Search
  • Follow NativePlanet
Share

டல்ஹெளசி – காலத்தை கடந்த வசீகர நகரம்

71

ஹிமாச்சல பிரதேசத்தின் தௌலதார் மலையின் ரம்மியமான மலைப்பிரதேசங்களில் அமைந்துள்ள இடம் தான் டல்ஹெளசி. பிரிட்டிஷ் அரசாங்கத்தில் கவர்னர்-ஜெனரலாக இருந்த டல்ஹெளசி பிரபு தனது கோடை காலங்களை சிறப்பாக செலவிடுவதற்காக உருவாக்கிய நகரம் தான் இது. சம்பல் மாவட்டத்தின் நுழைவாயில் என்றும் அறியப்படும் இந்த டல்ஹெளசி நகரம், காத்லாக், போர்ட்ரெயன், தெஹ்ரா, பக்ரோட்டா மற்றும் பலூன் ஆகிய ஐந்து குன்றுகளின் மேலே 13 கிலோ மீட்டர்கள் பரப்பளவில் நீண்டுள்ளது.

தௌலதார் மலைப்பகுதிகளை பிரிட்டிஷார் அவர்களுடைய மக்கள் குடியயேறுவதற்குரிய இடமாக தேர்வு செய்தனர். அந்த காலகட்டத்தில் பிரிட்டிஷ் சாம்ரஜ்யத்தின் தளபதியாக இருந்த நேப்பியர் பிரபு என்பவர் சம்பா மலைப்பகுதிகளில் நிலவி வந்த நாள்பட்ட நோய்களுக்கு வைத்தியம் செய்வதற்காக ஒரு மருத்துவமனையையும் ஏற்படுத்த பரிந்துரை செய்தார்.

இந்த பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் மனதை கவரும் வகையில் குறிப்பிடத்தக்க இடங்கள் பல இருக்கின்றன. சுபாஷ் சௌக்கில் உள்ள செயின்ட் பிரான்சிஸ் சர்ச்-ம், காந்தி சௌக்கில் உள்ள செயின்ட் ஜான் சர்ச்-ம் டல்ஹெளசிக்கு வரும் சுற்றுலா பயணிகளால் அதிகம் விருப்பத்ததுடன் பார்வையிடப்படும் இடங்களாகும்.

ஜான்ந்திரிகாட்-ல் உள்ள சம்பா ஆட்சியாளர்களின் அரண்மனை கட்டிடக்கலையின் தனிச்சிறப்பினை அழகுற எடுத்துக்காட்டும் இடமாக இருப்பதால் பல்வேறு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக இருக்கிறது.

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களான அஜித்சிங் மற்றும் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோருடன் மிகவும் தொடர்புடைய இடங்களான பஞ்ச்புலா மற்றும் சுபாஷ் பாவ்லி ஆகியவையும் சுற்றுலாப் பயணிகளால் அதிகம் பார்க்கப்படும் இடங்களாகும்.

இந்த இடங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் இவ்விடத்தின் ரம்மியமான அழகை ரசித்திடுவதோடு மட்டுமல்லாமல், பல்வேறு சாகச விளையாட்டுகளையும் விளையாட முடிகிறது.

ட்ரியண்ட், தர்மாசாலா, பைய்ஜ்நாத், பிர் மற்றும் பைலிங் ஆகிய இடங்கள் சுற்றுலா பயணிகள் காண்பதற்கு ஏற்ற முக்கிய இடங்களாகும். மேலும், சோபியா கணவாய், காந்தி சௌக், பார்மர், சம்பா ர்P, கரம் சடக், ஆலா நீர்த் தேக்கம், காஞ்சி பஹாரி மற்றும் பஜ்ரேஸ்வரி தேவி கோவில் ஆகியவை டல்ஹெளசிக்கு வரும் சுற்றுலா பயணிகளை முதன்மையாக கவரும் இடங்களாகும்.

1908-ம் ஆண்டு கட்டப்பட்ட பூரிசிங் அருங்காட்சியகம் சுற்றுலாப் பயணிகளை கவரும் மற்றுமொரு இடமாகும். அரசர் ராஜா பூரியினால் இந்த அருங்காட்சியகத்திற்கு வழங்கப்பட்ட அழகிய ஓவியங்கள், ஓவிய விரும்பிகளின் பார்வைக்கு விருந்தாக அமையும்.

சம்பாவைப் பற்றிய தகவல்களடங்கிய கல்வறை பதிவுகளை சர்தா எழுத்துகளில் இங்கே காண முடியும். முகலாய மற்றும் பிரிட்டிஷ் கட்டிடக்கலைகளை ஒருங்கே இணைத்து ராஜா உமேத் சிங்கினால் கட்டப்பட்ட ரங் மஹால் இந்த பகுதிகளில் புகழ் பெற்ற இடமாகும்.

கிருஷ்ண பகவானின் வாழ்க்கைச் சம்பவங்களை சித்தரிக்கும் பஞ்சாபி பாணியிலான சுவரோவியங்களும் இங்கே சுற்றுலா பயணிகளை முதன்மையாக ஈர்க்கும் வகையில் இருக்கும்.

மேலும், கைகளால் செய்யப்பட்ட ரூமால்ஸ் என்றழைக்கப்படும் கைக்குட்டைகளையும், மரத்தறியால் நெய்யப்பட்ட சால்வைகள் மற்றும் செருப்புகளையும் இந்த அருங்காட்சியகத்திற்குள் உள்ள ஹிமாச்சல் எம்போரியத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் வாங்க முடியும்.

வருடத்தின் அனைத்து மாதங்களுமே டல்ஹெளசி நகரம் அற்புதமான சீதோஷ்ணத்துடன் இருக்கும். மார்ச் முதல் மே மாதம் வரை இருக்கும் கோடைகாலங்களில் இந்த இடத்தின் வெப்பநிலை 15.5 டிகிரி செல்சியஸிலிருந்து 25.5 டிகிரி செல்சியஸ் வரை மட்டுமே என்பதை கேட்கும் போது இப்பொழுதே அங்கு செல்ல தோன்றுகிறதா?

பெரும்பாலனா சுற்றுலாப் பயணிகள் மேற்கண்ட மாதங்களில் இங்கு வந்து தங்கி அருமையான தட்பவெப்பநிலையையும் மற்றும் கண்கவரும் காட்சிகளையும் முழுமையாக கண்களால் பருகி மகிழ்கிறார்கள். மலைகளால் சூழப்பட்டுள்ள டல்ஹெளசி நகரம் மழைக்காலங்களில் பிரமிக்கத் தக்க காட்சிகளை விருந்தளிக்க வல்லது. இங்கே ஜுன் மாதம் துவங்கும் மழை செப்டம்பர் மாதத்தின் இறுதிவரை தொடர்வதைக் காணலாம்.

இந்த மழைக்காலங்களில் நகரின் வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸிலிருந்து 1 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலையை கொண்டதாக டல்ஹெளசி இருக்கும். டல்ஹெளசி 2700 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளதால் இந்த காலங்களில் கடுமையான பனிப்பொழிவு இருக்கும்.

டல்ஹெளசி இந்தியத் தலைநகரம் டெல்லியிலிருந்து 563 கிமீ தொலைவிலும், அமர்தசரஸில் இருந்து 191 கிமீ தொலைவிலும், சம்பாவில் இருந்து 43 கிமீ தொலைவிலும் மற்றும் சண்டிகரில் இருந்து 315 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.

மிக அருகில் உள்ள விமான நிலையமாக, புது டெல்லி விமான நிலையத்துடன் மட்டுமே நேரடி தொடர்பில் உள்ள பதான்கோட் விமான நிலையம், டல்ஹெளசியில் இருந்து சுமார் 80 கிமீ தொலைவில் உள்ளது.

அதே சமயம், 180 கிமீ தொலைவில் உள்ள எல்லா நகரங்களுக்கும் செல்லும் விமான வசதிகளை உடைய ஜம்மு விமான நிலையத்திற்கும் டல்ஹெளசியில் இருந்து செல்ல முடியும்.

இரயில் மூலம் வர நினைக்கும் சுற்றுலா பயணிகளுக்கு 80 கிமீ தொலைவில் உள்ள பதான்கோட் தான் சிறந்த மையமான இடமாகும். இங்கிருந்து டெல்லி, மும்பை மற்றும் அமிர்தசரஸ் ஆகிய இடங்களுக்கு நேரடி ரயில் வசதிகள் உள்ளன.

சாலைப் போக்குவரத்து வாயிலாக டல்ஹெளசிக்கு செல்ல விரும்புபவாகள் அருகிலுள்ள நகரங்களில் இருந்து வந்து சேரலாம். டல்ஹெளசியில் இருந்து 560 கிமீ தூரத்தில் உள்ள, தலைநகரம் டெல்லியில் இருந்து தொடர்ச்சியாக பேருந்து வசதிகள் உள்ளன.

டல்ஹெளசி சிறப்பு

டல்ஹெளசி வானிலை

சிறந்த காலநிலை டல்ஹெளசி

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது டல்ஹெளசி

  • சாலை வழியாக
    டல்ஹெளசி சாலைப் போக்குவரத்து வாயிலாக அருகிலுள்ள பல்வேறு நகரங்களுடன் சிறந்த வகையில் இணைந்துள்ளது. 560 கிமீ தூரத்தில் உள்ள, தலைநகரம் டெல்லியில் இருந்து தொடர்ச்சியாக இயக்கப்படும் சொகுசு பேருந்துகளை பயன்படுத்தி டல்ஹெளசி நகரை அடையவும் முடியும். குளிர்பதன பேருந்துகளில் டெல்லியில் இருந்து டல்ஹெளசி செல்வதற்கு சுமார் ரூ.1500/- செலவாகும்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    இரயில் மூலம் வர நினைக்கும் சுற்றுலா பயணிகளுக்கு 80 கிமீ தொலைவில் உள்ள பதான்கோட் தான் சிறந்த மையமான இடமாகும். இங்கிருந்து டெல்லி, மும்பாய் மற்றும் அமிர்தசரஸ் ஆகிய இடங்களுக்கு நேரடி இரயில் வசதிகள் உள்ளன. மேலும் பதான் கோட்டில் இருந்து டல்ஹெளசிக்கு ரூ.1000/- செலவில் டாக்ஸிகளை அமர்த்திக் கொண்டும் செல்லலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    டல்ஹெளசியில் இருந்து சுமார் 80 கிமீ தொலைவில் உள்ள பதான்கோட் விமான நிலையம் மிகவும் அருகிலுள்ள விமான நிலையமாக உள்ளது. இந்த விமான நிலையம் புது டெல்லி விமான நிலையத்துடன் மட்டுமே நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. டல்ஹெளசியலிருந்து 180 கிமீ தொலைவில் உள்ள ஜம்மு விமான நிலையத்திலிருந்து வட இந்தியாவின் எல்லா முக்கிய நகரங்களுக்கும் விமான சேவைகள் உள்ளன. இந்திரா காந்தி விமான நிலையம் டல்ஹெளசியை வெளிநாடுகளுடன் இணைக்கும் இடமாக உள்ளது.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Apr,Fri
Return On
20 Apr,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Apr,Fri
Check Out
20 Apr,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Apr,Fri
Return On
20 Apr,Sat