» »கோடை விடுமுறையை கோவை மலைகளுடன் கொண்டாடலாம் வாங்க..!

கோடை விடுமுறையை கோவை மலைகளுடன் கொண்டாடலாம் வாங்க..!

Written By:

சுட்டெரிக்கும் வெயில், வெளியில் சென்றாலே வெப்பத்தால் வெடித்து விடுவதைப் போல் உள்ளது. சுற்றியிருந்த மரத்தை வெட்டியதன் பாவம் இன்று அவ்வப்போது பெய்யும் மழையின் குளுமையைக் கூட முழுமையாக அனுபவிக்க முடிவதில்லை. அதிலும், தென்மாவட்டங்களான ஈரோடு, சேலம், திருச்சி, கோயம்புத்தூர் பக்கமெல்லாம் வெயிலும், மழையும் மாறி மாறி காலநிலையே கதிகட்டு போய்டுச்சு. இதுல குழந்தைகளுக்கு கோடை விடுமுறை வேற விட்டாச்சு. இந்த சூழ்நிலையில ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பிரபலமான மலைச்சுற்றிலாத் தலங்களில் எல்லாம் கூட்டம் அலை மோதுது. சரி வேறெங்குதான் செல்வது என தெரியாமல் தினரிக்கொண்டிருக்கும் நம்ம கோவை வாசிங்க இந்த கோடை விடுமுறைய கோயம்புத்தூரச் சுற்றியுள்ள இந்த மலைவாசத் தலங்களுக்கு சென்று ஜில்லுன்னு ஜாலி பன்னலாம் வாங்க.

சிறுமலை

சிறுமலை

கோயம்புத்தூரில் இருந்து சுமார் 186 கிலோ மீட்டர் தாராபுரம் வழியாக பயணித்தால் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது சிறுமலை. பத்தொன்பது கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட இந்த மலையில் பயணிப்பது அவ்வளவு ரம்மியமான பயணமாக இருக்கும். கடல் மட்டத்திலிருந்து சுமார் 5200 அடி உயரத்தில் உள்ள சிறுமலை கோடையிலும் காலை, மாலை நேரங்களில் இதமான காலநிலைக்கு ஏற்ற சுற்றுலாத் தலமாகும். அதிலும் இந்த ஊருக்கு என்ன சிறப்புன்னா இங்கே சித்தர்கள் வாழ்ந்ததற்கான பல ஆதாரங்கள் நிறைந்த தலங்களும் உள்ளது.

Jayabharat

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


சிறுமலைக்கு செல்ல அருகாமையில் உள்ள ரயில் நிலையம் திண்டுக்கல்லில் அமைந்துள்ளது. மதுரை விமான நிலையம் சிறுமலையில் இருந்து 86 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் எளிதில் செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.

Harish Kumar Murugesan

வால்பாறை

வால்பாறை


வால்பாறை குறித்து நாம் பெரிதும் அறிந்திருப்போம். கோவை மாவட்டத்திற்கு உட்பட்டு மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரின் மேற்குச் சரிவில் வால்பாறை அமைந்துள்ளது. தென் இந்தியாவின் மிக உயரமான ஆனைமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இது தேயிலைத் தோட்டங்களும், சோலைவனக் காடுகளும் நிறைந்த கோடை வெயிலை சிறிதும் நெருங்கவிடாத பகுதியாகும். அதுமட்டுமா, காப்பி தோட்டங்கள், வானுயர்ந்த மரங்கள், அடர் சோலைக் காடுகள், கணக்கில் அடங்காத காட்டு அருவிகள், நீரோடைகள், நீரார், சோலையார் தடுப்பணைகள் என்று இயற்கை பல வடிவங்களில் வால்பாறையில் குடிகொண்டுள்ளது என்றே கூறலாம். வால்பாறைக்கு உட்பட்டு அருகில் உலக புகழ்பெற்ற தலமாக ஆனைமலை புலிகள் காப்பகமும், மறு புறம் கேரள எல்லையில் இரவிபுரம் தேசிய பூங்காவும் அமைந்துள்ளது. வால்பாறை செல்வதாக இரந்தால் தவறாமல் இப்பகுதிகளுக்கும் சென்று வருவது சிறந்தது.

Beginner Nandhu

நீரில் மிதக்கும் வால்பாறை

நீரில் மிதக்கும் வால்பாறை


ஜில்லென்ற ஆற்றில் நீந்தி மகிழ கூழாங்கல் ஆறு வால்பாறை பேருந்த நிலையத்திற்கு மிக அருகிலேயே அமைந்துள்ளது. அதனைக் கடடந்து செல்லும் சாலையில் பயணித்தால் நல்லமுடி, டைகர் வாலி பள்ளத்தாக்குகள் இலையில் வைத்த படையல் போல் கண்ணுக்கு விருந்தாக உள்ளன. அடுத்தடுத்து வரும் லோயர் நீராறு அணை, சின்ன கல்லாறு அணை, சோலையாறு அணை என எதை விடுவத எதை பார்ப்பது என சற்றே தலைசுற்ற வைக்கும் அளவிற்கு சுற்றுலாத் தலங்கள் குவிந்து கிடக்கிறது இந்த வால்பாறையில்.

Subramonip

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


மாநிலத்தில் எப்பகுதியில் இருந்தாலும் ரயில் அல்லது விமானம் மூலம் கோயம்புத்தூரைச் சென்றடைந்து விட்டால் அங்கிருந்து சாலை வழியாக சுமார் 110 கிலோ மீட்டர் தூர சாலை மார்க்கமாக பயணம் செய்து வால்பாறையை அடைந்து விடலாம். சென்னை, பெங்களூரு உள்ளிட்டு வெகு தொலைவில் உள்ளோரும் எளிதில் இங்கே வந்தடைய பொள்ளாச்சிக்கு சொகுசு பேருந்து வசதிகளும் அன்றாடம் உள்து. பொள்ளாச்சியில் இருந்து சாலை வழிப்பயணத்தில் அழியாரின் ஒட்டுமொத்த அழகையும் ரசித்து விடலாம்.

Velu Sundareswaran

மேகமலை

மேகமலை

தேனி நகரத்திலிருந்து சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவில், மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இடம் தான் மேகமலை மலைப்பிரதேசம். இயற்கையான தாவரங்கள் மற்றும் வன விலங்குகள் அதிகமாக காணப்படும் இந்த மலைப் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட பறவையினங்களைக் காண முடியும். இந்த மலைப்பகுதிகளில் சிறுத்தைப்புலி, புலி, காட்டுப்பன்றி, நீலகிரி தார், முள்ளம்பன்றி, பறக்கும் அணில், புள்ளி மான், நத்தைக் கரடி, குரைக்கும் மான், மென்மையான தோலுடைய நீர்நாய், சிங்கவால் மக்காவ் குரங்குகள், சாம்பார் வகை மான்கள், நீலகிரி லாங்கூர் குரங்குகள், சாதாரண லங்கூர் குரங்குள், போன்னட் மக்காவ் குரங்குகள், பழுப்பு நிற காட்டுக் கோழிகள் மற்றும் பல வகை விலங்குகளை நீங்கள் காண முடியும்.

Mprabaharan

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


திண்டுக்கல், மதுரை வரை ரயில் மூலமாகச் செல்ல வசதிகள் உள்ளது. மதுரையில் உள்ள விமான நிலையமே இதன் அருகில் உள்ளதாகும்.

Sivaraj.mathi

கொல்லிமலை

கொல்லிமலை


நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய மலைத்தொடர் கொல்லிமலை. 1000 முதல் 1300 மீட்டர் உயரமுள்ள இந்த மலைப் பிரதேசத்தைக் காணவரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருப்பதால், கொல்லி மலை இன்றும் இயற்கை அழகுடனே விளங்குகிறது. ராசிபுரத்தில் இருக்கும் சிவன் கோவிலுக்கு கொல்லிமலையில் இருக்கும் அறப்பலீஷ்வரர் கோவிலில் இருந்து ரகசிய பாதை இருப்பதாக சொல்லப்படுகிறது. இக்கோவிலால் கொல்லிமலை யாத்ரீக தலமாகவும் கருதப்படுகிறது. வருடம் முழுவதும் சுற்றுலாப்பயணிகள் இக்கோவிலுக்கு வருகை தருகிறார்கள். இயற்கை சூழலில் நெடுந்தூரம் நடப்பதில் ஆர்வமுள்ளோர், மலையேற்றத்தில் ஆர்வமுள்ளோர் மற்றும் இயற்கை ஆர்வலர்களால் கொல்லிமலை வருடம் முழுவதும் நிரம்பி வழிகிறது. இங்கு காணப்படும் ஆகாய கங்கை என்ற அருவி மிகவும் புகழ்பெற்றது.

Karthickbala

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


கொல்லிமலைக்கு அருகில் உள்ள ரயில் நிலையங்கள் நாமக்கல்லிற்குப் பிறகு சேலம், திருச்சியில் உள்ளது. திருச்சி விமான நிலையம் இதனருகில் உள்ளதாகும்.

Docku

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்