» »கங்கையின் தங்கையா பிரம்மபுத்திரா..? நேர்கோட்டில் அமைந்த சிவன் கோவிலின் மர்மம்...

கங்கையின் தங்கையா பிரம்மபுத்திரா..? நேர்கோட்டில் அமைந்த சிவன் கோவிலின் மர்மம்...

Written By: Sabarish

உலகை ஆளும் கடவுளாக போற்றப்படுபவர் சிவபெருமான். சைவ சமயத்தின் முதற் கடவுள், பிறப்பும், இறப்பும் அல்லாத பரம் பொருளாதலால் பரமசிவன் என அழைக்கப்படுபவர் இவர். கடவுள்களில் ஊழிகாலத்தில் இவர் மட்டுமே நிலைத்திருப்பதால் சதாசிவன் எனப்படுகிறார். இத்தகைய சிறப்புகளைக் கொண்ட சிவனுக்கோ மனைவிகள் இரண்டு என நாம் அறிவோம். அதில் ஒருவர்தான் கங்கா தேவி. ஆனால், இந்தியாவின் வடக்கே அமைந்துள்ள ஓர் பகுதியின் தோற்றத்தால் பிரம்மபுத்திரா கங்கையின் தங்கையா என்ற ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது. ஏன் என பார்க்கலாம் வாங்க...

சிவன் தலையில் குடிகொண்ட கங்கை

சிவன் தலையில் குடிகொண்ட கங்கை


அன்றைய காலத்தில் கங்கையானது பூமியில் ஓடாது. ஆகாய கங்கையாக ஓடியதாக புராணம். முக்காலம் அறிந்த முனிவர் ஒருவர் ஆகாய கங்கையை பூமிக்கு கொண்டு வந்து பகீரதனின் மூதாதையர் அஸ்தியை கரைக்க வேண்டும் என கூற சிவன் தலையில் குடியேறி பூலோகம் வந்தால் கங்கை. இன்றும் சிவனின் தலையிலேயே அவரது இரண்டாவது மனைவியாக உள்ளார் என்பது தொன்மை கால கதைகள்.

Atarax42

கங்கையின் தங்கையா பிரம்மபுத்திரா ?

கங்கையின் தங்கையா பிரம்மபுத்திரா ?


இன்றளவும் கங்கை நதி எங்கே உருவெடுக்கிறது என எவராலும் அறியமுடியவில்லை. ஆனால், கைலாய மலையில் உள்ள மானசரோவர் ஏரியில் இருந்து அது உற்பத்தியாவதாக விஞ்ஞானிகளின் கூற்றுக்கள் மூலம் அறியமுடிகிறது. அதேப்போன்றே கயிலை மலையில் உருவெடுக்கும் பிரம்மபுத்திரா அசாம் வழியாக மேகாலயத்தைக் கடந்து வங்காளவிரிகுடாவில் கலக்கிறது.

Rishav999

மறைந்துள்ள மர்மங்கள்

மறைந்துள்ள மர்மங்கள்


கையிலை மலையில் உருவெடுக்கும் பிரம்மபுத்திரா வழிந்தோடி வரும் அசாமில் நேர்கோட்டில் அமைந்துள்ள சிவ்தோல் சிவசாகர், மகாபாய்ரப் மந்திர், உமாநந்த சிவன், சுக்ரேசர் என நான்கு சிவன் கோவில்களில் பிரம்மபுத்திராவினைக் சிவன் எழுந்தருளியுள்ளதாக அப்பகுதியினரால் நம்பப்படுகிறது.

Supratim Deka

சிவ்தோல் சிவசாகர்

சிவ்தோல் சிவசாகர்


வட இந்தியாவின் மிக முக்கியமான புனித யாத்திரை மையங்களில் ஒன்றான சிவ்தோல் சிவசாகர் கோயில் 1734 ஆம் ஆண்டில் அசாம் வம்சத்தின் ராணியான பா ராஜா அம்பிகாவின் கட்டளையின் கீழ் கட்டப்பட்டதாகும். பிரம்மபுத்திரா அடையும் முதல் சிவன் கோயில் என்ற பெருமையையும் இது பெற்றுளளது. சிவன் மற்றும் விஷ்ணுவிற்காக இக்கோவில் அர்ப்பனிக்கப்பட்டுள்ளது.

Aniruddha Buragohain

மகாபாய்ரப் மந்திர் சிவன் கோவில்

மகாபாய்ரப் மந்திர் சிவன் கோவில்


சிவ்தோல் சிவசாகரில் இருந்து சுமார் 223 கிலோ மீட்டர் தொலைவில் அசாமில் உள்ள தேஜ்பூரில் அமைந்துள்ளது மகாபாய்ரப் மந்திர் சிவன் கோவில். 8 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த சிவன் கோவில் மஹாபிரயரமாக வழிபடப்படுகிறது. நம்பிக்கையின் படி, பாணசுராவின் மன்னர் இந்த கோவிலில் பிரார்த்தனை செய்தார். இந்த கோவிலின் இடிபாடுகளில் இருந்து தற்போதுள்ள கோவில் கட்டப்பட்டுள்ளது. சிவன் லிங்கம் இங்கே சுயம்புவாக உருவானதாக நம்பப்படுகிறது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் ஒவ்வொரு நாளும் இந்த லிங்கம் வளர்ந்து வருவது வியப்பளிக்கிறது.

Bishnu Saikia

சுக்ரேசர் கோவில்

சுக்ரேசர் கோவில்


மகாபாய்ரப் மந்திர் சிவன் கோவிலில் இருந்து சுமார் 164 கிலோ மீட்டர் தொலைவில் குவஹாத்தியில் அமைந்துள்ளது சுக்ரேசர் சிவன் ஆலயம். பிரம்மபுத்திரா நதியின் அருகே ஒரு மலையின் மேல் அமைந்துள்ள இது 18 ஆம் நூற்றாண்டில் கட்டமைக்கப்பட்டதாகும். அப்பகுதியில் மிகவும் பிரசிதிபெற்ற கோவில்களில் ஒன்றான இது உள்ளது.

D. Konwar

உமாநந்த சிவன்

உமாநந்த சிவன்


சுக்ரேசர் கோவிலுக்கு அருகிலேயே அமைந்துள்ள இக்கோவிலை அடைவது சற்று கடினமான ஒன்றாகும். ஏனெனில் பிரம்மபுத்திரா நதியின் மத்தியில் ஒரு தீவுத் திட்டில் அமைந்துள்ளது உமாநந்தா கோவில். மேலும், இத்தீவு உலகின் மிகச் சிறிய வசிப்பிடமாகவும் உள்ளது. அசாம் வம்ச அரசர் கதார் சிங்கால் கட்டப்பட்டதாக நம்பப்படும் இது அசாமில் உள்ள மிக முக்கியமான சிவன் கோவில்களில் ஒன்றாகும். புரம்மபுத்திராவுடன் சிவன் இணையும் பொருளாக இக்கோவில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

Subhrajit

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்