. ஆனால், இந்தியர்களால் கூட பார்க்க இயலாமல் தடைப்போட்டுத் துரத்தப்பட்ட இந்த இடம், இன்றோ ஏக்கத்தினைத் தீர்க்கும் வகையில் போடப்பட்டதொரு தடையை நீக்கி சுற்றுலா செல்லும் பயணிகளின் மனதினை இதமாக வருடி இனிமையுடன் வரவேற்கிறது.

பென்ஸ் கார் தெரியும்.... பென்ஸ் ரயில்? இத படிங்க!

நான் உண்மையிலே ஒரு மதம் சார்ந்த மனிதன் அல்ல. எனக்கு மதம் பற்றினக் கவலைகளைவிட ஆன்மீகத்தினைப் பற்றியதோர் நம்பிக்கை மனதில் பொங்கும் ஒருவன் என்று நான் பெருமையுடன் கூறுவேன். அதனால், நான் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட இடங்களை காண மிகவும் ஆசைக்கொள்பவன் என்றும் கூறலாம். அதனால், இந்த முறை எங்காவது ஆன்மீகத்தின் அரவணைப்பில் சூழப்பட்டு இயற்கையால் போதிக்கும் ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என ஆசைக் கொண்டேன். நான் பல இடங்களை இணையத்தளத்தின் உதவியுடன் பார்த்து மனதினுள் பதியவைத்துக் கொள்ள, ,மலை மேல் அமைந்திருக்கும் கின்னர் கைலாஷ் பகுதியினைக் காணவே என் மனம் பேரார்வம் கொண்டு துள்ளிக் குதித்து தேர்ந்தெடுத்தது.

கின்னர் கைலாச மலையில் ஒரு தெய்வீகப் பயணம் போக விருப்பமா? உங்களுக்கான அருமையான கைடு இது!!

snotch

கின்னர், இமாசலப் பிரதேசத்திலுள்ளக் குறைவாக மதிப்பிட்டதாக கருதப்படும் ஒரு அழகிய கிராமமாகும். இந்தோ-திபெத்திய எல்லைகளில் அமைந்திருக்கும் இந்தக் கிராமம், 1993 ஆம் ஆண்டு வரையில் யாராலும் அனுமதிக்கப்படாத ஒரு கிராமமாக இருந்து வந்தது. ஆம், இந்தியர்களால் கூட நுழைய முடியாத இந்த தடை செய்யப்பட்டப் பகுதி, இன்று சுற்றுலாப்பயணிகளால் பெரிதும் கவர்ந்து மனதினைக் கொள்ளைக் கொள்ள செய்கிறது.

காசியின் பல முகங்கள்!!!

கட்டுப்பாட்டுகள் அகற்றப்பட்ட இந்தப் பகுதியினைக் காணவரும் மக்கள் மனம், இங்குக் காணும் அழகியக் காட்சிகளால் கட்டுப்பட்டு செயல்படுகிறது என்பதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம். இருப்பினும், இன்றும் வெளிநாட்டு பயணிகள் இந்த இடத்தினை சுற்றிப்பார்க்க முன்பதிவு செய்வது அவசியமாக இருக்கிறது. இந்தப் பகுதி திபெத்தின் கிழக்கில் சூழப்பட்டு காணப்படுவதுடன், குள்ளுவிலிருந்து மேற்கிலும், ஸ்பித்திப் பள்ளத்தாக்கிலிருந்து வடக்கிலும், கர்வால் இமயமலையிலிருந்து தெற்கிலும் அமைந்து நம் கண்களை நாளாப் பக்கமும் காட்சிகளால் கவர்கிறது. கின்னர் பகுதி புத்த மதத்தால் பெரிதும் பாதிக்கபடுகின்றது என்றும் கூறுவர். மேலும் இங்குள்ள மக்கள் ஹிந்து மதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பின்பற்றுவதாகவும் கூறப்படுகிறது.

உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்

சிறந்த இமயமலை, தௌலத்தார், சன்ஸ்கார் ஆகிய மூன்றுப் பெரிய மலைத்தொடர்களும் இந்தக் கின்னர் பகுதியில் அமைந்து நம்மை அன்னாந்துப் பார்க்க வைக்கிறது. கடல் மட்டத்திலிருந்து 6050 மீட்டர் உயரத்தில் காணப்படும் மவுண்ட் கின்னர் கைலாஷ், அகில உலகத்தையே ஆட்டிப்படைக்கும் சிவப்பெருமானின் உறைவிடமென்றும் நம்பப்படுகிறது.

இந்தியாவின் 50 மிகச்சிறந்த பயண புகைப்படங்கள்!!!

இந்த ஒரு காரணத்தினாலே, இவ்விடம் ஹிந்து மதத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என கூறப்படுவதாகவும் பல கதைகள் உண்டு. மேலும் 79 அடி பாறைகளால் ஆன ஒரு பெரிய சிலை சிவ லிங்கத்தினை ஓத்திருக்க, அது மிகவும் பிரசித்திப்பெற்ற ஒன்றாகவும் விளங்கி காண்போரை பக்தி நிரம்ப காட்சிகளைக் கொண்டு அழகுபடுத்துகிறது. இந்த 79 அடி பாறை, நாள் முழுவதும் நிறமி மாறியபடி இருக்க தூய்மையான பரிசுத்த நாளாக மாறி நம்மை நிம்மதியடைய செய்கிறது. மேலும் இங்குள்ள கின்னர் கைலாஷ், கல்பாவிலிருந்து நகர்ந்து ட்ரைய்யுங்க் பள்ளத்தாக்குவரை செல்வதாகவும் சொல்லப்படுகிறது.

கின்னர் கைலாச மலையில் ஒரு தெய்வீகப் பயணம் போக விருப்பமா? உங்களுக்கான அருமையான கைடு இது!!

High Contrast

இந்த ஆன்மீக வழிப்பாட்டினை நாம் உணர ஏதுவானதொருக் காலம்:

மே முதல் அக்டோபர் வரையிலானக் காலங்கள், நம்மை கடவுள் பக்தியினை நோக்கி எந்த ஒரு தங்குதடையுமின்றி வழங்க துணைப்புரிகிறது. பருவமழை காலங்களையும், குளிர் காலங்களையும் தேர்ந்தெடுக்காமல் தவிர்ப்பது மிகவும் நல்லதாகும். ஆம், இந்தக் காலக் கட்டங்களில் வானிலை மாற்றம் காணப்பட, நமக்கு பயணம் செய்ய கொஞ்சம் சிரமம் ஏற்படுவதனால், சூழ் நிலைக்கருதி அதனை தவிர்ப்பது சால சிறந்த ஒன்றாகும்.

இந்தியாவிலுள்ள 10 உயரமான இமயமலை சிகரங்கள்

பயணம் செய்ய நமக்குத் தேவையான அத்தியவாசியப் பொருட்கள் தான் யாவை:

மலை ஏறப் பயன்படும் காலணி வகைகள், முதுகில் மாட்டிக்கொள்ளும் தன்மைக் கொண்ட பைகள், கையுறைகள், கதிரவன் ஒளியிலிருந்துக் காத்துக்கொள்ள உதவும் தொப்பி, சூரியன் நிழல்கள், வெப்பங்கள், LED விளக்கு, மலை ஏற ஏதுவாக இருக்கும் குச்சிகள், கிருமி நாசினி (சோப்), மருந்துகள் அடங்கிய முதலுதவிப் பெட்டி, தண்ணீர் பாட்டில்கள், சிற்றுண்டிகள், கால் உறைகள், கத கதப்பான ஆடைகள் ஆகியவை பயணத்திற்குத் தேவையான அத்தியவாசியப் பொருட்களாக நமக்கு தேவைப்படுகிறது.

இந்த அழகியப் பயணம், இமாசலப் பிரதேசத்தின் கடல் மட்டத்திலிருந்து 7050 அடி உயரத்திலுள்ள டேங்கிலிங்க் கிராமத்தின் சுட்லெஜ் நதிக்கரையில் இனிதே தொடங்கியது. நான் சண்டிகருக்கு விமானத்தின் மூலம் பறந்து சென்று, பேருந்தின் மூலம் மணலியினை அடைந்தேன். அங்கிருந்து காரின் உதவியுடன் புறப்பட்ட நான் கின்னரை அதன் பிறகு அடைந்து பயணத்திற்கு தயாரானேன்.

கின்னர் கைலாச மலையில் ஒரு தெய்வீகப் பயணம் போக விருப்பமா? உங்களுக்கான அருமையான கைடு இது!!

Darshan Simha

நாள் 1: டேங்கிலிங்க் முதல் ஆஷிகி பூங்கா வரை

டேங்கிலிங்க் ஒரு விசித்திரம் நிறைந்த சிறுக் கிராமம் என்பதனை தெரிந்துக்கொள்ளும் நம் மனம் இயற்கைக்கு சிறிது, பெரிது என்ற பாகுபாடு கிடையாது என்பதனைப் புரிந்துக்கொண்டு வியப்படைகிறது. இந்தக் கிராமத்தின் பாடகனாக விளங்கும் சுட்லெஜ் நதியிலிருந்து ஓடும் தண்ணீரின் சத்தம், நம் மனதில் ஒரு சலனத்தை ஏற்படுத்துகிறது. நாங்கள் சரளைச் சாலை வழியாக செல்ல, ஒரு சிறிய ஓடை எங்களை வரவேற்று முன்நடத்தி சென்றது. இந்த ஓடை, கின்னர் கைலாஷ் மலைத்தொடர்ச்சியிலிருந்து நீரின் மூலம் காட்சிகளை கண்களுக்கு இதமாக்குகிறது என்று கூறும்பொழுது மனதில் புதியதோர் உணர்வு பிறந்து நம்மைப் புத்துணர்ச்சி அடைய செய்கிறது.

அங்குக் காணும் அந்த ஓடையினைக் கடக்க நமக்கு சுமார் 2 மணி நேரம் தேவைப்படுகிறது. அந்த ஓடையில் ஓடும் நீரின் நிறமி, நம்மையும் மீறி நாம் கொண்டுவரும் வாட்டர் பாட்டில்களை நிரப்பி ஆஷிகி பூங்காவினை நோக்கி நடக்க தொடங்குகிறோம். நாங்கள் ஒரு செங்குத்தினை நோக்கி ஏறி செல்ல 7 கிலோமீட்டர்களை எதிர்கொண்ட எங்கள் கண்ணிற்கு கைலாஷ் டார்/வார் காட்சியளித்தது. கின்னர் கைலாஷிற்கு செல்லும் ஒரு பாதையாக கருதப்படும் இந்த இடம், இக்காரணத்தினாலே இப்படி ஒரு பெயரைக் கொண்டுப் பெருமையுடன் விளங்குகிறது என்பதும் நமக்குத் தெரியவருகிறது.

நாங்கள் கொஞ்சத் தூரம் நடந்து சென்று பாரா பத்தர் என்னும் இடத்தில் நடைக்கு முற்றுப்புள்ளி வைத்து, அங்குக் கண்ட காட்சிகளை ரசிக்க தொடங்கினோம். தேவதாரு மரங்களை அடங்கிய காடுகளில் ஒரு பெரியப் பாறைக் காணப்படுவதுடன் மீதி இடங்கள், சுற்றுலாப் பயணிகளின் ஓய்வுப்பகுதியாக அமைந்து நம்மை இளைப்பார பெரிதும் உதவுகிறது. நாங்கள் ஓரிருக் கிலோமீட்டர்கள் முன்னோக்கி செல்ல, திடிரென்று நாங்கள் கண்ட மரங்கள் எங்கள் பார்வையை விட்டு விலகி மறைந்து போனது. அதன் பிறகு எங்கள் பார்வைக்கு தென்பட்ட அந்த புல்வெளிகள் எங்கள் மனதினை வருடியதுடன் உடலையும் மெல்ல வருடி இதமானதொரு உணர்வினை தந்தது.

ஆஷிகி பூங்கா கடல் மட்டத்திலிருந்து 11,778 அடி உயரத்தில் அமைந்து புதியதோர் உலகிற்கு நம்மை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது. இந்தப் பூங்காவின் உள்ளே பரந்து விரிந்த புல்வெளிகளும், தங்குவதற்கு ஏதுவான கூடாரங்கள் அமைத்துக்கொள்ள தேவைப்படும் இடங்களும், நம் ஓய்வுக்கு உத்தரவாதம் தந்து பெரிதும் உதவுகிறது. இங்கு நாம் காணும் கின்னர் கைலாஷ் மலைத்தொடர்ச்சி அதிக சௌகரியமான நிலையை தருவதுடன் காட்சியால் பிரமிப்புக்கொள்ளும் நாம், ஒரு பெருமூச்செறிந்து அமைதியடைகிறோம் என்றும் கூறலாம். மேலும் நிலவின் ஒளியில் நாம் காணும் பனியால் பட்டு உடுத்தப்பட்ட மலைகள் அடங்கிய காட்சி, நம்மை இனிமையானதொரு இரவு பொழுதிற்கு வரவேற்று, முகம் தெரியாத நபர்களுடன் சிரித்து மகிழ்ந்து, நாளை பொழுதின் மீது உள்ள எதிர்ப்பார்ப்பினை அதிகரிக்க செய்கிறது.

கின்னர் கைலாச மலையில் ஒரு தெய்வீகப் பயணம் போக விருப்பமா? உங்களுக்கான அருமையான கைடு இது!!

Narender Sharma

நாள் 2: ஆஷிகி பூங்கா முதல் கின்னர் கைலாஷ் வரை

ஆஷிகி பூங்காவிலிருந்து கின்னர் கைலாஷிற்கு நாம் செல்ல 10 கிலோமீட்டர்கள் ஆகிறது. இந்த 10 கிலோமீட்டரை கடக்க நமக்கு தோராயமாக 8 மணி நேரம் தேவைப்படுகிறது. இந்த தூரத்தினை நாம் கடக்க தேவைப்படும் நேரம் என்பது நம்முடைய உடல் தன்மையை பொருத்தே அமைகிறது. நமக்கு நேரம் குறைவாகவே இருப்பதால், கின்னர் கைலாஷிற்கு சென்று காட்சிகளை கண்களால் கைப்பற்றும் நாம், மீண்டும் அதே நாளில் ஆஷிகி பூங்காவினை அடைய வேண்டியது மிகவும் அவசியமாகும். அதனால், இரண்டாம் நாளின் அதிகாலையில் எழுந்து நாம் செல்வது மிக சவுகரியமாக நமக்கு அமைகிறது.

அதுமட்டுமல்லாமல், அதிகாலை பொழுதில் நாம் புறப்பட்டு செல்வது வானிலை மாறுதல்களின் தன்மையையும் நாம் சமாளிக்க பெரிதும் உதவுகிறது. காலைப் பொழுதில் ஓடையில் ஓடும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், குறைந்த நீரினைக்கொண்ட அதிகாலைப்பொழுதில் நாம் புறப்பட்டு செல்வது மிகவும் நல்லதாகும். நாம் 2 கிலோமீட்டர் ஏறியும் இறங்கியும் செல்ல, கடல் மட்டத்திலிருந்து 12,400 அடி உயரத்தில் அமைந்துள்ள பீம் வாரினை கடந்து செல்கிறோம். இந்த 2 கிலோமீட்டர் பயணத்தினை நாம் கடக்க, நமக்கு சுமார் ஒன்றரை மணி நேரம் ஆகிறது. பீம் வார் என்பது ஒரு குகையாகும். இந்தக் குகையின் உள்ளே எந்த ஒரு சிரமமுமின்றி 10 லிருந்து 15 பேர் வரை உள்ளேத் தங்க முடிகிறது.

இதன் அருகில் காணப்படும் ஒரு சிறு ஓடை, நம்மை ஓய்வின் பாதைக்கு அழைத்து ஓடையில் இருந்து வெளிப்படும் நீரினை நாம் கொண்டுசெல்லும் பாட்டில்களில் நிரப்பிக் கொள்ளவும் வழிவகை செய்கிறது. நாம் 3 கிலோமீட்டர் முன்னோக்கி நடக்க, அடுத்ததோர் பயணமாக பார்வதி குன்ட் நம்மை வரவேற்கிறது. இந்த 3 கிலோமீட்டர் பயணத்தினை நாம் கடக்க, நமக்கு சுமார் 3 மணி நேரம் ஆகிறது. இந்த பார்வதி குன்ட் பகுதி, பாறைகளாலும், கற்பாறைகளாலும், பனிகளாலும் கவர்ந்து நம் கண்களை குளிரூட்டுகிறது.

கின்னர் கைலாச மலையில் ஒரு தெய்வீகப் பயணம் போக விருப்பமா? உங்களுக்கான அருமையான கைடு இது!!

Amrita Bhattacharyya

மலைமேல் இருக்கும் ஒரு பனிகள் சூழ்ந்த ஏரி தான் இந்த பார்வதிக் குன்ட் ஏரியாகும். அன்னை பார்வதியின் புகழினை ஓங்கும் வகையில் பெயர் பெற்ற இந்த ஏரி, யாத்திரை தளமாகவும் அமைந்து அருளினை வழங்குகிறது. ஆம், கின்னர் கைலாஷிற்கு திரும்பும் முன், இந்த ஏரியினை நோக்கி பக்தியுடன் வேண்டிக்கொண்டு மன அமைதியுடன் பயணிகள் செல்வதன் மூலம் இந்த ஏரி கடவுள் உறைவிடமாகவும் விளங்குகிறது என்பதனை நம்மால் உணர்ந்துக் கொள்ள முடிகிறது.
பார்வதி ஏரியிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கின்னர் கைலாஷ், மற்றுமொரு வழியான ஏறுவதற்கு செங்குத்தாக அமைந்து 3 கிலோமீட்டர் மூலம் இலக்கினை அடையவும் உதவுகிறது. கின்னர் கைலாஷில் உள்ள சிவலிங்கம் ரீக்கங்க் பியோவையும், காலாவையும் பார்த்த மாதிரி அமைந்து நம்மை பிரமிக்க வைக்கிறது. இந்த அதிசயத்தினை கண்டு வியந்த நாங்கள், கின்னர் கைலாஷில் அமைந்திருக்கும் சிவ லிங்கத்தினை மனதில் வழிபட்டு மீண்டும் ஆஷிகி பூங்காவை நோக்கி கீழே இறங்குகிறோம். பூங்காவினை அடைந்த நாங்கள் அந்த நாள் இரவில், எங்கள் ஒய்வுக் கூடாரத்தினை அமைத்து நாளை மீண்டும் டேங்க்லிங்க் செல்லப்போகும் ஏக்கத்துடன் தூங்கினோம்.
இந்தப் பயணம் எனக்கு புதியதோர் உணர்வினை தந்ததுடன் முகம் தெரியா நண்பர்கள் பலருடன் நேரத்தினை செலவிடவும் மிகவும் துணைப் புரிந்தது என்று தான் சொல்ல வேண்டும். பயணத்திற்கு பயந்து ஒடுங்கும் பலரும் உடல் தைரியத்துடன் சென்று இங்குள்ள சிவலிங்கத்தினை வழிபட்டு திரும்ப, அவர்கள் காணும் காட்சிகள் கண்களை இதமாக்கி மீண்டும் ஓர் இனிமையான பயணத்திற்கு செல்ல வேண்டும் என்றதொரு மன தைரியமும் பெற்று திரும்புகின்றனர். நானும் மீண்டும் இந்த இடத்திற்கு எப்பொழுது வருவேன் என்னும் ஏக்கத்துடன் நினைவுகளை மனதில் சுமந்துக் கொண்டு மன நிறைவுடன் புறப்பட்டேன்.

இந்த மாதம் அல்டிமேட் டாப் 5 கட்டுரைகள்:

உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்

அலறியடித்து ஓட்டம்பிடிக்கும் பக்தர்கள் 6 மணிக்கு மேல் கல்லாகும் மனிதர்கள் எங்கே தெரியுமா?

ஏழுமலையானின் வியப்பூட்டும் மர்மங்கள் குறித்து தெரியுமா?(விடியோ)

திருப்பதியில் இருப்பது உண்மையில் யார் தெரியுமா?

இந்த எடத்துல அணைய போட்டா கர்நாடகா நம்மகிட்ட தண்ணிக்கு கெஞ்சும் இனி!

Read more about: travel, temple