» »இயற்கையால் வடிவமைக்கப்பட்ட அதிசயம் காண மத்திய இந்தியாவுக்கு வாங்க!

இயற்கையால் வடிவமைக்கப்பட்ட அதிசயம் காண மத்திய இந்தியாவுக்கு வாங்க!

Written By: Udhaya


மத்தியப் பிரதேசத்தின் அசோக் நகர் மாவட்டத்தில் உள்ள சாந்தேரி, ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத்தலமாகும்.

சாந்தேரி நகரம், புண்டல்காண்ட் மற்றும் மாள்வா பகுதிகளின் எல்லையையொட்டி உள்ளது. இந்நகரம் பல்வேறு வரலாற்று நினைவுச்சின்னங்கள் மற்றும் இயற்கை அதிசயங்களை காட்டவல்ல சுற்றுலாத்தலமாகும்.

பசுமைப்போர்வை போர்த்தப்பட்ட கானகங்கள் மற்றும் பேரமைதி வாய்ந்த ஏரிகள் ஆகியவற்றை அருகருகே கொண்டிருக்கும் இந்நகரம் செழிப்பு மிக்க விந்திய மலைகளிலே அமைந்துள்ளது. இந்நகரம் ஜான்சியிலிருந்து 103 கிமீ தொலைவிலும் மற்றும் போபாலில் இருந்து 214 கிமீ தொலைவிலும் உள்ளது.

சந்தேரியில் நீங்கள் பார்க்கவேண்டிய முக்கிய இடங்களைக் கீழே காணலாம்.

பாதால் மஹால்

பாதால் மஹால்


பாதால் மஹால் தர்வாஸா என்ற இந்த ஒற்றை நுழைவாயில் எந்த மாளிகை அல்லது மாஹாலுக்கும் நுழைவாயிலாக இல்லை. ஜாமா மசூதிக்கு அருகில், சாந்தேரியின் மையமான சுற்றுலாத் தலமாக இந்த வரலாற்றுத் தலம் உள்ளது

இம்மாநிலத்திற்கு வரும் சிறப்பு விருந்தினர்களை வரவேற்கும் இடமாகவும், அவர்களை சிறந்த முறையில் கௌவரவிக்கும் இடமாகவும் இந்த நுழைவாயில் இன்று பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Sgupta2k2.

 சாந்தேரி கோட்டை

சாந்தேரி கோட்டை


ஒரு மலையின் மீது 71 மீட்டர் உயரத்தில் உள்ள சாந்தேரி கோட்டை, சாந்தேரி நகரத்தின் மிகவும் புகழ் பெற்ற நினைவுச்சின்னமாகும். இந்த கோட்டையின் பாதுகாப்பு சுவர்கள் சுமார் 5 கிமீ நீளமுடையவை.

commons.wikimedia.org

 சாந்தேரி தொல்பொருள் அருங்காட்சியகம்

சாந்தேரி தொல்பொருள் அருங்காட்சியகம்


சாந்தேரி தொல்பொருள் அருங்காட்சியகம், சாந்தேரியின் பாரம்பரியம் மற்றும் வரலாற்றுச் சிறப்பை பாதுகாக்கும் பொருட்டாக உருவாக்கப்பட்ட இடமாகும். உண்மையில் சாந்தேரி ஒரு கலாச்சார, வரலாற்று மற்றும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகும்.

கலைப்பொருட்கள்-நினைவுச்சின்னங்களும், பல்வேறு வரலாற்று கட்டிடங்களும் உள்ள சாந்தேரி நகரம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலிருந்தும், மற்றும் உள்ளூர் மக்கள் மற்றும் தனியாக வரலாற்றுப் பொருட்களை சேகரிப்பவர்கள் ஆகியவர்களிடமிருந்தும் சேகரிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளன.

 தியோகார்

தியோகார்

பேட்வா நதிக்கரைகளில் உள்ள அழகிய கிராமம் தான் தியோகார். பசுமை போர்வையால் போர்த்தப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க கிராமமாக இது உள்ளது. இது சாந்தேரியிலிருந்து 71 கிமீ தொலைவில் உள்ள இந்த கிராமம் புகழ் பெற்ற மத வழிபாட்டுத் தலமாகும்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சின்னங்கள் மற்றும் கட்டிடங்கள் பலவற்றைக் கொண்ட இடமாக தியோகார் உள்ளது. இவற்றில் மிகவும் முக்கியமானது 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தசாவதார விஷ்ணு கோவிலாகும்.

 கோஷாக் மஹால்

கோஷாக் மஹால்

சாந்தேரியிலிருந்து 4 கிமீ தொலைவில் அமைந்துள்ள கவர்ச்சியான அரண்மனை தான் கோஷாக் மஹால் உள்ளது. இந்த அரண்மனையை 1445-ம் ஆண்டில் மாள்வா பகுதியின் சுல்தானாக இருந்த மெஹ்மூத் ஷா கில்ஜி என்பவர் கட்டினார்.

கால்பி யுத்தத்தில், மெஹ்மூத் ஷார்கி என்ற சுல்தானை வெற்றி பெற்றதன் அடையாளமாக மெஹ்மூத் ஷா கில்ஜி இந்த கோட்டையை கட்டினார். கோஷாக் மஹால் சதுர வடிவில், வளைவான நுழைவாயில்களைக் கொண்டிருக்கும் அற்புதமான அரண்மனையாகும்.

 ராஜா மஹால்

ராஜா மஹால்

சாந்தேரியிலுள்ள ஆன்டர் ஷேகாரில் பெருமையுடன் நின்று கொண்டிருக்கும் பெருமை மிகு ஏழடுக்கு மாளிகைதான் ராஜா மஹால்! சாந்தேரியின் நிலப்பகுதிகளை அழகுற காட்டிக் கொண்டிருக்கும் சில அரண்மனைகளில் ஒன்றாக இந்த அரண்மனை உள்ளது.

பெரிய அரசவை மண்டபங்கள், அழகிய படிக்கட்டுகள், அற்புதமாக செதுக்கப்பட்ட தூண்கள் மற்றும் சமதளமான திறந்தவெளி பெவிலியன்கள் ஆகியவை இந்த அரண்மனையை பிரமிக்கத்தக்க கட்டிடமாக வைத்துள்ளன.
இந்த அரண்மனையில் இருந்து அருகிலுள்ள மற்றுமொரு அரண்மனையான ராணி மஹாலுக்கு ஒரு சுரங்கப் பாதையும் உள்ளது. இந்த ராணி மஹால், ராஜா மஹாலை விட மாறுபட்ட கட்டிடக்கலை அம்சங்களை கொண்டுள்ளது.

 சிங்புர் அரண்மனை

சிங்புர் அரண்மனை

விந்தியாச்சல் மலைத்தொடர்களின் பசுமையினூடாக குடியிருக்கும் இடமாக சிங்புர் அரண்மனை உள்ளது. இந்த அரண்மனை சாந்தேரியிலிருந்து 4 கிமீ தொலைவில் உள்ளது.
1656-ம் ஆண்டு தேவி சிங் புண்டேலாவால் இந்த மூன்றடுக்கு அரண்மனை கட்டப்பட்டது. அரசர் தொடர்ச்சியாக வேட்டையாட வரும் வேளைகளில் அவருடைய ஓய்விடமாக இந்த அரண்மனை இருந்து வந்தது.

Read more about: travel, trip