» »மராட்டிய காடுகளில் மனம் மயக்கும் சுற்றுலா #காட்டுயிர்வாழ்க்கை 15

மராட்டிய காடுகளில் மனம் மயக்கும் சுற்றுலா #காட்டுயிர்வாழ்க்கை 15

Written By: Udhaya

மகாராஷ்டிர மாநிலத்தின் தனித்தன்மையே அதன் வியக்கத்தகு வேற்றுமையில் தான் அடங்கியிருக்கிறது. அதன் பனி படர்ந்த மலைகளும், பசுமையான அடர்வனங்களும், பிரம்மாண்டமான கோட்டைகளும், மதச் சிறப்புகளும் அதற்கே உரிய சிறப்பியல்புகள். மகாராஷ்டிராவில் உள்ள 350 கோட்டைகளும் மராட்டிய மன்னர்களின் வீரத்தை உலகுக்கு எடுத்துரைத்துக் கொண்டிருக்கிறது. இதில் ஏறக்குறைய 13 கோட்டைகள் சத்ரபதி சிவாஜியின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது.

குஜராத் மாநிலத்தின் காடுகளுக்கு ஒரு கலகல பயணம் போகலாமா? #காட்டுயிர்வாழ்க்கை 14

சிவன் கோயில்

சிவன் கோயில்

புனே நகரத்துக்கு அருகில், கேட் எனுமிடத்திலிருந்து 568 கி.மீ வடமேற்கில், ஷிரதாவ்ன் எனும் கிராமத்தில் 3,250 அடி உயரத்தில் சிவன் கோயில் அமைந்துள்ளது. கம்பீரமான சஹயாத்திரி மலைப்பகுதியில் இந்த கோயில் எழுப்பப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பீமாஷங்கர் ஸ்தலமானது பீமா ஆறு உற்பத்தியாகும் இடமாகவும் கருதப்படுகிறது. இந்த ஆறு தென்கிழக்காக பாய்ந்து இறுதியில் கிருஷ்ணா ஆற்றுடன் கலக்கிறது.

ସୁରଥ କୁମାର ପାଢ଼ୀ

மன்மோத் மலைகள்

மன்மோத் மலைகள்

ஆயிரம் மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த மன்மோத் மலைகள் பலவிதமான புராதன பாறைக்குறிப்புகள் மற்றும் பாறைச்சிற்ப வடிவங்களை கொண்டுள்ளது. இந்த மன்மோத் மலை பீமாஷங்கர் பகுதியில் அமைந்துள்ளது. இந்த பாறைச் சிற்ப வடிவமைப்புகள் பெரும்பாலும் புனித ஜோதிர்லிங்க கோயிலுடன் சம்பந்தம் உடையனவாய் காட்சியளிக்கின்றன. இங்குள்ள எல்லா பாறைச்சிற்ப வடிவமைப்புகளும் பாரம்பரிய புத்த பிரிவு சிற்பக்கலை பாணியில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 கர்னாலா

கர்னாலா

சுற்றுலாப்பயணிகள் ஒரு மலைவாசஸ்தலத்தில் எதிர்பார்க்கும் இனிமையான குளுமையான பருவநிலை இந்தப்பகுதியில் வருடமுழுவதும் நிலவுகிறது. எனவே மழை பெய்தாலும் வெயில் அடித்தாலும் எப்போதும் சீதோஷ்ணநிலை இதமாக பயணிகளை வரவேற்கும் இயல்புடன் உள்ளது. மழைக்காலத்தில் இப்பகுதியின் இயற்கை அழகு இன்னும் பசுமையுடன் பளிச்சென்று எழிலுடன் திகழ்கிறது.

Anil R

பறவைகள்

பறவைகள்

குளிர்காலத்தில் இங்கு சில விசேஷமான புகலிட பறவைகளை காணலாம். கர்னாலா மலை நகரமானது ஒரு சிறிய விடுமுறைப்பயணத்துக்கோ அல்லது வார இறுதி சிற்றுலாவுக்கோ மிகவும் ஏற்ற இடமாக உள்ளது. சாலை, ரயில் மற்றும் விமான மார்க்கமாக எளிதில் செல்லும் வகையில் இது போக்குவரது வசதிகளை கொண்டுள்ளது.மும்பையிலிருந்து 60 கி.மீ தூரத்திலும் பான்வெல் நகரத்திலிருந்து 10 கி.மீ தூரத்திலும் கர்னாலா நகரம் உள்ளது.

Dupinder singh

தோஸேகார் நீர்வீழ்ச்சி

தோஸேகார் நீர்வீழ்ச்சி

இந்த தோஸேகார் நீர்வீழ்ச்சி சுற்றுலாப்பயணிகளிடையே பிரசித்தமான பிக்னிக் ஸ்தலமாக அறியப்படுகிறது. சதாராவிலிருந்து 35 கி.மீ தூரத்தில் உள்ள இந்த நீர்வீழ்ச்சிப்பகுதி மழைக்காலத்தில் இயற்கை எழிலுடன் காட்சியளிக்கிறது. அற்புதமான இயற்கை அழகுடன் காட்சியளிக்கும் இந்த நீர்வீழ்ச்சிப்பகுதிக்கு பயணிகள் அதிக அளவில் விஜயம் செய்கின்றனர். நீர்வீழ்ச்சியிலிருந்து தெறிக்கும் நீர்ச்சிதறல்களுடன் இப்பகுதி மிகக்குளுமையான இயற்கை அழகுடன் காணப்படுகிறது.

VikasHegde

மயானி பறவைகள் சரணாலயம்

மயானி பறவைகள் சரணாலயம்

இந்த மயானி பறவைகள் சரணாலயம் இயற்கை ரசிகர்களை வெகுவாக கவரக்கூடிய ஒரு முக்கிய சுற்றுலா அம்சமாகும். இது சதாரா நகரத்திலிருந்து 65 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இந்தியாவிலுள்ள பிரசித்தமான பறவைச்சரணாலயங்களில் ஒன்றான இது வருடந்தோறும் குளிர்காலத்தில் பலவகையான புலம்பெயர் பறவைகள் வாசம் செய்யும் இடமாக உள்ளது.பிராம்மணி வாத்துகள், கறுப்பு கொக்கு, அன்னப்பறவை மற்றும் வண்ணக்கொக்கு போன்ற அரிய பறவைகளை இங்கு காணலாம்.

கொடலா

கொடலா

அடர்த்தியான பசுமை வளத்துடன் மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள இந்த கொடலா பிரதேசமானது மலையேற்றம் மற்றும் இன்பச்சிற்றுலா போன்றவற்றுக்கு மிகவும் ஏற்ற இடமாக உள்ளது. பாரம்பரிய இயற்கைச்சூழலுடன் காட்சியளிக்கும் இந்த பகுதி பயணிகளுக்கு சுற்றிப்பார்க்கும் ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளது.

குஜராத் மாநிலத்தின் காடுகளுக்கு ஒரு கலகல பயணம் போகலாமா? #காட்டுயிர்வாழ்க்கை 14

Read more about: travel temple forest summer

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்