Search
  • Follow NativePlanet
Share
» »இந்த வீக்கெண்டுல ஏரியைத் தேடி சின்ன டூர் போகலாமா ?

இந்த வீக்கெண்டுல ஏரியைத் தேடி சின்ன டூர் போகலாமா ?

வார விடுமுறைய சிறந்த சிற்றுலாவுக்கு செல்ல திட்டமிட்டா நம்ம ஊர் பக்கத்துல இருக்குற இந்த ஏரிகளுக்கு எல்லாம் போயிட்டு வாங்க.

வார இறுதி நாட்கள், கோடை வெயில் வேறு... சுற்றுலா போற அளவுக்கு நேரமும் இல்லை, சின்னதா டூர் போகலாம்னா எங்க போறதுன்னு தெரியலை. இப்படிப்பட்ட சூழ்நிலையிலதா நீங்க தவிச்சுகிட்டு இருக்கீங்களா. கவலைய விடுங்க, உங்க ஊர் பக்கத்துள இருக்குற இந்த ஏரிகளுக்கு எல்லாம் ஜாலியா நண்பர்களுடனோ, அல்லது மனசுக்கு விருப்பமானவர்களுடனோ ஒரு ரைடுதான் போயிட்டு வாங்களேன். இந்த பயண நேரமும், ஏரிக்கரைக் காற்றும் னதில் தேங்கிக் கிடக்கிடக்கும் பல விசயங்களை வெளிப்படுத்தவும், வார விடுமுறைய நல்ல முறையில் கழிச்சதாகவும் இருக்கும். சரி, இப்ப நம்ம ஊர் பக்கத்துல இருக்குற ஏரிகளுக்கு எல்லாம் சிற்றுலா போயிட்டு வரலாம் வாங்க.

பிச்சாவரம் ஏரி

பிச்சாவரம் ஏரி


கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகரத்திலிருந்து சுமார் 13 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பிச்சாவரம் ஏரி. மாங்குரோவ் காடுகளால் சூழப்பட்டிருக்கும் இந்த ஏரி உலகிலேயே மிகப்பெரிய சதுப்பு நிலப்பகுதி ஆகும். இந்த மாங்குரோவ் காடுகளிடையே குறுக்கும் நெடுக்குமாக இருக்கும் பல்வேறு தீவுகள் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பறவைகளின் சரணாலயமாக இருக்கின்றன. ஹெரான், பெலிகன், கார்மோரான்ட்ஸ் மற்றும் ஈக்ரெட் உள்ளிட்ட வெளிநாட்டு பறவைகள் பிரசிதிபெற்றவை. ஏப்ரல் முதல் நவம்பர் மாதம் வரையில் உலகெங்கிலும் உள்ள பறவை கவனிப்பாளர்களை ஈர்க்கும் இடமாக இந்த பிச்சாவரம் காடுகள் உள்ளன. இந்த காடுகளுக்குள் படகுப் பயணம் செய்து சுற்றிப் பார்க்க முடியும் என்பது சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மற்றுமொரு சிறப்பு அம்சமாகும்.

KARTY JazZ

நிலாவூர் ஏரி

நிலாவூர் ஏரி


ஏலகிரியில் படகுப் பயண விரும்பிகள் அடிக்கடி வந்து செல்லும் இடம் நிலாவூர் ஏரி. ஆண்டுதோறும் இந்த ஏரியில் பயணிப்பதற்காகவே சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் ஏலகிரிக்கு சுற்றுலா வருகின்றனர். நிலாவூர் கிராமத்தில் அமைந்துள்ள இந்த சிறிய ஏரி, கிட்டத்தட்ட கரைகளில் தோட்டங்களுடன் கூடிய குளம் போன்றது. ஏரிக்கு அருகிலுள்ள பகுதியில் கடவு நாச்சியாருக்கு சொந்தமான தேவி கோவில் ஒன்றும் உள்ளது. பக்தர்கள் வெள்ளிக்கிழமைகளில் இரவு 11 மணி முதல் 12 மணிவரை பூஜை செய்ய இங்கு வருகின்றனர். இங்குள்ள தேவி ஆற்றல் மிக்கவர் என்று நம்புகின்றனர். ஏரிக்கரையுடன் கூடிய ஆன்மீகத் தலம் என்பதால் இப்பயணத்தில் இந்த ஆலயத்திற்கும் சென்று வழிபட்டு வரலாம்.

PlaneMad

பனிச்சரிவு ஏரி

பனிச்சரிவு ஏரி


நீலகிரி மலையில் அமைந்துள்ள பனிச்சரிவு ஏரி ஊட்டியில் இருந்து சுமார் 22 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 19-ஆம் நூற்றாண்டின் போது இந்தப் பகுதியில் நிகழ்ந்த பனிச்சரிவின் காரணமாக இந்தப் பெயரினை இது பெற்றுள்ளது. சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் மத்தியில் பிரபலமான சுற்றுலா தலமாக உள்ள இந்த ஏரியைச் சுற்றியுள்ள மலைகள், மெக்னொலியாஸ், ரோடோடென்ட்ரொன்ஸ் மற்றும் ஆர்க்கிட் மலர்களால் மூடப்பட்டு, ரம்மியமான தோற்றத்தை கொடுக்கும். சுற்றுலா பயணிகள் மீன் பிடிக்கத் தேவையான வலை, தண்டுகள் மற்றும் மற்ற பாகங்களை வழங்கும் கடை ஒன்றும் இந்த ஏரியின் அருகே அமைந்துள்ளது. சில சுற்றுலா பயணிகள், ஏரிக்கு அருகே முகாம்கள் அமைத்து தங்குவர். சிலர் படகு விளையாட்டை விரும்புகின்றனர் சிலர் ட்ரெக்கிங் போன்ற சாகச செயல்களில் ஈடுபடுகின்றனர்.

Wikipedia

பனைமரத்துப்பட்டி ஏரி

பனைமரத்துப்பட்டி ஏரி


சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள பனைமரத்துப்பட்டி ஏரி, பனைமரத்துப்பட்டி என்னும் கிராமத்தில் பசுமைத் தோட்டங்களும், காடுகளும் சூழ அமையப்பெற்றுள்ளது. சேலம் புறநகரில் உள்ள இந்த கிராமம், சேலம் நகரின் பல பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்படும் தண்ணீரின் ஆதாரமாக உள்ளது. மேட்டூர் அணை கட்டப்படுவதற்கு முன்பு, இந்த ஏரி தான் சேலம் மக்களின் குடிநீர் தேவைகளுக்கு ஆதரமாக இருந்திருக்கின்றது. இந்த ஏரி அதன் அழகான இயற்கை காட்சிகளுக்கு மிகவும் புகழ்பெற்றது. உள்ளூர் மக்களால் வேடந்தாங்கல் என்று அழைக்கப்படுகின்ற இந்த ஏரி, பறவை புகைப்பட விரும்பிகள் மத்தியில் பிரபலமாக உள்ளது. தற்போது, இந்த ஏரியில் இருந்து நிரம்பி வழியும் நீரை, விவசாயிகள் தங்கள் பாசனத் தேவைகளுக்கு உபயோகப்படுத்திக் கொள்கின்றனர். இதனால் இந்த ஏரியை இயற்கையின் பெருங்கொடையாக விவசாயிகள் கொண்டாடுகின்றனர்.

Syedshas

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+