» »ஒடிசாவுக்கு ஓர் ஒய்யார பயணம் போலாமா?

ஒடிசாவுக்கு ஓர் ஒய்யார பயணம் போலாமா?

Written By: Udhaya

இந்தியாவில் உள்ள தனித்தன்மையான பாரம்பரிய பூமிகளில் ஒன்றுதான் இந்த ஒடிசா மாநிலம். ஆழமான வரலாற்று செழிப்பு மற்றும் புராதன நாகரிகத்தின் வேர்களை இந்த பூமி வாய்க்கப்பெற்றிருக்கிறது. இது கலிங்க நாடு என்ற பெயரில் ஒரு மஹோன்னத ராஜ்ஜியமாக புராதன காலத்தில் திகழ்ந்திருக்கிறது. பின்னர் சுதந்திர இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றாக ஒரிசா என்ற பெயரில் விளங்கிய இந்த மாநிலம் தற்போது ஒடிசா என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவின் இருதயம் என்றும் பெருமையுடன் இந்த பூமி அறியப்படுகிறது.

தங்க முக்கோணங்கள்!

தங்க முக்கோணங்கள்!

‘ஸ்வர்ண திரிபுஜா' (தங்க முக்கோணம்) என்ற பெயரில் அழைக்கப்படும் புபனேஷ்வர், பூரி மற்றும் கொனார்க் ஆகிய மூன்று முக்கியமான கோயில் நகரங்கள் ஒடிசாவின் உன்னத அடையாளங்களாக வீற்றிருக்கின்றன. இந்த மூன்று ஸ்தலங்களிலும் முறையே லிங்கராஜ் கோயில், ஜகந்நாதர் கோயில் மற்றும் சூரியக்கோயில் ஆகியவை அமைந்திருக்கின்றன. குறிப்பாக புபனேஷ்வர் நகரில் மட்டுமே பார்த்து பார்த்து ரசிப்பதற்கு 100க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இவை யாவுமே ஆன்மீகத்திற்கு அப்பாற்பட்ட வரலாற்றுப்பின்னணி மற்றும் கட்டிடக்கலை சான்றுகளாக காட்சியளிக்கின்றன.

Arpitargal1996

வைரக்கல்

வைரக்கல்


ஒடிசாவின் மற்றொரு வைரக்கல்லாக பூரி ஸ்தலம் அமைந்திருக்கிறது. இந்தியாவிலுள்ள சார் தாம்களில் ஒன்றாக இந்த ஸ்தலம் கருதப்படுகிறது. மற்ற மூன்று ஸ்தலங்களும் துவார்கா, பத்ரிநாத் மற்றும் ராமேஸ்வரம் ஆகியவையாகும். இருப்பினும் இந்த பூரி ஸ்தலத்திற்கு யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு கூடுதல் பலன்கள் கிட்டும் என்பதாகவும் ஒரு நம்பிக்கை நிலவுகிறது. கொனார்க் நகரத்தின் சூரியக்கோயில் இந்தியக்கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலைக்கு மற்றுமோர் எடுத்துக்காட்டாகவும் அற்புத படைப்பாகவும் காலத்தில் நீடித்து வீற்றிருக்கிறது. இக்கோயிலின் பல பகுதிகள் சிதிலமடைந்து காணப்பட்டாலும் இங்கு காணப்படும் பல அபூர்வ கலையம்சங்களுக்காக இது உலக பாரம்பரிய ஸ்தலங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.

LRBurdak

வாழ்நாளில் ஒருமுறை

வாழ்நாளில் ஒருமுறை

இந்தியர்கள் அனைவருமே வாழ்நாளில் ஒருமுறையாவது பயணம் செய்து தரிசிக்க வேண்டிய ஒரு காலப்பெட்டகமாக இந்த புபனேஷ்வர், பூரி மற்றும் கொனார்க் ஆகிய மூன்று முக்கியமான புராதன வரலாற்றுத்தலங்கள் வீற்றிருக்கின்றன. ஒடிசா மாநிலத்தின் இதர சுற்றுலா அம்சங்கள் கட்டிடக்கலை மற்றும் கோயிற்கலை அம்சங்களுக்காக மட்டுமன்றி இதர சிறப்பம்சங்களுக்கும் இந்த ஒடிசா மாநிலம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஜைன நினைவுச்சின்னங்கள், புத்த மடாலயங்கள் மற்றும் காட்டுயிர் சரணாலயங்கள் போன்ற சுற்றுலா அம்சங்களும் இந்த கிழக்கிந்திய மாநிலத்தில் இடம் பெற்றிருக்கின்றன. ஒடிசா மக்கள் நகர மற்றும் நாட்டுப்புற கலாச்சாரங்களை உள்ளடக்கிய ஒரு சமூகத்தை ஒடிசா மாநிலம் கொண்டிருக்கிறது. பெரும்பாலான மக்கள் இங்கு விவசாயத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். நகரங்களை விடவும் கிராமங்களில் அதிக மக்கள் வசிப்பதும் குறிப்பிடத்தக்கது.

Bernard Gagnon

 ஆதிகுடி மக்கள்

ஆதிகுடி மக்கள்

அது மட்டுமல்லாமல் பல்வேறு ஆதிகுடி மக்களும் இங்கு அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர். இந்த மக்கள் யாவருமே தங்கள் பாரம்பரிய மரபுகளின் வேர்களை இறுக பற்றிக்கொண்டுள்ளதால் இவர்களது வாழ்க்கை முறையில் பழமையின் அம்சங்களை கண்கூடாக பார்த்து மகிழலாம். ஒரியா மொழி இம்மக்களின் மொழியாக பேசப்படுகிறது. இருப்பினும் தேசிய வளர்ச்சி மற்றும் நவீன தாக்கத்தின் விளைவாக ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளும் இங்கு உபயோகத்தில் உள்ளது..

Kamalakanta777

 கலாச்சாரம் மற்றும் உணவுமுறைகள்

கலாச்சாரம் மற்றும் உணவுமுறைகள்

பாரம்பரியமான மரபுகளை கொண்ட பூமி என்பதால் இம்மாநில மக்கள் மதரீதியான சடங்குமுறைகளை பிடிவாதமாக பின்பற்றுபவர்களாக உள்ளனர். ஒடிசி எனும் பாரம்பரிய நடனக்கலை இம்மாநிலத்தின் மற்றொரு அடையாளமாக விளங்குகிறது. திருமண விழாக்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் இந்த நடனம் அரங்கேற்றப்படுகிறது. ஒடிசா மக்கள் சுவையான இயற்கை உணவை நேசிப்பவர்களாக உள்ளனர். அரிசி இங்கு மக்களால் விரும்பி உண்ணப்படும் உணவு வகையாக உள்ளது. தால்மா, பெசரா, தாஹி பைகானா மற்றும் ஆலு பராத்தா போன்ற உணவுகள் இங்கு விஜயம் செய்யும்போது அவசியம் ருசி பார்க்க வேண்டியவையாகும். இங்கு தயாரிக்கப்படும் ஊறுகாய் வகைகளும் வித்தியாசமான சுவையுடன் மேலும் சாப்பிடத்தூண்டுபவையாக உள்ளன.

Shiv's fotografia

திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகள்!

திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகள்!


விவசாய குடிமக்களை அதிகம் கொண்டுள்ளதால் இம்மாநிலத்தின் பெரும்பாலான பண்டிகைகள் அறுவடைக்காலத்தை மையப்படுத்தியதாகவே உள்ளன. திராவிட, ஆரிய மற்றும் புராதன கலாச்சாரங்களின் கலவையை அடித்தளமாக கொண்டுள்ளதால் இங்கு பண்டிகைகள் தனித்தன்மையான இயல்புடன் கொண்டாடப்படுகின்றன. மகர் மேளா, மக சப்தமி, ரத் யாத்ரா மற்றும் துர்க்கா பூஜா போன்றவை இந்த மாநிலத்தில் விமரிசையாக கொண்டாடப்படும் முக்கியமான திருவிழாக்களாகும் இவை தவிர கலை மற்றும் கலாச்சார திருவிழாக்களாக கொனார்க் திருவிழா, ராஜா ராணி இசைத்திருவிழா, முக்தேஷ்வர் நடன திருவிழா போன்றவையும் கொண்டாடப்படுகின்றன.

G-u-t

ஒடிசா பயண வசதிகள்

ஒடிசா பயண வசதிகள்


நல்ல சாலைப்போக்குவரத்து வசதிகள், ரயில் பாதை இணைப்புகள் மற்றும் விமான நிலையங்கள் போன்றவை அமைந்துள்ளதால் ஒடிசா மாநிலத்துக்கு சுற்றுலா மேற்கொள்வதில் எந்த சிரமமுமில்லை. வறண்ட வெப்பப்பிரதேச பருவநிலையை கொண்டுள்ள இந்த மாநிலத்தில் கோடைக்காலம், குளிர்காலம் மற்றும் மழைக்காலம் போன்றவை முக்கிய பருவங்களாக நிலவுகின்றன.

J.M.Garg

Read more about: travel temple

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்