Search
  • Follow NativePlanet
Share
» »நவக்கிரக கோவிலையும் ஒரே நாளில் தரிசிக்க இந்த ரூட்டை டிரை பண்ணி பாருங்க..!

நவக்கிரக கோவிலையும் ஒரே நாளில் தரிசிக்க இந்த ரூட்டை டிரை பண்ணி பாருங்க..!

நவகிரகங்களின் இடமாற்றத்துக்கும், மனிதனின் வாழ்வு மாற்றத்துக்கும் எப்போதும் தொடர்பு இருந்துகொண்டேதான் இருக்கிறது. அதனால்தான் திருமணத்தின் போதோ, குழந்தை பிறக்க வேண்டியோ, இன்னும் பல காரணங்களுக்காக பரிகாரங்கள் உள்ளிட்டவற்றை செய்கிறோம். இப்படி தோஷங்கள் உள்ளிட்டவற்றால் அவதிப்படும் அனைவரும் நவகிரக தலங்களுக்கு சென்று வழிபட்டால் நிச்சயம் வாழ்நாளில் சிறந்த மாற்றத்தைக் காணலாம். சரி வாருங்கள், தமிழகத்தில் உள்ள நவகிரக தலங்கள் குறித்தும், அவற்றை ஒரே நாளில் எப்படி தரித்து வர வேண்டும் என்பது குறித்தும் பார்க்கலாம்.

சந்திர பகவான்

சந்திர பகவான்

திங்களூர் கைலாசநாதர் என்றழைக்கப்படும் இந்த தலம் எப்போது, யாரால் அமைக்கப்பட்டதென சரியான தகவல்கள் தற்போது வரை கிடைக்காவிட்டாலும் கி.மூ. 7 நூற்றாண்டிற்கு முன்பே இது தோன்றியிருக்க வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்வுகளின் அடிப்படையில் தெரிவிக்கின்றனர். நீண்ட ஆயுளையும், செல்வம்மிக்க வாழ்க்கையையும் பெற இக்கிரகம் வழிவகுக்கிறது. ஜோதிடத்தில், இந்த சந்திரன் மன அழுத்தங்களையும், துன்பங்களையும் நீக்கும் வல்லமைகொண்ட கிரகமாக கருதப்படுகிறது. தேவி பார்வதியே சந்திர கிரகத்தின் அதி தேவதையாக உள்ளார்.

RAJUKHAN SR RAJESH

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?

கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து திங்களூர் செல்வதற்கு ஏராளமான பேருந்து வசதிகள் உள்ளன. பாபநாசம், ஐயம்பேட்டை வழியாக 37 கிலோ மீட்டர் பயணித்தால் திங்களூரை அடைந்துவிட முடியும். ஒரே நாளில் நவகிரகங்களையும் தரிசிக்க விரும்புவோர் சரியாக காலை 5.30 மணிக்கெல்லாம் கும்பகோணத்திலிருந்து கிளம்புவது நல்லது. திங்களூர் கைலாசநாதர் கோவிலில் தரிசனத்தை முடித்துவிட்டு அடுத்த ஒரு மணிநேரத்தில் கும்பகோணம் செல்ல வேண்டும்.

RAJUKHAN SR RAJESH

குரு பகவான்

குரு பகவான்

கும்பகோணத்தில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஆலங்குடி ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் கோவில். தட்சிணாமூர்த்தியை மூலவராகக் கொண்ட இத்தலத்தில் குரு (வியாழன்) என்னும் இந்த கிரகம், கற்றுளியால் சுவற்றில் புடைப்பு சிற்பமாகக் செதுக்கப்பட்டுள்ளது சிறப்பு அம்சமாகும். குருபெயர்ச்சி காலகட்டத்தில் இந்த தலத்திற்கு அதிக அளவில் பக்தர்கள் வருவது வழக்கம். பார்வதி தேவி அம்மையார் இங்குள்ள அமிர்தபுஷ்கரணி கரையில் பிறந்து, சிவபெருமானுடன் இணைந்ததாக நம்பிக்கை நிலவுகிறது. நோய் நொடிகளில் இருந்து நிவர்த்தி, பூர்வ புண்ணிய பாவங்களில் இருந்து நலம்பெற, நீண்ட ஆயுள், உடல் ஆரோக்கியம், குழந்தை பாக்கியம் பெற இக்குரு கிரகத்தினை வழங்குவது சிறப்பு.

Rasnaboy

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?

கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து ஆலங்குடி செல்ல மாநகர பேருந்துகள் அதிகளவில் உள்ளன. அதோடு கும்பகோணத்திலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆலங்குடியை 30 நிமிடத்தில் அடைந்துவிடலாம். அங்கு ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் 30 நிமிடங்களுக்குள் சுவாமி தரிசனத்தை முடித்துவிட்டு அடுத்த சில நிமிடங்களிலேயே கும்பகோணத்திற்கு திரும்ப வேண்டும்.

Ssriram mt

ராகு பகவான்

ராகு பகவான்

ராசு பகவான் குடிகொண்டுள்ள இடம் என்றால் அது திருநாகேஸ்வரம் பெரிய கோவில் தான். ராகு கிரகத்தின் புனித, பெரிய கோவில் கோவில்களின் புனித நகரம் என்றழைக்கப்படும் கும்பகோணத்திலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது. புராண வரலாற்றில் ராகு பகவானின் இத்தலத்தில், ஆதிசேஷன், தட்சன் மற்றும் கார்கோடன் போன்ற நாகங்கள் சிவபெருமானை வழிபட்டுள்ளன என்றும், நலமகாராஜா என்னும் மன்னனும் சிவனை இத்தலத்தில், திருநள்ளாரைப் போல வழிப்பட்டதாகவும் சான்றுகள் உள்ளன. இந்த ராகுவே ஒருவரின் ஆற்றலை வலிமைப்படுத்தவும் எதிரியை நண்பனாக மாற்றவும் முக்கிய காரணகர்த்தாவாக உள்ளார். இந்த ராகுவின் நாமமாக துர்காதேவி உள்ளார். மூலநாதரின் பெயர் நாகேஸ்வரர் மற்றும் தேவியின் பெயர் கிரிகுஜாம்பிகை ஆவார். இத்தேவியை காலையில் சிறுமியாகவும், மதியத்தில் இளம் பெண்ணாகவும், மாலையில் தேவியாகவும் அலங்கரிங்கப்படுகிறார். இத்தலத்தில் ராகு தனது தேவியுடன் எழுதருளுகின்றார். ராகு காலத்தில் அபிஷேகம் செய்யப்படும் பாலானது அதிசயக்க விதத்தில் நீலநிறமாக தோன்றுகின்றது. பொதுவாக ராகு தோஷமுள்ளவர்கள், இங்கு வந்து ராகு காலத்தில் அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டு தங்களின் தோஷ நிவர்த்தி செய்து கொள்கின்றனர்.

Ssriram mt

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?

கும்பகோணத்திற்கு வெகு அருகிலேயே சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் திருநாகேஸ்வரம் அமைந்துள்ளது. பேருந்தி அல்லது வாடகைக் கார் மூலம் 10 முதல் 15 நிமிடங்களில் திருநாகேஸ்வரம் ராகு கோவிலை அடைந்துவிட முடியும். நாகநாத சுவாமி ஆலயம் 100 தூண்களை கொண்ட பெரிய கோவில் என்பதால் தரிசனம் செய்து முடிக்க 30 நிமிடங்களுக்கு மேல் ஆகும். பின்னர் 11.15 மணிக்கு கும்பகோணம் திரும்ப வேண்டும்.

Ssriram mt

சூரிய பகவான்

சூரிய பகவான்

நவகிரகங்களில் முதன்மையானது சூரியன். இக்கிரகத்திற்குண்டான கோவில், கி.மு.1100 ஆம் ஆண்டு முதலாம் குலோத்துங்கச் சோழன் என்னும் மன்னரால் கும்பகோணத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சூரியனார் கோவில் என்னும் ஊரில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவில் வாழ்க்கையில் வெற்றியையும், வளத்தையும் ஆரோக்கியத்தையும் வழங்கும் சூரிய கடவுள் என்னும் சூரியன் கிரகத்திற்குண்டானது. சூரிய பகவான் கிரகத்திற்கு சாயா மற்றும் சுவர்ச்சா என்னும் இரண்டு துணைவிகளுடன் ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் இந்த கிரக மணடலத்தில் பவனி வருகின்றார். மேலும் சூரியனை மூலவராகக் கொண்டு மற்ற கிரகங்கள் தங்களின் இருப்பிடங்களை அமைவிடங்களாகக் கொண்டுள்ளன.

PJeganathan

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?

சூரியனார்கோவில் கும்பகோணத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. எனவே நீங்கள் 11.45 மணிக்கு புறப்பட்டால் கூட 12.15 மணிக்கெல்லாம் சூரியனார் கோவிலை அடைந்துவிட முடியும். இங்கு சூரியபகவானை தரிசித்து முடித்தவுடன் 12.45 மணிக்கெல்லாம் கஞ்சனூர் கிளம்ப வேண்டும்.

PJeganathan

சுக்ர பகவான்

சுக்ர பகவான்

கும்பகோணத்தில் இருந்து திருமங்கலகுடி வழியாக சுமார் 17 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கஞ்சனூரில் சுக்கிரன் (வெள்ளி) என்று அழைக்கப்படும் கிரகத்திற்கு அதிபதியான சிவதலமாம் அமைந்துள்ளது. திருவாடுதுறை என்னும் அமைதியான கிராம சூழ்நிலையில் அமைந்துள்ள இத்தலம் அக்னிதலம் என்றும், பிரம்மபுரி என்றும், பலாசவனம் என்றும் குறிப்பிடப்படுகின்றது. சிவ பார்வதி திருமண கோலத்தை பிரம்மன் இங்கு கண்டதாக தொன்நம்பிக்கை உள்ளது.

Ssriram mt

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?

சூரியனார் கோவிலிலிருந்து கஞ்சனூர் 5 கிலோ மீட்டர் தொலைவிலேயே அமைந்திருப்பதால் பேருந்து அல்லது வாமகைக் கார்கள் மூலம் ஒரு சில நிமிடங்களிலேயே கஞ்சனூரை அடைந்துவிடலாம். சரியான திட்டமிடலுடன் செயல்பட்டால் ஒரு மணிக்கு முன்பாகவே அக்னீஸ்வரர் கோவிலை அடைந்துவிட முடியும். மேலும், 1.15 மணியளவில் கோவில் நடை சாத்தப்பட்டுவிடும் என்பதால் 15 நிமிடத்தில் தரிசனத்தை முடித்துக்கொள்வது கட்டாயம்.

Ssriram mt

செவ்வாய் பகவான்

செவ்வாய் பகவான்

கும்பகோணத்தில் இருந்து மையிலாடுதுரை வழியாக சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள வைத்தீஸ்வரம் என்னும் ஊரில் உள்ளது செவ்வாய்க்கு அதிபதியான வைதீஸ்வரன் கோவில். இக்கோவிலில் அங்காரகன் என்று அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்திற்கு சிறப்புத்தலமான கோவில் உள்ளது. இத்தலத்திற்கு பயணம் செய்து, செந்நிற, மண வாழ்க்கைக்கு ஆதாரமான செவ்வாயை ஆராதனை செய்தால், செவ்வாய் தோஷம் நீங்கப் பெற்று விரைவில் மணவாழ்க்கை அமைகின்றது. முருகனின் ஆதிக்கத்தில் உள்ள செவ்வாய் பூமாதேவியின் மைந்தனாவார். ஜடாயு என்னும் கழுகு சீதா தேவியை கடத்திச் செல்ல முயன்ற ராவணனை வீரத்துடன் தடுத்து எதிர்த்த பொழுது இராவணனால் சிறகுகள் வெட்டப்பட்டு, இத்தளத்தில் விழுந்திறந்து மோட்சகதி அடைந்ததாக இராமாயண காவியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதும் நாம் இந்த ஜாடாயுவை தகனம் செய்த இடமான ஜடாயு குண்டத்தை காணலாம். இங்கு அங்காரகன் என்னும் செவ்வாயுடன் வைத்தியநாத சுவாமி வலம்பிகை அம்மையாருடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றார்.

Ssriram mt

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?

நவகிரக கோவில்கள் அனைத்துமே உச்சி வேலையில் நடை மூடப்பட்டு 4 மணிக்கே திறக்கப்படும். எனவே 1.30 மணிக்கு கஞ்சனூரிலிருந்து மயிலாடுதுறை செல்லும் பேருந்தில் ஏறினால் 20 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள மயிலாடுதுறையை 2 அல்லது 2.15 மணியளவில் அடைந்துவிடலாம். மயிலாடுதுறையிலேயே மதிய உணவை முடித்துக்கொண்டு 3.15 மணியளவில் பயணத்தை தொடர்ந்தால் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வைத்தீஸ்வரன் கோவிலை 3.45 மணிக்கெல்லாம் அடைந்துவிடமுடியும்.

Ssriram mt

புதன் பகவான்

புதன் பகவான்

புதனுக்கு அதிபதியான கோவில் திருவெண்காடு ஸ்வேதாரண்யேஸ்வரர் கோவிலாகும். வால்மீகி ராமாயணத்தில் இதனைப் பற்றிய குறிப்பு உள்ளது. அதனடிப்படையில் இத்தலம் 3000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. நவக் கிரகங்களில் இறுதியாக கருதப்படுகின்ற புதன் ஆற்றலையும் அறிவையும் கொடுக்கக் கூடிய கிரகமாக கருதப்படுகிறது. இக்கிரகத்தின் அதிபதி மகா விஷ்ணு. சைவதிருமறைகளில் காசிக்கு இணையான அம்சங்களை இத்தலம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Shankaran Murugan

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?

கஞ்சனூர் வைத்தீஸ்வரன் கோவிலிலிருந்து 4.30 மணிக்கு பயணத்தை தொடர்ந்தால் 16 கிலோமீட்டரில் அமைந்துள்ள திருவெண்காடு தலத்தை 5 மணிக்கு அடைந்துவிட முடியும். பின்னர் ஸ்வேதாரண்யேஸ்வரர் கோவிலில் வீற்றிருக்கும் புதன் பகவானையும், சிவபெருமானையும் தரிசித்துவிட்டு அடுத்ததாக கேது பகவானை தரிக்க கிளம்ப வேண்டும்.

Ssriram mt

கேது பகவான்

கேது பகவான்

கேது என்னும் கிரகத்திற்கு உரிய கோவில் திருவெண்காட்டில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கீழ்பெரும்பள்ளத்தில் உள்ளது பிரகதீஸ்வரர் கோவில். புராதன, வரலாறு கொண்ட இச்சிவதலத்தில் கேது என்னும் கிரகம் சிவனை வழிபாடு செய்து அமைந்துள்ளார். ராகுவும் கேதுவும் பாற்கடலில் கிடைத்த அமுதத்துடன் தொடர்புகொண்டு, சாபத்திற்கு ஆளாகி, சிவனை வழிபாட்டு, கிரக அந்தஸ்த்தையும், மனித தலையும் பாம்பின் உடலையும், பாம்பின் தலையையும் மனித உடலையும் பெற்று, இத்துன்பங்களுக்கு காரணமான சூரிய சந்திரர்களை பழி கொள்ளும் நோக்கத்துடன் கிரக சஞ்சாரம் செய்வதாக குறிப்புக்கள் கூறுகின்றன. அதன் பலனாகவே சூரியன் மற்றும் சந்திர கிரகணங்கள் நிகழ்வதாகவும் கூறப்படுகின்றன. இத்தலத்தில் கேதுவுக்கு தனிக் கோவிலும் உண்டு. கேது என்னும் இக்கிரகம் தனது பக்தர்களுக்கு செல்வ சம்பத்துக்களையும், கால்நடை போன்றவைகளையும் பொதுவாக அனைத்து நலன்களும் அளிப்பவர்.

Rsmn

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?

திருவெண்காட்டிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள கேது பகவானின் கீழ் பெரும்பள்ளம் தலத்தை 15 நிமிடங்களில் அடைந்துவிடலாம். கும்பகோணத்தில் இருந்து குட்டாளம், செம்பனார்க்கோவில் வழியாக சுமார் 59 கிலோ மீட்டர் பயணித்தாலும் இத்தலத்தை அடைய முடியும். ஒரு சில நிமிடங்களில் தரிசனத்தை முடித்துவிட்டு இறுதியாக சனி பகவானை நோக்கை பயணக்கிலாம்.

Rsmn

சனி பகவான்

சனி பகவான்

கும்பகோணத்தில் இருந்து 54 கிலோ மீட்டர் தொலைவிலும், கீழ் பெரும்பள்ளத்தில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது திருநள்ளார். சனீஸ்வரன் என்றும் அழைக்கப்படும், இக்கிரகத்திற்கு அமைந்துள்ள ஒரே தலம் ஸ்ரீதர்பாரன்யேசுவரர் திருக்கோவிலிலாகும். தனது வானவெளி சஞ்சாரத்தின் பொழுது, இத்தளத்தின் மீது தனது அனைத்து ஆதிக்கத்தையும் கொண்டுள்ள, இந்த சனி கிரகத்தை, புராணக் கதைகளில் புகழ்பெற்ற நலமகாராஜா இங்குள்ள நளதீர்த்தம் என்னும் குளத்தில் குளித்து தனது துன்பங்களில் இருந்து விடுதலை பெற்றதாக தலவரலாறு கூறுகிறது. இத்தளத்தில் உள்ள நளதீர்த்தம் என்னும் குளத்தில் குளித்து, சனி பகவானை ஆராதித்தால், சனி கிரகத்தால் ஏற்படும் அனைத்துவிதமான துரதிருஷ்டங்களும், துன்பங்களும் நீக்கப்பட்டு நிவர்த்தி பெறலாம் என்பது தொன்நம்பிக்கை. இத்தலத்தில் சனி கிரகத்தின் அதிபதியாக எமதர்மன் வீற்றுள்ளார்.

Rsmn

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?

சனி பகவான் வீற்றிருக்கும் திருநள்ளாறுக்கு கீழ்பெரும்பள்ளத்திலிருந்து மாலை 6.30 மணியளவில் பயணத்தைத் தொடர்ந்தால் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருநள்ளாற்றை திருக்கடையூர், காரைக்கால் வழியாக 8 மணிக்கெல்லாம் அடைந்துவிட முடியும். அதன்பின்னர் ஸ்ரீதர்பாரன் யேசுவரர் திருக்கோவிலில் சனிபகவானையும், சிவபெருமானையும் தரிசித்து நவகிரகங்களின் பலனையும் ஒரே நாளில் அடையலாம்.

VasuVR

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more