» »உங்களுக்கு லக் இருக்கா? இங்கு போனால் கொள்ளை லாபம் தான்

உங்களுக்கு லக் இருக்கா? இங்கு போனால் கொள்ளை லாபம் தான்

Posted By: Udhaya

நாம் இதுவரை முதல் ஏழு புதையல்கள் இருக்கும் இடத்தைப் பார்த்தோம். இப்போது மீதி இடங்களைப் பார்க்கலாம். இந்தியாவின் டாப் 10 புதையல்கள் எங்கெல்லாம் இருக்கு தெரியுமா 

போடு தகிட தகிட... மலை போல் குவிஞ்சிருக்கும் புதையல்கள் இது இந்தியாவுல தானுங்கோ!

ராஜா மன்சிங் பொக்கிஷங்கள்

ராஜா மன்சிங் பொக்கிஷங்கள்


ஜெய்ப்பூரின் முன்னாள் அரசர் பெயர் மன்சிங். இவர் ஜெய்ப்பூரை நல்லபடியாக ஆட்சி செய்து பேரும், புகழும், சகல செல்வங்களும் கொண்டிருந்தார்.

இவர் பிற்காலத்தில் அக்பரின் படைத்தளபதியாக விளங்கினார்.

Jessrajsingh Seesodia

ஒன்பது ரத்தினங்களுள் ஒருவராக

ஒன்பது ரத்தினங்களுள் ஒருவராக

அக்பரின் ஒன்பது ரத்தினங்களுள் ஒருவராக இவர் விளங்கினார். அந்த அளவுக்கு விசுவாசி இவர்.

1580ல் ஆப்கானிஸ்தான் சென்று கொள்ளையடித்த பணத்தை அக்பருக்கு தெரியாமல் ஒரு இடத்தில் பதுக்கி வைத்துள்ளார் மன் சிங்.

அந்த இடம்தான் ஜெய்கார்க் கோட்டை.

அந்த இடம்தான் ஜெய்கார்க் கோட்டை.

இதை உண்மை என விளக்கும் வகையில் இந்திராகாந்தி அவசரகாலத்தின் போது 6 மாத காலத்திற்கு இந்த பகுதி முழுவதும் ராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்றது.

புதையல்

புதையல்

இதில் அங்குள்ள பணத்தையெல்லாம் அரசு கைப்பற்றிவிட்டது என ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

மற்றொரு தரப்பினர் இல்லை அது அங்குதான் உள்ளது என்கின்றனர்.

எப்படியோ அங்கு புதையல் இருந்ததற்கான பல்வேறு ஆதாரங்கள் உள்ளன.

பத்மநாப சுவாமி கோயில்

பத்மநாப சுவாமி கோயில்

சேம்பர் பி என அழைக்கப்படும் மர்மஅறை மற்ற அறைகளைப் போலல்லாது பத்மநாபசுவாமியின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

மற்ற அறைகளில் என்ன இருக்கிறது என்று மதிப்பிட்டு கிட்டத்தட்ட 3 லட்சம் கோடி மதிப்புடைய பொருள்கள் என கண்டறிந்தவர்கள் ஏன் இந்த மர்ம அறையை திறக்கவில்லை என சந்தேகம் வருகிறதல்லவா தமிழின் வயது எவ்வளவு தெரியுமா? இதை படிங்க

திறக்கப்படாததன் மர்மம்

திறக்கப்படாததன் மர்மம்

திறக்கப்பட்ட அறைகளில் 500 கிலோ நகைகள், 18 அடி உயர பை ஒன்றில் முழுவதும் தங்க நாணயங்கள் என பிரம்மிக்க வைத்துள்ளது. இதைவிட 5 மடங்கு அதிகமாக இருப்பதாக கூறப்படும் மர்ம அறை திறக்கப்படாததன் மர்மம் என்ன தெரியுமா

இந்த மர்ம அறை திறக்கப்பட்டால் உலகம் அழியும் என பத்மநாபசுவாமியின் பக்தர்கள் திடகாத்திரமாக நம்புகின்றனர். இதனால்தான் திறக்க மறுக்கின்றனர் அவர்கள்.

Read more about: travel