Search
  • Follow NativePlanet
Share
» »அம்மா ஜெயிச்ச தொகுதிக்கு ஒரு டூர் போகலாம் வாங்க...

அம்மா ஜெயிச்ச தொகுதிக்கு ஒரு டூர் போகலாம் வாங்க...

18 ஆண்டுகள் இழுத்தடித்த வழக்கின் மேல்முறையீட்டில் ஒருவழியாக தீர்ப்பும் வந்தே விட்டது. எங்கள் அம்மாதான் இனி நிரந்தர தமிழக முதல்வர் என்று அ.தி.மு.க தொண்டர்கள் ஒரு பக்கமும், இந்திய நீதித்துறைக்கு இது ஒரு கருப்பு நாள் என்று ஒரு சாராரும் சொல்லி வருகின்றனர்.

எது எப்படியோ தமிழகம் முழுக்கவே அண்ணா.தி.மு.க கட்சியினர் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஜெயலலிதா சட்ட மன்ற உறுப்பினராக வெற்றிபெற்ற ஸ்ரீ ரங்கம் தொகுதியிலும் கொண்டாட்டங்கள் நடக்கின்றன.

வாருங்கள், பழமையான கோயில்கள் நிறைந்த இந்த நகருக்கு ஒரு சுற்றுலா சுற்றுலா செல்லலாம்.

உங்கள் விடுமுறை பயணங்களுக்கு தேவையான சலுகை கூப்பன்களை இங்கே பெற்றிடுங்கள்

ஸ்ரீ ரங்கம் :

ஸ்ரீ ரங்கம் :

வைணவ அடியார்களின் முக்கிய வழிபாட்டு தளங்கள் அமைந்துள்ள இந்த நகரமானது சங்க இலக்கியங்களில் 'திருவரங்கம்' என்று விளிக்கப்பட்டிருக்கிறது. திருச்சி மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த நகரை சுற்றிஒரு புறம் காவிரி ஆறும் மறுபுறம் காவிரி ஆற்றின் கிளை நதியான கொள்ளிடம் ஆறும் பாய்கின்றன.

Photo: Flickr

ஸ்ரீ ரங்கநாத சுவாமி கோயில் :

ஸ்ரீ ரங்கநாத சுவாமி கோயில் :


ஸ்ரீ ரங்கம் நகரத்தின் ஆன்மீக அடையாளங்களில் முக்கியமானது ஸ்ரீ ரங்கநாத சுவாமி கோயில் ஆகும். விஷ்ணுவை முதற்கடவுளாக வழிபாடும் வைணவர்களின் புனித கோயிலாக இது கருதப்படுகிறது.

Photo: Flickr

ஸ்ரீ ரங்கநாத சுவாமி கோயில் :

ஸ்ரீ ரங்கநாத சுவாமி கோயில் :

உலகத்திலேயே செயல்பாட்டில் இருக்கும் மிகப்பெரிய ஹிந்து கோயில் என்ற சிறப்பையும் இக்கோயில் பெற்றுள்ளது. கம்போடியாவில் இருக்கும் 'அங்கோர் வாட்' கோயில் தான் மிகப்பெரியது என்றாலும் அது இப்போது கைவிடப்பட்டு செயல்பாட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Photo: Flickr

ஸ்ரீ ரங்கநாத சுவாமி கோயில் :

ஸ்ரீ ரங்கநாத சுவாமி கோயில் :

கிட்டத்தட்ட 156 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக அமைந்திருக்கும் இக்கோயிலின் ராஜ கோபுரம் தான் ஆசிய கண்டத்திலேயே வைத்து உயரமான கோபுரமும் கூட. 72 மீட்டர் உயரத்தில் வான்முட்டும் விதமாக இது கட்டப்பட்டிருக்கிறது.

Photo: Flickr

ஸ்ரீ ரங்கநாத சுவாமி கோயில் :

ஸ்ரீ ரங்கநாத சுவாமி கோயில் :

இந்த மூலவரான விஷ்ணு மற்ற கோயில்களில் இருப்பதை போல அல்லாமல் 'அனந்த சயன' நிலையில் அருள்பாலிக்கிறார். அதோடு இக்கோயிலினுள் 12 ஆழ்வார்களுள் ஒருவரான ஆண்டாளுக்கும் தனி சந்நிதி உள்ளது. நாடுமுழுவதிலும் இருந்து இக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

Photo: Flickr

ஸ்ரீ ரங்கநாத சுவாமி கோயில் :

ஸ்ரீ ரங்கநாத சுவாமி கோயில் :

7 பிரகாரங்களும், 21 பிரகாரங்களும் அமைந்திருக்கும் இக்கோயிலுக்குள் பழங்காலத்தில் முழுமையான ஒரு நகரமே செயல்பட்டிருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

Photo: Flickr

ஸ்ரீ ரங்கநாத சுவாமி கோயில் :

ஸ்ரீ ரங்கநாத சுவாமி கோயில் :

மார்கழி மாதம் நடக்கும் 'வைகுண்ட ஏகாதசி' இக்கோயிலில் நடக்கும் மிகமுக்கிய விழாவாகும். இந்த விழாவின் போது நடக்கும் சொர்க்க வாசல் திறப்பு என்னும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர்.

Photo: Flickr

ஸ்ரீ ரங்கநாத சுவாமி கோயில் :

ஸ்ரீ ரங்கநாத சுவாமி கோயில் :

இந்த ரங்கநாத சுவாமி கோயிலை தவிர ஸ்ரீரங்கத்திற்கு அருகில் இருக்கும் திருச்சி நகரின் அடையாளங்களில் ஒன்றான மலைகோட்டை விநாயகர் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், உறையூர் வெக்காளி அம்மன் கோயில் போன்றவையும் நாம் நிச்சயம் பார்க்க வேண்டிய இடங்களே.

Photo: Flickr

ஸ்ரீ ரங்கநாத சுவாமி கோயில் :

ஸ்ரீ ரங்கநாத சுவாமி கோயில் :

பழங்கால தமிழர் கட்டிடக்கலை ஆளுமையின் முக்கியமான அடையாளங்களில் ஒன்றாக இந்த ஸ்ரீ ரங்கம் கோயில் திகழ்கிறது என்றால் அது மிகையில்லை.

Photo: Flickr

ஸ்ரீ ரங்கநாத சுவாமி கோயில் :

ஸ்ரீ ரங்கநாத சுவாமி கோயில் :

ஸ்ரீ ரங்கநாத சுவாமி கோயில் தேர்.

Photo: Flickr

ஸ்ரீ ரங்கநாத சுவாமி கோயில் :

ஸ்ரீ ரங்கநாத சுவாமி கோயில் :

இக்கோயிலில் மூலவர் சந்நிதியின் கோபுரம் தங்கத்தால் வேயப்பட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

இந்நகரத்தை எப்படி அடைவது என்பது பற்றிய மேலதிக தகவல்களை தமிழ் பயண வழிகாட்டியில் அறிந்து கொள்ளுங்கள்.

Photo: Flickr

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X