Search
  • Follow NativePlanet
Share
» »கோட்டையில் மறைக்கப்பட்ட புதையல்..! தொட்டவர்களை விட்டுவைக்காத மர்மம்...

கோட்டையில் மறைக்கப்பட்ட புதையல்..! தொட்டவர்களை விட்டுவைக்காத மர்மம்...

புதையலைத் தேடி யாரேனும் உள்ளே வந்தால் அகழியில் விழுந்து முதலைக்கு இரையாக வேண்டும். அதனைக் கடந்தாலும், புதையலைத் தேடிச் செல்பவர்கள் கடைசி நிமிடத்தில் உயிரிழந்து விடுவர்.

முன்னொரு காலத்தில் மக்களை ஆட்சி செய்துவந்த மன்னர்கள் தங்களது நாடு செல்வத்திலும், செழுமையிலும் சிறந்து விளங்க வேண்டும் என பல பொக்கிஷங்களை சேர்த்தனர். அவ்வாறு சேகரிக்கப்பட்ட தங்கமும், வைடூரியமும் உள்ளிட்ட செல்வங்கள் பிற நாட்டுடனான போரின் போது கொள்ளையடிக்கப்பட்டன. இவற்றில் இருந்து தங்களது செல்வத்தை பாதுகாக்க எண்ணிய மன்னர்கள் சுரங்கம், கிணறு, இரகசிய அறை உள்ளிட்ட பகுதிகளில் தங்களது செல்வங்களை மறைத்து வைத்து அதனை பாதுகாக்கவும் செய்தனர். ஒரு கட்டத்திற்குப் பிறகு கால மாற்றம் உள்ளிட்டவற்றால் மறைக்கப்பட்ட செல்வங்கள் தற்போது புதையல்களாக வெளிப்படுகின்றன. ஆனால், அவற்றை எடுப்பதுதான் அவ்வளவு எளிதானதாக இருப்பதில்லை. அப்படி ஒரு புதையல் இருக்கும் கோட்டையைத் தேடி பயணிக்கலாம் வாங்க.

குஜராத்

குஜராத்


இயற்கை அழகு ஒரு புறம் இருக்க இந்தியா முழுவதும் அறியப்படும் முக்கியமான புனித யாத்திரைத் தலங்கள் நிறைந்த பகுதி இந்த குஜராத் மாநிலம். துவாரகா மற்றும் சோம்நாத் ஆகியவை இந்திய புராணிக மரபில் பிரதான இடத்தை பெற்றுள்ள புனித தலங்களாக புகழ் பெற்றுள்ளன. ஆன்மீகத் தலங்கள் மட்டுமின்றி மிக முக்கியமான வரலாற்றுச் சின்னங்கள் மற்றும் தொல்லியல் தலங்கள் போன்றவற்றையும் குஜராத் மாநிலம் பெற்றிருக்கிறது. ஹரீர் வாவ் எனும் படிக்கிணறு மற்றும் சம்பானேர் வரலாற்று தலம் போன்றவை வரலாற்று ஆர்வலர்களை மெய்சிலிர்க்க வைக்கும் அம்சங்களாகும்.

Malaiya

அஹமதாபாத்தை ஆண்ட அஹமத் ஷா

அஹமதாபாத்தை ஆண்ட அஹமத் ஷா


அஹமத் ஷா சுல்தானின் பேரனான மஹ்மூத் பெக்டா என்பவர் 10 கி.மீ சுற்றளவையும், 12 வாசல்களையும், 189 கொத்தளங்களையும், 6000 அலங்க அமைப்புகளும் (ஆயுதத்துவாரம்) கொண்ட கோட்டை அமைப்பை உருவாக்கி இந்த அஹமதாபாத் நகரத்தின் பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளார். தற்போது, கோட்டைச்சுவரின் சிதிலங்கள் மற்றும் கோட்டை வாசல்கள் பார்வையாளர்களை வேறொரு காலகட்டத்திற்கு இழுத்துச்செல்லும் மாய சக்தியுடன் காட்சியளிக்கின்றன.

Alphonse de Neuville

ஜூனாகத்

ஜூனாகத்


குஜராத், அஹமதாபாத், காந்திகிராம் உள்ளிட்ட பகுதிகளைப் போலத்தான் ஜூனாகத் பகுதியும். குஜராத்தில் காணப்படும் கோட்டைகளைப் போல் இப்பகுதியும் வானுயர்ந்த கோட்டைகளுக்கு புகழ்பெற்றுள்ளது. இருப்பிகும், அம்மாநிலத்தில் உள்ள பிற கோட்டைகளைப் போல் அல்லாமல் ஜூனாகத் மறைக்கப்பட்ட மர்மமான கூடுதல் சிறப்புகளையும் பெற்றுள்ளது.

Bernard Gagnon

உபர்கொட் கோட்டை

உபர்கொட் கோட்டை


ஜூனாகத்தை போன்று வேறுபாடு மிக்க இடங்கள் குஜராத்தில் மிக அரிதானதாகும். கிர்நார் மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஜூனாகத்திற்கு இந்த பெயர் இங்கு அமைந்துள்ள உபர்கொட் கோட்டையின் உபயத்தால் கிடைத்தது.

Bernard Gagnon

பழைய கோட்டை

பழைய கோட்டை


இந்த உபர்கோட் கோட்டையானது கி.மு. 320-ம் ஆண்டில் சந்திரகுப்த மெளரியரால் கட்டப்பட்டது. ஜூனாகத் என்கிற வார்த்தைக்கு "பழைய கோட்டை" என்று பொருள். மேலும் அதற்கு நகரின் மையத்தில் உள்ள முக்கியமான கோட்டை என்றும் பொருள்படுகிறது, அதற்கு ஏற்றவாறே நகரத்தில் மையத்தில் இக்கோட்டையும் அமைந்துள்ளது.

Bernard Gagnon

ஜூனாகத் வரலாறு

ஜூனாகத் வரலாறு


ஜூனாகத்தின் வரலாறு மிகப் பழமையானது. இந்த நகரம் சந்திரகுப்த மெளரியர் மற்றும் அசோகருடைய பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது. இங்கு ஸகா அரசர் மஹாசத்ரப் ருத்ரதாமன் ஆட்சியைச் சேர்ந்த கல்வெட்டுகளை நாம் காண முடியும்.

Gopikapadia

குகையில் வாழும் புத்தர்

குகையில் வாழும் புத்தர்


சமணம் மதம், இந்து மதம், புத்த மதம், மற்றும் இஸ்லாமியம் உட்பட அனைத்து மதங்களும் இந்த நகரத்தில் தங்களுடைய முத்திரைகளை பதித்துச் சென்றுள்ளன. இங்கு கிமு 500-க்கும் முற்பட்ட கடினமான பாறைகளில் குடையப்பட்ட புத்த குகைகள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Ashok modhvadia

கிர்நார் சிகரம்

கிர்நார் சிகரம்


ஜூனாகத் நகரம் இந்து மற்றும் சமண மதங்களில் ஒரு முக்கியமான இடமாக திகழ்கிறது. இந்த நகரத்தின் மேலே கிர்நார் சிகரம் உள்ளது. இந்தச் சிகரத்தை அடைய சுமார் 9999 படிகளை உடைய பாதை மலைகள் மற்றும் கோவில்கள் வழியே செல்கிறது. அந்த மலைப்பாதையானது வானத்தை தொடுவதுபோல் தெரிவதால் அதிலிரிந்து நாம் காணும் காட்சியானது என்றும் நம் மனதை விட்டு விலகாது.

Emmanuel DYAN

உபர்கோட் கோட்டை

உபர்கோட் கோட்டை


ஜூனாகத்தின் மிகப் பழமையான மற்றும் மிக முக்கியமான இடங்களில் உபர்கோட்டும் ஒன்று. இது 2300 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மேல் கோட்டை ஆகும். இந்தக் கோட்டையில் சில இடங்களில் 20 மீட்டருக்கும் அதிக உயரமுடைய சுவர்கள் காணப்படுகின்றன.

Bernard Gagnon

குகையில் பதுக்கிய புதையல்

குகையில் பதுக்கிய புதையல்


கோட்டையின் ஒரு பகுதியில் உள்ள குகைகள் கி.பி 1 மற்றும் 4-ஆம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. இந்தக் குகைகளில் அழகான நுழைவாயில்கள் மற்றும் தூண்கள், தண்ணீர் கோட்டைகள், சட்டசபை மண்டபம் மற்றும் தியானம் மண்டபம் போன்றவை உள்ளன. இவற்றைக் கடந்து இருள் சூழ்ந்த சுரங்கத்தில் பயணித்தால் புதையல் இருப்பதாக நம்பப்படுகிறது. அதற்கான மறைமுகக் குறியீடுகளும் குகையின் உட்புறத்தில் காணப்படுகிறது.

Anuradha Shankar

காவல் காக்கும் முதலைகள்

காவல் காக்கும் முதலைகள்


குகையின் உள்ளே ஒருசில மீட்டர் பயணித்தால் அங்கு சுமார் 300 அடி ஆழம் உள்ள அகழி காணப்படுகிறது. அந்த அகழியில் முதலைகள் வளர்க்கப்பட்டதற்கான தடையங்களை காண முடியும். இவை, எதிரிகளிடம் இருந்து மறைத்துவைக்கப்பட்டுள்ள செல்வங்களை பாதுகாக்க வளர்க்கப்பட்டுள்ளன. யாரேனும் உள்ளே வந்தால் அந்த அகழியில் விழுந்து முதலைக்கு இரையாக வேண்டும். இன்று முதலைகள் அங்கு இல்லாவிட்டாலும் புதையலைத் தேடிச் செல்பவர்கள் கடைசி நிமிடத்தில் உயிரிழந்து விடுவதாகக் கூறப்படுகிறது.

Bernard Gagnon

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


ஜுனாகத்திற்கு குஜராத்தின் ராஜ்கோட் போன்ற நகரங்களில் இருந்தும், மகராஷ்டிரா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. உள்ளூர் போக்குவரத்து வசதிகள் உனா, அகமதாபாத், ஜாம்நகர் மற்றும் வெராவல் போன்ற இடங்களில் இருந்து கிடைக்கின்றன.

Vrajesh jani

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X