» »3 ஆண்டுகளுக்கு மேலாக இரவும் பகலும் இடித்தும் அசைக்க முடியாத ஏலியன் கோவில்.!

3 ஆண்டுகளுக்கு மேலாக இரவும் பகலும் இடித்தும் அசைக்க முடியாத ஏலியன் கோவில்.!

Posted By: Udhaya

ஏலியன் டெக்னாலஜி என்று எல்லாரோலும் புகழப்படும் இந்த எல்லோராவில் உள்ள கைலாசநாதர் கோயில்தான் நாம் பார்க்கவிருப்பது. எல்லோரா குகையினுள் உள்ள கைலாசநாதர் கோவிலானது முற்றிலும் மனித கைகளினால் குடைந்து கட்டப்பட்ட கோவில் என்பன போன்ற சந்தேகங்களின் அடிப்படையிலான கேள்விகளை பல நூற்றாண்டு காலமாக தொல்பொருள் ஆய்வாளர்களும், ஆராய்ச்சியாளர்களும் எழுப்பி வருகின்றனர்.

அவர்கள் எழுப்பும் வினாக்களில் முக்கியமானது, இது மனித சக்தியால் சாத்தியப்பட்டிருப்பது மிகப்பெரிய வியப்பு. அதுவும் திராவிட கட்டடக்கலையில் உருவான இந்த அமைப்பு பழங்கால பல்லவ, சோழ அல்லது பாண்டியர்களின் கட்டுமானமாகத்தான் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

அதிலும் குறிப்பாக, திருநெல்வேலி அருகிலுள்ள பல இடங்களில் இதுபோன்று சிறிய சிறிய கோயில்கள் காணப்படுகின்றன. இதனால் எல்லோரா பாண்டிய வம்சத்தினரால் அல்லது அவர்களின் உதவியால் கட்டப்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது.

 சந்தேகப் புள்ளி

சந்தேகப் புள்ளி

உலகின் பழமையான மற்றும் மிகவும் பிரபலமான படைப்புகளில் ஒன்று எல்லோராவில் உள்ள கைலாச கோவில். இதன் கோபுரத்தின் உச்சியில் தொடங்கி கீழ் நுனியை நோக்கிய பாறை செதுக்குதல் முறை கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக "கீழிருந்து மேல் நோக்கிய வகையில்தான் கட்டமைப்புகள்தான் மனித இனம் பின்பற்றியது. அந்த கட்டமைப்பு முறைகளுக்கு முற்றிலும் தலைகீழான முறையில் இக்கோவில் கட்டமைக்கப்பட்டுள்ளது - இதுதான் இக்கோவில் சார்ந்த அனைத்து புதிர்கள் மற்றும் சந்தேகங்களுக்குமான ஆரம்ப புள்ளி.!

பாண்டியர்கள் ஆதிக்கம்

பாண்டியர்கள் ஆதிக்கம்

குகைக்கோயில் எல்லோரா கைலாசநாதர் கோயில் - பாறையைக் குடைந்து உருவாக்கம் பெற்ற பண்டைய இந்து மத கோயில்களில் ஒன்றாகும். அந்த காலத்தில் இந்தியா என்று தற்போது அழைக்கப்படும் பரப்புகளில் சோழர்களைத் தவிர்த்து இந்தமாதிரியான குடைவரைக் கோயில்களை கட்டுவதில் பாண்டியர்கள்தான் தலை சிறந்தவர்கள். அதனால் அவர்கள்தான் இதை கட்டியிருக்கவேண்டும் எனவும் சிலர் கூறிவருகின்றனர்.

சோழர்கள் ஏன் இல்லை

சோழர்கள் ஏன் இல்லை

சோழர்கள் கட்டிய கட்டிடங்களின் அருகேயே அல்லது அவர்களின் ஆட்சிப்பகுதிகளில் எங்கேயோ இந்த மாதிரியான இடத்தில் இப்படி ஒரு கோயில் கட்டப்பட்டுள்ளது என்று நிச்சயம் கல்வெட்டு எழுதி வைத்திருப்பார்கள்.

எல்லோரா குகைகளிலும் சரி, சோழர்களின் வேறு இடங்களிலும் சரி அப்படி கல்வெட்டுகள் எதும் கிடைக்கவில்லை. அதிலும் எல்லோராவுக்கு முன்பே கட்டப்பட்ட பல இடங்களில் கல்வெட்டுக்களை வெட்டி வைத்திருக்கும் சோழர்கள் இதை அழியும்படியான அல்லது அழிக்கும்படியாக கட்டியிருக்கமாட்டார்கள் என்பதே சந்தேகம்.

 எல்லோரா எங்கே இருக்கிறது?

எல்லோரா எங்கே இருக்கிறது?

இந்தியாவின் மகராஷ்டிரா மாநிலத்திலுள்ள எல்லோராவில் அமைந்துள்ள குகைக்கோயில்களில் ஒன்றான இது - பெரியதொரு மலையைக் குடைந்து அடுத்தடுத்து உருவாக்கப்பட்டுள்ளன.

யாருடைய ஆட்சியில் கட்டப்பட்டது?

யாருடைய ஆட்சியில் கட்டப்பட்டது?

திராவிட கலைப்பாணிக்குரிய பண்பு இராஷ்டிரகூட பேரரசின் முதலாம் கிருஷ்ணன் ஆட்சிக் காலத்தில் (எட்டாம் நூற்றாண்டு) கட்டமைக்கப்பட்டுள்ள இக்கோயில், திராவிட கலைப்பாணிக்குரிய பண்புகளையும், இராஷ்டிரகூட கலைப்பாணியின் அம்சங்களையும், பல்லவ கலை பண்புகளையும் ஒருங்கே கொண்டுள்ள "வித்தியாசமான" கட்டமைப்பாகும். ஆனாலும் இதை கட்டியது யார் என்பது சரியான ஆதாரங்களுடன் விவரிக்கப்படவில்லை.

மலைத்தளியில் பிரம்மாண்டம்

மலைத்தளியில் பிரம்மாண்டம்


பிரம்மாண்டமான மலைத்தளி தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்து மலைத்தளிகளைப் போலில்லாமல் இதுவொரு முழுமையான ஆலயம் ஒன்றின் அம்சங்களைக் கொண்ட பிரம்மாண்டமான மலைத்தளியாக காட்சியளிக்கின்றது. அந்த பிரம்மாண்டத்தின் பின்னால் இந்த எல்லோரா கைலாசநாதர் கோவிலானது பல ரகசியங்களையும் புதைத்து வைத்துள்ளது.

அதி நவீனத்துவம்

அதி நவீனத்துவம்

மேம்பட்ட மற்றும் அதிநவீன தத்துவம் அதாவது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பண்டைய நாகரீகங்களானது, மிகவும் மேம்பட்ட மற்றும் அதிநவீனதத்துவமாக இருந்துள்ளதாக நம்பப்படுகிறது. அதை சுட்டிக்காட்டும் பண்டைய தளங்களில் மிகவும் பலமான ஆதாரமாக - இக்கோவில் திகழ்கிறது.

 தொடரும் சந்தேகங்கள்

தொடரும் சந்தேகங்கள்

வெறும் 18 ஆண்டுகளில் எட்டாம் நூற்றாண்டிலேயே எந்த விதமான 'நவீன' தொழில்நுட்ப பயன்படுமின்றி மலைப்பாறைகள் வெட்டி குடையப்பட்டது எப்படி.? இந்தியாவில் மட்டுமின்றி மற்றும் வெளிநாடுகளில் உள்ள வரலாற்றாசிரியர்கள் உட்பட 400,000 டன் எடை அளவிலான பாறைகளை அகற்றி, வெறும் 18 ஆண்டுகளில் இம்மாதிரியான கோவிலை கட்டிமுடிப்பது மனிதர்களால் முடியாத காரியமென்று கூறுகின்றனர்.

அவுரங்க சீப்பின் ஆற்றாமை

அவுரங்க சீப்பின் ஆற்றாமை

இப்படி ஒரு அதிசயத்தைக் கண்ட அவுரங்கசீப் கைலாச கோவிலை இடித்து நொறுக்க கட்டளையிட்டுள்ளார். சுற்றியுள்ள எல்லோரா குகைப்பாறையில் தோண்டிய 16-வது கோவில் தான் கைலாச நாதர் கோவில் என்பதும், அங்கு மொத்தம் 34 குகைகள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

திறம்பட செய்யப்பட்ட வேலைக்கு பலனில்லை

திறம்பட செய்யப்பட்ட வேலைக்கு பலனில்லை

3 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த இடிப்பு வேலையை நிகழ்த்த அவர் 1000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை அனுப்பியுள்ளார். ஆனால் 3 ஆண்டுகளுக்கும் மேலாக இரவும் பகலும் வேலை செய்தும் கூட கைலாச கோவிலின் சில சிலைகளை மட்டுமே அவர்களால் சிதறடிக்கப்பட்டுள்ளது. அதன் கட்டமைப்பை நுனியும் அசைக்கமுடியவில்லையாம்.

எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்

இந்திய சிற்பக் கலையின் பொக்கிஷமாக போற்றப்படும் எல்லோராவின் தொன்மையான குகைக் கோயில்கள் ஔரங்கபாத்திலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில், மகாராஷ்டிர மாநிலத்தில் அமைந்திருக்கிறது.

சமணர்களின் உன்னதம்

சமணர்களின் உன்னதம்

இங்குள்ள 34 குகைகளும் ஹிந்து, புத்தம், ஜைனம் ஆகிய மூன்று மரபுகளையும், அதன் பெருமைகளையும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. இதில் முதல் 12 குகைகள் புத்த கோயில்களாகவும், அடுத்த 17 குகைகள் ஹிந்து கோயில்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.அதே நேரத்தில் மீதம் உள்ள 5 குகைகளும் சமண மரபின் உன்னதத்தை உலகுக்கு எடுத்துரைத்துக் கொண்டிருக்கிறது.

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்


புத்த குகைக் கோயில்கள், சமண குகைக்கோயில்கள், பிராமணிய குகைக்கோயில்கள் என சுற்றிலும் இன்னும் சில கோயில்கள் அமைந்துள்ளன.

y J. Johnston

 புத்த குகைக் கோயில்கள்

புத்த குகைக் கோயில்கள்

12 குகைகள் புத்த குகைக் கோயில்கள் என்று அறியப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவின் மிகப்பெரிய புத்த விகாரம் இது தான். இது மூன்று தளங்களை கொண்டது. இதன் அகலமான வாயில் வழியே சென்றால் மிகப்பெரிய முற்றத்தை நீங்கள் அடைவீர்கள். அங்குள்ள தனித்தனி படிக்கட்டுகள் உங்களை குகையின் வெவ்வேறு தளங்களுக்கு கூட்டிச் செல்லும். இதன் அரங்குகளில் ஏராளமான தூண்களும், ஓவியங்களும், அமர்ந்திருக்கும் புத்தர் சிலையும் உள்ளன.

Ms Sarah Welch

சமண குகைக்கோயில்கள்

சமண குகைக்கோயில்கள்

குகை எண் 30,32,33 ஆகியன சமண குகைக் கோயில்கள் ஆகும். இந்த குகைக்கோயில் பதினாறாம் குகையான இந்து குகைக் கோயிலை பார்த்து அதை போலவே வடிவமைக்கப்பட்டுள்ளதால் சோட்டா கைலாஷ் என்று அழைக்கப்படுகிறது.இது கட்டி முடிக்கப்படாத நிலையிலேயே உள்ளது. இங்கு அரியணையில் அமர்ந்திருப்பது போன்ற அறிய மகாவீரர் சிலையை பயணிகள் கண்டு ரசிக்கலாம்.

Jean-Pierre Dalbéra

https://commons.wikimedia.org/wiki/Category:Jain_caves_(Ellora)#/media/File:2_La_grotte_Jain_Indra_Sabha_Ellora_Caves,_India.jpg

 பிராமணிய குகைக் கோயில்கள்

பிராமணிய குகைக் கோயில்கள்

துமர் லேனா என்று அழைக்கப்படும் இந்த குகை சீதா கா நஹாணி எனும் குளத்திற்கு அருகே அமைந்துள்ளது. இந்த குகைக்கோயில் தனித்து இருப்பதாலும், இங்குள்ள பெரிய சிவலிங்கத்துக்காகவும் பயணிகளிடையே பிரபலம். இதன் அரங்கத்தில் வாயில் காவலர்களாக நான்கு துவாரபாலகர் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இக்குகை மும்பை அருகே கண்டறியப்பட்ட யானை குகைகளை நினைவு படுத்தும் விதத்தில் அமைந்திருக்கிறது.

Jean-Pierre Dalbéra

சுற்றுலா வழிகாட்டி

சுற்றுலா வழிகாட்டி

எல்லோரவை நீங்கள் விமானம், ரயில் மற்றும் சாலை மூலமாகவும் சுலபமாக அடையலாம். எல்லோராவுக்கு மிக அருகில் ஔரங்கபாத் விமான நிலையம் இருக்கிறது. அதே போல் 45 நிமிட நேர பயணத்தில் ஔரங்கபாத் ரயில் நிலையத்தை பயணிகள் எளிதாக அடைந்து விடலாம். அதுமட்டுமல்லாமல் அஹமதாபாத் ரயில் நிலையமும் எல்லோராவிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதால், பயணிகள் அஹமதாபாத் வந்த பிறகு ஆட்டோ மூலம் எல்லோரா வந்து சேரலாம்.

காலநிலை

காலநிலை

எல்லோராவின் வெப்பநிலை எப்போதும் சீராக இருப்பதால் வருடத்தின் எந்த காலங்களிலும் சுற்றுலா வரலாம். இருந்தாலும் கோடை காலத்தில் வெப்பம் சற்று அதிகமாக இருப்பதால், எல்லோராவின் குகைக்கோயில்களில் நடந்து செல்வது சிலருக்கு சோர்வை ஏற்படுத்தலாம். எல்லோராவின் சுட்டெரிக்கும் கோடை காலத்தோடு ஒப்பிடுகையில் அதன் மழைக் காலம் சுற்றிப் பார்க்க மிகவும் சிறந்தது.