» »அதிரிபுதிரியான தீபாவளி கொண்டாட்டத்துக்கு நீங்கள் கட்டாயம் செல்லவேண்டிய இடங்கள் எவை தெரியுமா?

அதிரிபுதிரியான தீபாவளி கொண்டாட்டத்துக்கு நீங்கள் கட்டாயம் செல்லவேண்டிய இடங்கள் எவை தெரியுமா?

Written By: Udhaya

அட்டகாசமான நாம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் தீபாவளி பண்டிகை இதோ நெருங்கி விட்டது. புத்தாடை எடுத்து, புத்துணர்ச்சி பொங்க தீபாவளியை வரவேற்கத் தயாராகிவிட்டீர்களா?

இந்தியாவில் எங்கெல்லாம் தீபாவளி வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகிறது தெரியுமா? வாருங்கள் பார்க்கலாம்.

ஜெய்ப்பூர்

ஜெய்ப்பூர்


மங்கிய ஒளியில் மின்மினிப் பூச்சிக்கள் செடிகொடிகளை அலங்கரிப்பதைப் போல், கட்டிடங்களையும், மரம் செடி கொடிகளையும் அலங்கரித்துக்காத்திருக்கிறது ஜெய்ப்பூர்.

கட்டிடங்களும், கடைவீதிகளும், வீடுகளும் வண்ணமயமான விளக்குகளால் ஒளிர நாவிற்கு இனிமை சேர்க்கும் பலவகை பலகாரங்களும் வீட்டு பாத்திரங்களை அலங்கரிக்க மின்னும் தீபாவளியை பிங்க் நகரத்தில் கொண்டாடுவோம் வாருங்கள்

Pati-G [Pati Gaitan]

அமிர்தசரஸ்

அமிர்தசரஸ்

அமிர்தசரஸில் தீபாவளி என்பது ஒரு மாயக்கலைஞரின் வித்தையைப் பார்ப்பதற்கு ஈடான பொழுதுபோக்காகும்.

உங்கள் கருஇமை விழிகளை படபடக்கச் செய்து படாரென வெடிக்கும் பட்டாசுகளை பார்ப்பதற்கென்றே தங்க கோயில் அமைந்துள்ள அமிர்தசரஸ் நகரத்துக்கு செல்லலாம்.

கோவா

கோவா

கோவா அல்லது கொண்டாட்டம் இரண்டையும் பிரித்து பார்க்கமுடியுமா என்ன. கிறிஸ்துமஸ், புதுவருட கொண்டாட்டங்களுக்கு சற்றும் குறைவின்றி தீபாவளியை மிகச் சிறப்பாக கொண்டாட வரிந்துக் கட்டி இறங்கி நிற்கின்றனர் கோவா இளைஞர்கள்.

கடற்கரைகளின் ஓரத்திலும், பெரிய பெரிய மால்களிலும், கட்டிடங்களிலும் வண்ணமயமான விளக்குகளை கண்ணைக் கட்டினாற்போல திரும்பும் இடமெல்லாம் ஜொலிக்கச் செய்து இந்த தீபாவளியை ஜோராக வரவேற்கிறது கோவா.

joegoauk44

வாரணாசி

வாரணாசி

இந்தியாவின் புண்ணிய பூமி என்று வடநாட்டவரால் அழைக்கப்படும் இந்த தீபாவளி தித்திக்கும் பலகார இனிப்பு வகைகளுடன் இன்றியமையாத மகிழ்ச்சியோடும் இறைவனின் ஆசியோடு வாரனாசியில் கொண்டாடப்படுகிறது.

Maciej Dakowicz

கொல்கத்தா

கொல்கத்தா

மற்ற நகரங்களிலிருந்து சற்று மாறுபட்டு இன்னும் அட்டகாசமாக கொண்டாடப்படுகிறது கொல்கத்தாவில். இந்த நகரத்துக்கு ஏற்றவாறு அதற்கென்றே தனித்துவமான தீபாவளி கொண்டாட்டங்கள் கலைகட்டி வருகின்றன.

வழக்கமாக ஒரு நாள் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை இந்த வருடம் ஒரு வாரத்துக்கு முன்னதாகவே கலைக் கட்ட தொடங்கி விட்டது.

கொல்கத்தாவில் கொண்டாடப்படும் காளி துர்க்கா பூசையைப் போலவே மிகவும் பிரம்மாண்டமாக இந்த வருட தீபாவளி கொண்டாடப்படவுள்ளது.

Os Rúpias

 மும்பை

மும்பை

தொழில் நகரான மும்பையில் இந்தியாவின் பலதரப்பட்ட மக்களும் வாழ்கின்றனர். அன்றாட பணிகளின் சோர்வின் காரணமாகவும், தீபாவளி உற்சாகத்தை இன்னும் ஆர்வத்துடன் இந்த வருடம் கொண்டாடவுள்ளனர்.

ஒளியின் திருவிழாவாக எண்ணி கொண்டாடப்படும் தீபாவளி, மும்பையின் கடற்கரைகளில் வண்ணமயமாக பிரதிபலித்து காண்போர் கண்களுக்கு விருந்தளிக்கும்.

Abhijeet Rane

புருஷ்வாடி

புருஷ்வாடி

நகரங்களில் தீபாவளி கொண்டாடி அலுத்துவிட்டதா கவலையை விடுங்க. புருஷ்வாடி வாங்க.

மும்பை - நாசிக் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது புருஷ்வாடி எனும் அழகிய கிராமம்.

இங்குள்ள மக்கள் தீபாவளித் திருநாளை கோயிலுக்கு சென்று வழிபட்டு, வண்ண வண்ண பட்டாசுகளை, புத்தாடைகள் அணிந்து வெடித்து கொண்டாடுகின்றனர்.

AbhisekSharmaRoy

 நீங்கள் எப்படி கொண்டாடப்போகிறீர்கள்

நீங்கள் எப்படி கொண்டாடப்போகிறீர்கள்


உங்கள் இல்ல சொந்தங்களோடோ அல்லது நண்பர்களோடோ தீபாவளி கொண்டாடும் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும், புத்துணர்ச்சியும் பிறக்க தமிழ் நேட்டிவ் பிளானட் சார்பாக வாழ்த்துக்கள்.

Os Rúpias

Read more about: india, goa, mumbai, kolkata, amritsar
Please Wait while comments are loading...