Search
  • Follow NativePlanet
Share
» »ஒடிசா காட்டுக்குள்ள ஒய்யாரமாய் ஓர் பயணம் போலாமா? #காட்டுயிர்வாழ்க்கை 12

ஒடிசா காட்டுக்குள்ள ஒய்யாரமாய் ஓர் பயணம் போலாமா? #காட்டுயிர்வாழ்க்கை 12

By Udhaya

இந்தியாவில் உள்ள தனித்தன்மையான பாரம்பரிய பூமிகளில் ஒன்றுதான் இந்த ஒடிசா மாநிலம். ஆழமான வரலாற்று செழிப்பு மற்றும் புராதன நாகரிகத்தின் வேர்களை இந்த பூமி வாய்க்கப்பெற்றிருக்கிறது. இது கலிங்க நாடு என்ற பெயரில் ஒரு உன்னத தேசமாக புராதான காலத்தில் திகழ்ந்திருக்கிறது. பின்னர் சுதந்திர இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றாக ஒரிசா என்ற பெயரில் விளங்கிய இந்த மாநிலம் தற்போது ஒடிசா என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவின் இருதயம் என்றும் பெருமையுடன் இந்த பூமி அறியப்படுகிறது. இந்த தேசத்துக்குள் ஒரு சூப்பர் பயணம் போகலாம் வறீங்களா?

மேற்கு வங்க காட்டுக்குள்ள அழகான ஒரு பயணம் போலாமா? #காட்டுயிர்வாழ்க்கை 11

புபனேஷ்வர்

புபனேஷ்வர்

புபனேஷ்வர் நகரின் எழிலைக்கூட்டும் வகையில் பிந்து சாகர் ஏரி, உதயகிரி மறும் கண்டகிரி குகைகள், தௌலிகிரி, சந்தகா காட்டுயிர் சரணாலயம், அத்ரி வெந்நீர் ஊற்று ஸ்தலம் போன்ற எராளமான இயற்கை அம்சங்கள் நிறைந்துள்ளன. இளைஞர்கள் மற்றும் முதியோரை கவரும் வகையில் பலவகையான சுற்றுலாக்கவர்ச்சி அம்சங்கள் புபனேஷ்வரில் நிறைந்துள்ளன.

Sambit 1982

 வரலாற்று தகவல்கள்

வரலாற்று தகவல்கள்

வரலாறு மற்றும் புராதன இந்தியா குறித்து தெரிந்து கொள்ள விரும்புவர்கள் இங்குள்ள ஒடிசா மாநில அரசு அருங்காட்சியகம், தி மியூசியம் ஆஃப் டிரைபல் ஆர்ட் அன்ட் ஆர்ட்டிஃபாக்ட்ஸ் போன்றவற்றுக்கு விஜயம் செய்யலாம். இயற்கைக்காட்சிகளை ரசிக்க விரும்புவர்களுக்கு ஏற்ற வகையில் இங்கு ஏராளமான பூங்காக்களும் உள்ளன. இவற்றில் பிஜு பட்நாயக் பார்க், புத்த ஜயந்தி பார்க், ஐ.ஜி.பார்க், ஃபாரெஸ்ட் பார்க், காந்தி பார்க், ஏகாம்பர கானன், ஐ.எம்.எஃப்.ஏ பார்க், கரவேலா பார்க், எஸ்.பி. முகர்ஜி பார்க், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பார்க் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

Amartyabag

ஃபாரெஸ்ட் பார்க்

ஃபாரெஸ்ட் பார்க்

ஃபாரெஸ்ட் பார்க் எனும் இந்த அழகிய பூங்கா புபனேஷ்வர் நகரில் அமைந்துள்ளது. கேபிடல் ஹாஸ்பிடல் எனும் மருத்துவமனைக்கு அருகே இந்த பூங்கா அமைந்துள்ளது. பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் விருப்பத்துடன் இந்த பூங்காவிற்கு விஜயம் செய்து மகிழ்கின்றனர்.

பரந்த விளையாட்டு மைதானங்கள், பெரிய பசுமையான மரங்கள் மற்றும் பல்வேறு தாவரங்கள் போன்றவற்றை இந்த பூங்கா கொண்டிருக்கிறது. சுற்றிலும் பசுமைப்போர்வையால் போர்த்தப்பட்டு இந்த பூங்கா காட்சியளிப்பதை கண்களுக்கான விருந்து என்றே சொல்லலாம்.

Devopamx

 தி மியூசியம் ஆஃப் டிரைபல் ஆர்ட் அன்ட் ஆர்ட்டிஃபாக்ட்ஸ்

தி மியூசியம் ஆஃப் டிரைபல் ஆர்ட் அன்ட் ஆர்ட்டிஃபாக்ட்ஸ்

தி மியூசியம் ஆஃப் டிரைபல் ஆர்ட் அன்ட் ஆர்ட்டிஃபாக்ட்ஸ் எனப்படும் இந்த அருங்காட்சியகம் டிரைபல் மியூசியம் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. புபனேஷ்வர் நகர ரயில் நிலையத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் இந்த மியூசியம் அமைந்துள்ளது. ஒடிஷா மாநிலத்தில் வசிக்கும் பழங்குடி மக்கள் குறித்த பல்வேறு தகவல்களை இந்த மியூசியத்தில் பார்வையாளர்கள் தெரிந்துகொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் இந்த மியூசியம் டிரைபல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் எனப்படும் பழங்குடி ஆராய்ச்சி மையமாகவும் இயங்கி வருகிறது.

Pallav Kumar Nayak

சந்தகா காட்டுயிர் சரணாலயம்

சந்தகா காட்டுயிர் சரணாலயம்

சந்தகா காட்டுயிர் சரணாலயம் புபனேஷ்வர் நகரின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இது 175.79 ச.கி.மீ பரப்பளவில் பரந்து காணப்படுகிறது. 1982ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு யானைகள் காப்பகமாக இது முதலில் உருவாக்கப்பட்டது. இந்த சரணாலயம் பல்வேறு உயிரினங்கள் மற்றும் நிறைந்த செழிப்பான வனப்பகுதியாகும். பெரும்பாலும் யானைகள் இங்கு அதிகமாக வசிக்கின்றன.

இவை தவிர சிறுத்தை, குரைக்கும் மான், காட்டுப்பன்றி, எறும்புத்திண்ணி, இந்திய ஓநாய் மற்றும் இதர விலங்குகளும் இங்கு வாழ்கின்றன. பல்வேறு பறவை இனங்களும் இந்த சரணாலயத்தை இருப்பிடமாக கொண்டுள்ளன. ஊர்வன ஜந்துக்களும் இங்கு அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றன.

Devopam

சம்பல்பூர்

சம்பல்பூர்

சம்பல்பூர் சுற்றுலா பல்வேறு காரணங்களுக்காக சிறப்பாக நடந்து வருகிறது. ஹிராகுட் அணை, சமலேஸ்வரி கோவில், ஹீயுமாவின் சாயும் கோவில், சிபிலிமா நீர்; மின் சக்தி திட்டம், காந்தேஸ்வரி கோவில் மற்றும், மிகவும் முக்கியமாக மகாநதியும் சம்பல்பூர் சுற்றுலாவில் பெரும் பங்கு வகிக்கிறது. டெபிகார் வனவிலங்குகள் சரணாலயம் இங்குள்ள முதன்மையான சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். வறண்ட இலையுதிர் காடுகளை கொண்டிருக்கும் இந்த சரணாயலம் பல்வேறு வகையான தாவர மற்றும் விலங்கினங்களை கொண்டுள்ளது. கேட்டில் தீவு, உஷாகோதி, காந்தாரா, ஹடிபாரி மற்றும் விக்ரம்கோல் ஆகியவை சம்பல்பூரில் உள்ள பிற சுற்றுலா தலங்களாகும்

PP Yoonus

 ஹிராகுட் அணை

ஹிராகுட் அணை

சுற்றுலாப் பயணிகள் காண வேண்டிய மாபெரும் சுற்றுலாத் தலமாக ஹிராகுட் அணை உள்ளது. மாபெரும் மகாநதியின் குறுக்காக கட்டப்பட்டுள்ள இந்த அணை காணத்தகுந்த இடமாகும். சம்பல்பூரில் இருந்து 15 கிமீ தொலைவிலேயே உள்ள இந்த இடத்திற்கு ஒரே நாளில் சுற்றுலா சென்று வந்து விட முடியும். 1957-ம் ஆண்டு வாக்கில் கட்டப்பட்ட இந்த அணை, மனிதர்களால் உருவாக்கப்பட்ட அணைக்கட்டுகளிலேயே மிகவும் நீளமானதாகும்.

AkkiDa

சந்திபூர்

சந்திபூர்

சந்திபூரை சுற்றி பல சுற்றுலாத் தலங்கள் உள்ளதால் அதற்கு இது கூடுதல் பலமாக அமைந்துள்ளது. பாறைகள் நிறைந்த பசுமையான நீலகிரி குன்று, புனிதமான பஞ்சலிங்கேஷ்வர் மற்றும் ரெமுனாவில் உள்ள கிர்சோரா கோபிநாத் கோவில் ஆகியவைகள் தான் சந்திபூர் சுற்றுலாவின் முக்கிய ஈர்ப்புகள்.

சஜன்கர் என்ற தனிமை படுத்தப்பட்ட கிராமம், பிடர்கனிகாவில் உள்ள வனவிலங்கு சரணாலயம் போன்ற தலங்கள் சந்திபூரில் இருந்து தொலைவில் இருந்தாலும் இதனை விரும்பி இங்கும் பல சுற்றுலாப் பயணிகள் வருவதுண்டு

Subhasisa Panigahi -

சில்கா

சில்கா

சில்கா சுற்றுலாவின் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்குகிறது உலக புகழ் பெற்ற சில்கா ஏரி. இதை தவிர இங்கே படகு சவாரி, பீன் பிடித்தல், பறவைகள் மற்றும் வனவிலங்குகளை கண்டு களித்தல் போன்ற செயல்களிலும் ஈடுபடலாம். சில்காவில் காணப்படும் பலதரப்பட்ட பறவைகள், நீர் வாழ் விலங்குகள் மற்றும் ஊர்ந்து செல்கின்ற விலங்குகள் அதன் சுற்றுலாவின் வளமையை எடுத்துரைக்கும்.

Krupasindhu Muduli

பறவைகள்

பறவைகள்

ஒவ்வொரு வருடமும் குளிர் காலத்தின் போது ஆயிரக்கணக்கான பறவைகள் சில்கா ஏரிக்கு இடம் பெயரும். இந்த ஏரியில் நீர் வாழ் விலங்குகளான மீன்கள், ஆமைகள், நண்டுகள், இறால்கள் மற்றும் நத்தைகள் வாழ்கின்றன. பல்லி வகையை சேர்ந்த ஸ்கின்க் மற்றும் இராவடி டால்பின்களையும் இங்கே காணலாம்.

Djambalawa

கந்தமால்

கந்தமால்

கந்தமால் மாவட்டம் முழுக்க பல சுற்றுலாத்தலங்கள் நிரம்பியுள்ளன. இவை வருடமுழுதும் இயற்கை ரசிகர்களையும் சுற்றுலாப்பயணிகளையும் ஈர்த்த வண்ணம் உள்ளன. புடுதி நீர்வீழ்ச்சி, லுடு நீர்வீழ்ச்சி, கத்ரமால் மற்றும் பாகதாதரா நீர்வீழ்ச்சி போன்றவை உள்ளூர் ரசிகர்களை மட்டுமல்லாமல் வெகு தூரத்திலிருந்தும் பயணிகளை கவர்ந்திழுக்கின்றன. சக்கபடா எனும் கிராமத்திலுள்ள சிவன் கோயில் ஒன்று ஆன்மீக ஆர்வலர்களை வெகுவாக கவர்கிறது. இரண்டு மலைகள் ஒன்று சேரும் இடத்தில் அமைந்துள்ள பலஸ்கும்பா எனும் கிராமம் தனது ரம்மியமான இயற்கைக்காட்சிகளுடன் பயணிகளுக்காக காத்திருக்கிறது. உள்ளூர் பழங்குடி மக்கள் வாழும் இப்பகுதியில் காட்டுயிர் அம்சங்களும் ஏராளமாக நிரம்பியுள்ளன.

MKar

 மயுர்பஞ்ச்

மயுர்பஞ்ச்

அனைத்து சுற்றுலாப் பயணிகளின் ரசனைக்கேற்ப பல சுற்றுலாத் தலங்களை கொண்டுள்ளது மயுர்பஞ்ச் சுற்றுலா. மயுர்பஞ்சின் தலைநகரமான பரிபடா மற்றும் சிமிலிபல் தேசிய பூங்கா தான் இங்குள்ள இரண்டு பிரதான சுற்றுலாத் தலங்களாகும்.

மிகச்சிறந்த இயற்கை அழகை கொண்ட டியோகுண்ட் என்ற இடம் சுற்றுலாப் பயணிகளை தன் அழகில் கட்டிப் போட்டு விடும். கிச்சிங் என்ற இடத்தில் உள்ள பழமையான கோவில்கள் சுற்றுலாப் பயணிகளை தொலைந்த உலகத்திற்கு அழைத்துச் செல்லும்.

மேற்கு வங்க காட்டுக்குள்ள அழகான ஒரு பயணம் போலாமா? #காட்டுயிர்வாழ்க்கை 11

Byomakesh07

Read more about: travel temple odisha summer
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more