» »தமிழ்நாட்டுக்குள்ள இருந்த மழநாடு...! இப்ப என்னாச்சு தெரியுமா ?

தமிழ்நாட்டுக்குள்ள இருந்த மழநாடு...! இப்ப என்னாச்சு தெரியுமா ?

Written By:

இப்பூவுலகில் ஒவ்வொரு அண்டமும், நிலமும் தோன்றிய காலம் முதல் எத்தகைய மாற்றங்களையெல்லாம் சந்தித்துள்ளது என நாம் அறிவது கடிணம். ஆனால், நமது தமிழ்நாடு எப்படி எல்லாம் மாறி இருக்கிறது என்பது வரைபடம் மூலம் மட்டும் அல்ல, வரலாற்று மூலமாகவும் அறிந்து தெரிந்துகொள்ளலாம். புவியியல் அமைப்பு மட்டுமல்ல. பெயரும் மாறிக்கொண்டேதான் வந்துள்ளது. இதில், தமிழகத்தில், குமரிக் கண்டம், தனுஷ்கோடி என பல பண்டைய நகரங்கள் அழிவுற்றதை நாம் அறிந்ததது தான். ஆனால், முன்னொரு காலத்தில் தமிழகம் எப்படி இருந்தது, தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் எப்படி பிரிக்கப்பட்டிருந்தது என தெரியுமா ?. தமிழகத்தில் தற்போது 32 மாவட்டங்கள் இருப்பது தெரியும். ஆனால், ஒரு காலத்தில் தமிழகத்தின் உள்ளேயே மழநாடு என்னும் மாநிலம் இருந்தது கேள்விப்பட்டிருக்கீங்களா..!!! வாங்க, அந்த மழநாடு எங்க இருந்துச்சு, அந்த நாட்டுக்கு உட்பட்ட மாவட்டங்கள் எது, இப்ப எப்படி இருக்குதுன்னு பார்க்கலாம்.

மழநாடு

மழநாடு


தற்போதைய தமிழகம், வடக்கே திருவள்ளூரில் துவங்கி, தெற்கே கன்னியாகுமரியில் முடிவடைகிறது. மேற்கே கிருஷ்ணகிரி துவங்கி நீலகிரி உள்ளிட்ட கேரள எல்லைப் பகுதிகள் வரை வகைப்படுத்தப்பட்டிருந்தது. இந்த மேற்குப் பகுதிக்குட்பட்ட நிலப்பகுதியிலேயே மழநாடு என்னும் மாநிலம் இருந்துள்ளது. அதாவது, தற்போதைய தர்மபுரி, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, அரியலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகள் இந்த மாநிலத்திற்கு உட்பட்டதாக இருந்துள்ளது.

Jungpionier

எருமைநாடு வரை...

எருமைநாடு வரை...


தமிழ்நாட்டில் இருந்து மாற்றப்பட்ட மழநாடு, திருச்சிராப்பள்ளிக்கு மேல்பால் காவேரியாற்றுக்கு வடபுறத்திலுள்ள பகுதி ஆகும். முதல் பண்டைய எருமைநாடு வரை அதாவது தற்போதய மைசூரு வரை தற்கால நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, அரியலூர், திருச்சி மற்றும் கரூர் மாவட்ட பகுதிகளை உள்ளடக்கி இருந்தது. கி.மு. முதல் கி.பி வரை மழநாட்டின் வரலாறு நீள்கிறது. சங்ககால புலவரான அவ்வையாரால் பாடப்பட்ட அதியமான்கள், வல்வில் ஓரி, கொல்லி மழவன், அரியலூர் ஜமீன் சமஸ்தானத்தை 14ம் நூற்றாணதில் ஆண்ட ஒப்பில்லா மழவராயர் போன்றோர் மழநாட்டை செழிப்புமிக்க நாடாக ஆட்சி செய்து வந்துள்ளனர்.

Jim Ankan Deka

மழநாடு பயணிப்போம்

மழநாடு பயணிப்போம்


நம் தமிழ்நாட்டிலேயே தனித்து நின்ற மழநாட்டில் பண்டைய சிறப்புகள் குறித்து அறிந்துகொள்ளவும், அப்பகுதிகளில் என்னவெல்லாம் உள்ளது என தெரிந்துகொள்ளவும் பயணம் செய்யத் திட்டமிட்டால் திருச்சியில் உள்ள ஏற்காடு, தர்மபுரி அதியமான் கோட்டை, நாமக்கல் துர்கம் கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு எல்லாம் சென்று வாருங்கள்.

Vensatry

சேலம்

சேலம்


முற்காலத்தில் சேரலம் என்ற பெயரில் வழங்கி வந்த சேலம் நகர், சேர ராஜ்ஜியத்தின் மாமன்னர் சேரமான் பெருமாள் என்பவரால் உருவாக்கப்பட்டது. சேரலம் என்ற வார்த்தைக்கு மலைத்தொடர்" என்று அர்த்தம். சேலத்தின் வரலாறு கற்காலத்தில் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. பாலியோலித்திக் மற்றும் நியோலித்திக் காலங்களில், மக்கள் இங்கு வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இப்பகுதியில் கிடைத்துள்ளன. சேலம், பிரபலமான சுற்றுலா மற்றும் வழிபாட்டுத் தலமாகும். இந்நகர், கோட்டை மாரியம்மன் கோவில், தாரமங்கலம் கோவில், சேலம் சுகவனேஸ்வரர் கோவில், அருள்மிகு அழகிரிநாதர் கோவில் போன்ற பல வழிபாட்டுத் தலங்களின் உறைவிடமாகத் திகழ்கிறது. மிகப் பிரபலமான சுற்றுலாத் தலங்களான ஏற்காடு மலை, கிளியூர் நீர் வீழ்ச்சி, தாரமங்கலம் மற்றும் மேட்டூர் அணை ஆகிய இடங்கள், சேலத்திற்கு மிக அருகில் அமைந்திருப்பதனால், இவ்விடங்களுக்கு சேலத்தில் இருந்து எளிதாகச் செல்லலாம். சேலம் ஒரு பிரபலமான வணிக மையமாகவும் இருக்கின்றது.

Rrjanbiah

தர்மபுரி

தர்மபுரி


வரலாற்று ரீதியாக சோழர்கள், ராஷ்டிரகூடர்கள் மற்றும் பாண்டியர்கள் தர்மபுரியை ஆட்சி செய்திருக்கின்றனர். தர்மபுரியைச் சுற்றிலும், பிரபலமான இந்து சமய கோவில்கள் மற்றும் கிறிஸ்தவ சமய ஆலயங்கள் உள்ளன. முக்கியமாக கோட்டை கோவில், சென்றாய பெருமாள் கோவில் மற்றும் இங்கிருக்கும் தீர்த்தமலையில் அமைந்திருக்கும் திரு தீர்த்தகிரீஸ்ரர் கோவில் போன்ற இந்து சமய திருத்தலங்கள் பக்தர்களைக் கவரும் வகையில் உள்ளன. மேலும் கிறிஸ்தவ ஆலயங்களான மவுண்ட் கார்மல் ஆலயம், சிஎஸ்ஐ சீயோன் ஆலயம் போன்றவையும் தர்மபுரியை அழகுபடுத்துகின்றன.

Praveen Kumar.R

நாமக்கல்

நாமக்கல்


சேலம் மாவட்டத்திலிருந்து 1997-ம் ஆண்டு தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது நாமக்கல். இதன் வரலாறு 7-ம் நூற்றாண்டு வரை பின்னோக்கிச் செல்கிறது. கொங்குத் தமிழ் நாட்டின் ஒரு பகுதியாகவே நாமக்கல் இருந்து வந்திருக்கிறது. அதியமானின் வம்சத்தைச் சேர்ந்த குணசீலன் என்ற மன்னரால் இந்த நகரம் ஆட்சிசெய்யப்பட்டு வந்தது. குணசீலரால் கட்டப்பட்ட வரலாற்று சின்னங்களான ரங்கநாத சுவாமி கோவிலும், நரசிம்ம சுவாமி கோவிலும் இன்றும் இங்கு நிலைத்திருக்கின்றன. பல்லவ வம்சத்தினருடன் குணசீலர் மேற்கொண்ட திருமண உறவு இந்த நகரின் கட்டிடக்கலையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பிறகு இந்த நகரம், சோழர்களாலும், ஹோய்சலர்களாலும் 14-ம் நூற்றாண்டு வரை ஆளப்பட்டு வந்தது. அதன் பின்னர், விஜய நகர அரசர்கள், மதுரை நாயக்கர்கள், பீஜாப்பூர் சுல்தான்கள், கோல்கொண்டா மைசூர் மன்னர்கள், மராத்தியர்கள், ஹைதர் அலி மற்றும் இறுதியாக ஆங்கிலேயர்கள் ஆகியோரால் தொடர்ச்சியாக ஆட்சி செய்யப்பட்ட நகரமாக நாமக்கல் இருந்திருக்கிறது. மேற்கண்ட ஒவ்வொரு அரசுகளும் தங்களுடைய முத்திரையை இந்நகரில் பதித்து, இதனை ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக மாற்றிவிட்டன. நாமக்கல்லில் முக்கிய சுற்றுலாத் தலமாக ஆஞ்சநேயர் கோவில், நரசிம்மர் கோவில் உள்ளிட்ட ஆன்மீகத் தலங்களும், துர்கம் கோட்டை, கற்கோட்டை, நைனா மலைக்கோவில் உள்ளிட்ட வரலாற்று சிறப்பு மிக்க தலங்களுக்கும் சென்று வாருங்கள்.

Raja1111

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியை நுளம்பர்கள், சோழர்கள், கங்கர்கள், பல்லவர்கள், ஹோய்சளர்கள், விஜயநகரம் மற்றும் பீஜப்பூர் அரசர்கள், மைசூர் உடையார்கள் மற்றும் மதுரை நாயக்கர்கள் ஆகியோர் பல்வேறு காலகட்டங்களில் ஆட்சி செய்து வந்துள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய காலங்களில் கட்டிய கோவில்கள் அவர்களுடைய கட்டிடக்கலைக்கும், ஆன்மீக வழிபாடுகளுக்கும் இன்றும் சான்றாக திகழ்கின்றன. அவற்றில் வேணுகோபால் சுவாமி கோவில், அருள்மிகு மரகதாம்பிகை சந்திர சூடேஸ்வரர் கோவில், ஸ்ரீ பார்ஷ்வ பத்மாவதி சக்திபீட தீர்த்தம் ஜெயின் தியான மண்டபம் உள்ளிட்டவை கிருஷ்ணகிரி வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் முதன்மையான இடங்களாகும்.

Tapanmajumdar

திருவண்ணாமலை

திருவண்ணாமலை


கி.மு 1 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் இருந்தே திருவண்ணாமலையில் மக்கள் நகரமைத்து வாழ்ந்து வருவதற்கான சான்றுகள் உள்ளன. இது சங்கம் வளர்ந்த மதுரையைக் காட்டிலும் பழமையானது. தென்னிந்தியாவின் மிகவும் பழமையான நகரங்களில் ஒன்றான இந்நகரைப் பற்றி சங்க இலக்கிய பாடல்களில் குறிப்பிட்டப்பட்டுள்ளது. சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் தொண்டைமான் இளந்திரையன் திருவண்ணாமலை நகரத்தை ஆண்டதை பரிபாடல் மூலம் அறிய முடிகின்றது. கி.பி. 4ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டு வரை பல்லவர்களின் முக்கிய நகராக விளங்கிய திருவண்ணாமலை, கலை மற்றும் மொழியில் சிறந்து விளங்கியது. பல்லவர்கள் ஆட்சிக்கு முன் சென்னை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய தற்கால மாவட்டங்களை உள்ளடக்கிய தொண்டை மண்டலத்தின் முக்கிய நகராகவும் விளங்கியுள்ளது. இங்கு அமைந்துள்ள
அருணாச்சலேஷ்வரா கோவில், ரமணா ஆசிரமம், விருபாக்‌ஷா குகை மற்றும் சேஷாத்ரி சுவாமிகள் ஆசிரமம் உள்ளிட்டவை முக்கியச் சுற்றுலாத் தலங்களாகும்.

Guy of india

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்