Search
  • Follow NativePlanet
Share
» »உறையும் பனிக்காற்றில் உல்லாசமா இருக்க இத டிரை பண்ணி பாருங்க..!

உறையும் பனிக்காற்றில் உல்லாசமா இருக்க இத டிரை பண்ணி பாருங்க..!

எந்த நேரமும் பொழியும் பனி, 15.5 டிகிரியில் இருந்து 25.5 டிகிரி செல்சியஸ் வரை குளிர், நாள் முழுவதும் கதகதப்பான அரவணைப்பு, கண்ணை மூடி யோசிச்சு பார்த்தாளே உடல் ஜிவ்வுன்னு இருக்கு. இப்படிப்பட்ட இடத்திற்கு உன்மையாவே சென்று பார்த்தால், அதுவும் மனதிற்கு விருப்பமானவர்களுடன், மனைவியுடன் எப்படி இருக்கும். ஹன்மூனுக்கு இடம் தேடிட்டு இருக்குற புதுமனத் தம்பதியா இருந்தா சொல்லவே வேண்டாம். கல்லூரி நண்பர்களுடன் சுற்றுலா செல்லும் இளைஞர்களாக இருந்தாலும் சரி, ஹனிமூன் ஜோடிகளுக்கும் சரி... அனைத்துத் தரப்பு பயணிகளையும் உல்லாசமா வச்சுக்குற ஒரு சுற்றுலாத் தலம் என்றால் அது தௌலதார் மலையின் ரம்மியமான மலைப்பிரதேசங்களில் அமைந்துள்ள டல்ஹெளசி தான். வாருங்கள், அங்கே அப்படி என்னதான் உள்ளது என ஒரு முறை பார்த்து வருவோம்.

டல்ஹௌசி

டல்ஹௌசி

டல்ஹௌசி பகுதியில் சுற்றுலா பயணிகளின் மனதை கவரும் வகையில் குறிப்பிடத்தக்க இடங்கள் பல இருக்கின்றன. சுபாஷ் சௌக்கில் உள்ள செயின்ட் பிரான்சிஸ் சர்ச், காந்தி சௌக்கில் உள்ள செயின்ட் ஜான் சர்ச்ம் டல்ஹெளசிக்கு வரும் சுற்றுலா பயணிகளால் அதிகம் விருப்பத்ததுடன் பார்வையிடப்படும் இடங்களாகும். ஜான்ந்திரிகாட்-ல் உள்ள சம்பா ஆட்சியாளர்களின் அரண்மனை கட்டிடக்கலையின் தனிச்சிறப்பினை அழகுற எடுத்துக்காட்டும் இடமாக இருப்பதால் பல்வேறு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக இருக்கிறது. இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களான அஜித்சிங் மற்றும் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோருடன் மிகவும் தொடர்புடைய இடங்களான பஞ்ச்புலா மற்றும் சுபாஷ் பாவ்லி ஆகியவையும் சுற்றுலாப் பயணிகளால் அதிகம் பார்க்கப்படும் இடங்களாகும்.

Wittystef

சாகச விளையாட்டுக்கள்

சாகச விளையாட்டுக்கள்

இந்த இடங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் இவ்விடத்தின் ரம்மியமான அழகை ரசித்திடுவதோடு மட்டுமல்லாமல், பல்வேறு சாகச விளையாட்டுகளையும் விளையாட முடிகிறது. ட்ரியண்ட், தர்மாசாலா, பைய்ஜ்நாத், பிர் மற்றும் பைலிங் ஆகிய இடங்கள் சுற்றுலா பயணிகள் காண்பதற்கு ஏற்ற முக்கிய இடங்களாகும். மேலும், சோபியா கணவாய், காந்தி சௌக், பார்மர், கரம் சடக், ஆலா நீர்த் தேக்கம், காஞ்சி பஹாரி மற்றும் பஜ்ரேஸ்வரி தேவி கோவில் ஆகியவை டல்ஹெளசிக்கு வரும் சுற்றுலா பயணிகளை பிராதனமாக கவரும் இடங்களாகும்.

Truewebsolution

பூரிசிங் அருங்காட்சியகம்

பூரிசிங் அருங்காட்சியகம்

பூரிசிங் அருங்காட்சியகம் சுற்றுலாப் பயணிகளை டல்ஹௌசியை நோக்கி ஈர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அரசர் ராஜா பூரியினால் இந்த அருங்காட்சியகத்திற்கு வழங்கப்பட்ட அழகிய ஓவியங்கள், ஓவிய விரும்பிகளின் பார்வைக்கு விருந்தாக அமையும். சம்பாவைப் பற்றிய தகவல்களடங்கிய கல்வறை பதிவுகளை சர்தா எழுத்துகளில் இங்கே காண முடியும்.

Amareshwara Sainadh

ரங் மஹால்

ரங் மஹால்

முகலாய மற்றும் பிரிட்டிஷ் கட்டிடக்கலைகளை ஒருங்கே இணைத்து ராஜா உமேத் சிங்கினால் கட்டப்பட்ட ரங் மஹால் இந்த பகுதிகளில் புகழ் பெற்ற இடமாகும். கிருஷ்ண பகவானின் வாழ்க்கைச் சம்பவங்களை சித்தரிக்கும் பஞ்சாபி பாணியிலான சுவரோவியங்களும் இங்கே சுற்றுலா பயணிகளை முதன்மையாக ஈர்க்கும் வகையில் இருக்கும். மேலும், கைகளால் செய்யப்பட்ட ரூமால்ஸ் என்றழைக்கப்படும் கைக்குட்டைகளையும், மரத்தறியால் நெய்யப்பட்ட சால்வைகள் மற்றும் செருப்புகளையும் இந்த அருங்காட்சியகத்திற்குள் உள்ள ஹிமாச்சல் எம்போரியத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் வாங்க முடியும்.

Priyankasingha1811

எப்போது செல்லலாம் ?

எப்போது செல்லலாம் ?

மலைகளால் சூழப்பட்டுள்ள டல்ஹெளசி நகரம் மழைக்காலங்களில் பிரமிக்கத் வைக்கும் காட்சிகளை விருந்தளிக்க வல்லது. இங்கே ஜுன் மாதம் துவங்கும் மழை செப்டம்பர் மாதத்தின் இறுதிவரை தொடர்வதைக் காணலாம். இந்த மழைக்காலங்களில் நகரின் வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸிலிருந்து 1 டிகிரி செல்சியஸ் வரை கொண்டதாக டல்ஹெளசி இருக்கும். டல்ஹெளசி 2700 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளதால் இந்த காலங்களில் கடுமையான பனிப்பொழிவு இருக்கும்.

Mayuresham

டாய்ன்குன்ட் சிகரம்

டாய்ன்குன்ட் சிகரம்

டல்ஹெளசியின் மிக உயர்ந்த சிகரமான டாய்ன்குன்ட் சிகரம் கடல் மட்டத்தில் இருந்து 2755 மீட்டர் அமைந்திருக்கிறது. நகரத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த இடம் அதன் இயற்கையழகிற்காக மிகவும் பெருமை பெற்ற இடமாகும். இந்த சிகரத்தின் உச்சியிலிருந்து கிடைக்கும் காட்சி காண்பவரின் கண்களை பிரமிக்கச் செய்வதாக இருக்கும்.

Piyush Tripathi

காலாடாப்

காலாடாப்

காலாடாப் டல்ஹெளசியின் முக்கியச் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். இந்த இடத்தில் வருடம் முழுவதும் பனிப்பொழிவு இருக்கும். பனியின் காரணமாக ஒரு குறிப்பிட்ட தொலைவில் இருப்பதை மட்டுமே காண முடியும். இதனால், வாகனத்தில் இப்பகுதிக்குச் செல்வதை விட நடந்து செல்வதே வசதியானதாக இருக்கும். சாகசத்ததை விரும்புபவர்கள் மலையேற்றத்தில் பயிற்சி பெற்றவர்களை துணைக்கு வைத்துக் கொண்டு 3 நாட்களில் கஜ்ஜாரை அடைய முடியும். மலையேற்றத்தை விரும்பாதவர்கள் இந்த இடத்தின் இயற்கையழகை கண்டு ரசித்திடலாம். மேல் நகோரோட்டா மலைகளின் வழியாக சுற்றுலாபயணிகள் லக்கரமாண்டியை அடைந்திட முடியும். இந்த இடத்திற்கு செல்லும் வழியில் சுற்றுலாபயணிகள் திபெத்திய கைவினைப் பொருட்கள் கிடைக்கும் மையத்தையும், டல்ஹெளசி உருளைக்கிழங்கு பண்ணையையும் மற்றும் டல்ஹெளசி நீர்திட்டத்தையும் பார்க்கும் வாய்ப்புகள் கிடைக்கும்.

Ashish Sharma

பார்மர்

பார்மர்

பார்மர், சம்பாவில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஹிமாச்சல பிரதேசத்தின், கட்டி வகை பழங்குடியினர்கள் பெரும்பான்மையாக இருக்கும் பகுதியாகும். ஒரு காலத்தில் சம்பாவின் தலைநகரமாகவும் இருந்த பெருமை இதுக்கு உள்ளது. பயணிகள் இந்த இடத்திலிருந்தவாறே சுற்றுவட்டத்தில் உள்ள சிகரங்கள், கோவில்கள் மற்றும் இயற்கையழகை ரசிக்க முடியும்.

Varun Shiv Kapur

1000 ஆண்டு கடந்த லக்சா தேவி

1000 ஆண்டு கடந்த லக்சா தேவி

1000 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த கோவில்களை கொண்டிருப்பது இந்த இடத்தை நோக்கி சுற்றுலாபயணிகள் வருவதை மிகவும் ஊக்குவிக்கிறது. இங்குள்ள லக்சா தேவி மற்றும் கணேஷ் கோவில்கள் அவற்றின் கட்டிடக் கலைநயத்திற்காக மிகவும் புகழ் பெற்றவையாகும். 4 கிலோ மீட்டர் மலையேற்ற பயண தூரத்தில் உள்ள சாவ்ராசி கோவிலும் பார்வையாளர்களை கவரும் மற்றொரு இடமாகும். மணிமகேஷ் யாத்திரை மேற்கொள்ளும் பயணிகள், 35 கிலோ மீட்டர் மேல் நோக்கிய மலையேற்ற பயணத்திற்குப் பிறகு அங்கு அமைந்துள்ள மணிமகேஷ் புனித ஏரியில் குளிப்பது அவர்களுக்கு ஒரு மிகச்சிறந்த அனுபவமாக இருக்கும்.

Jaryal007

கஜ்ஜார்

கஜ்ஜார்

சாகசத்தை விரும்புபவர்களுக்கு விருந்தளிக்கக் கூடிய இந்த கஜ்ஜார் பகுதியை காலாடாப்பில் இருந்து மூன்று நாட்கள் மலையேற்றம் செய்வதன் மூலம் அடைந்து விட முடியும். இந்த 3 நாள் மலையேற்றப் பயணத்தின் போது பயணிகள் வெண்பனி மூடிய நிலப்பகுதிகளின் அழகில் தங்களையே மெய்மறக்கக் கூடும்.

Wittystef

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more