வருடம் முழுவதும் உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் வகையில், ஈரோடு மாவட்டத்தில் பல சுற்றுலாத் தலங்கள் அமைந்துள்ளன. அவற்றுள், திண்டல் முருகன் கோவில், கஸ்தூரி அரங்கநாதர் கோவில், பாரியூர் கொண்டத்து மாரியம்மன் கோவில் உள்ளிட்டவை பிரசிதிபெற்ற ஆன்மீகத் தலங்கள். சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்தை அதிகமாக ஈர்க்கும் புகழ் பெற்ற அணைக்கட்டுகளாக பவானி சாகர் மற்றும் கொடிவேரி அணைக்கட்டுகள் உள்ளன. மேலும், காட்டுயிர் பயணங்களுக்கு ஏற்றவாறு வெள்ளோடு பறவைகள் சரணாலயம், அரசு அருங்காட்சியகம், கரடியூர் காட்சி முனை, பண்ணாரி உள்ளது. இத்தகைய ஈரோட்டுக்கு சுற்றுலா செல்ல தகுந்த காலம் கோடை காலமே. இங்குள்ள நீர்த்தேக்கத்தில் உடல் சோர்வைப் போக்கும் ஆயில் மசாஜுடன் குளித்து மகிழ இந்த கோடை காலத்தில் சின்னதா பயணம் செய்யலாமா.!!!

கொடிவேரி அணை
இயற்கை எழில் சூழ்ந்த கொடிவேரியில், பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளதுதான் கொடிவேரி அணை. நான்கு நூற்றாண்டு கடந்த நிலையிலும் கட்டிட நுட்பத்திற்கு சவால்விடும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ள இதில், கருங்கல்லின் நடுவில் துளையிட்டு, கற்கள் நகராவண்ணம் இரும்பு கம்பிகளால் இணைக்கப்பட்டு முற்றிலும் இயற்கையான முறையில் கட்டப்பட்டுள்ளது. அணையில் ஆண், பெண் என இருபாலரும் எவ்வித அச்சமுமின்றி குளித்து மகிழ தனித்தனியாக பாதுகாப்பான இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
Magentic Manifestations

சுட சுட மீன் வருவல்
அணையின் நுழைவு வாயிலிலேயே குளிர்ச்சியான இளநீர், நுங்கு விற்பனை ஜோராக இருக்கும். மேலும், அணையில் பிடிக்கப்பட்டு அப்போதே சுத்தம் செய்து காரமான மசாலாவுடன் பொறித்த மீன்கள், சுடச்சுட வறுவலாக கிடைக்கும்.
Thamizhpparithi Maari

பரிசல் பயணம்
கொடிவேரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் முபமையான திருப்தியை அடைவதற்காகவே பத்திற்கும் மேற்பட்ட பரிசல் வசதிகள் இங்கே ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒரு மணி நேரத்துக்கு நபருக்கு 50 ரூபாயில் இருந்து வசூலிக்கப்பட்டாலும் சுமார் ஒரு கிலோ மிட்டர் இருபுரமும் மரங்கள் சூழ்ந்த ஆற்றில் பயணம் செய்வது ரம்மியமான காட்சியாக இருக்கும்.
Thamizhpparithi Maari

சூட்டைத் தனிக்கும் ஆயில் மசாஜ்
சுற்றுலா பயணிகளுக்கு புத்துணர்வை அளித்து, கோடையினால் ஏற்பட்டுள்ள உடல் சூட்டைப் போக்குவதற்கே மசாஜ் செய்பவர்களும் இப்பகுதியில் இருப்பர். ஆயில் மசாஜ் செய்ய ஒரு நபருக்கு ரூ.50 முதல் ரூ.100 வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பெரிய, பெரிய தலைநகரங்களில் மசாஜுக்கு என வசூலிக்கப்படும் கட்டணத்தை விட இது மிகக் குறைவு என்பதால் பயணிகளின் எண்ணைக்கை கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். சுமார் ஒரு மணி நேர எண்ணெய் மசாஜுக்குப் பிறகு அருவி போல் கொட்டும் அணை நீரில் விளையாடி பாருங்கள், ஆண்டு முழுவதும் உடலில் குடிகொண்ட சோர்வும், வலியும் நீங்கி, ஒருவித புத்துணர்வு நிலவும்.

எப்படிச் செல்வது ?
கொடிவேரி அணைக்கட்டானது கோபியில் இருந்து சுமார் 13 கிலோ மீட்டர் தொலைவிலும், சத்தியமங்கலத்தில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ஈரோடு, திருப்பூர் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நல்ல முறையில் கொடிவேரி இணைக்கப்பட்டுள்ளது.

பவானிசாகர் அணை
ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய மண் அணை என்னும் புகழைப் பெற்றது நம் ஈரோட்டில் உள்ள பவானிசாகர் அணை. சுமார் 9 கிலோ மீட்டர் நீளமும், 120 அடி உயரமும் கொண்ட இந்த அணையில் 36 டிஎம்சி அளவிற்கு தண்ணீரை தேக்கிவைக்கும கொள்ளளவு உள்ளது. கேரளா மற்றும் தமிழக மலைத் தொடரில் உள்ள நீலகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழையால் பவானி ஆறு மற்றும் மோயாறு ஆகிய 2 ஆறுகள் மூலம் பவானிசாகருக்கு நீர்வரத்து கிடைக்கிறது. அணையின் முன்புறம் பல ஏக்கர் பரப்பளவில் பெரியவர்கள், குழந்தைகள், குறிப்பாக காதர்கலைக் கவரும் அழகிய பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் பிரசித்திபெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவிலும் உள்ளது.
JayakanthanG

எப்படிச் செல்வது ?
ஈரோட்டில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவிலும், கோவையில் இருந்து 71 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ள பவானி சாகர் அணை. சென்னை மற்றும் மாநிலத்தின் பிறபகுதிகளில் இருந்து ஈரோட்டுக்கு ரயில் மற்றும் பஸ் வசதி உள்ளது. ஈரோட்டில் இருந்து வருபவர்கள் கோபி, சத்தியமங்கலம் வழியாக இத்தலத்தை அடையலாம். கோவையில் இருந்து அன்னூர், புளியம்பட்டி வழியாக பண்ணாரி செல்லும் அனைத்து பேருந்துகளிலும் செல்லலாம்.

சத்தி - பவானி சாகர்
சத்தியமங்கலத்தில் இருந்து பவானிசாகருக்கு அரை மணி நேரத்திற்கு ஒருமுறை என பேருந்து வசதகள் உள்ளது. நீலகிரியில் இருந்து வருவோர் கூட மேட்டுப்பாளையம் வழியாக எளிதில் அணையை வந்தடையலாம்.

வெள்ளோடு பறவைகள் சரணாலயம்
ஈரோட்டில் இருந்து வெள்ளோடு செல்லும சாலையில் அமைந்துள்ளது வெள்ளோடு பறவைகள் சரணாலயம். சுமார் 200 ஏக்கர் பரப்பளவு கொண்ட இங்கு ஆண்டுதோறும் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதங்களில் வெளிநாட்டு பறவைகளைக் காண முடியும். கூழக்கடா, நெடுங்கால் உள்ளான், வண்ண நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன் போன்ற வெளிநாட்டு பறவைகளை இங்கு கண்டு ரசிக்கலாம்.
Shivramsagar



Click it and Unblock the Notifications





