Search
  • Follow NativePlanet
Share
» »சென்னையில் பிரமாண்டமாக தயாரிக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள் - எங்கே, எப்படி தெரியுமா?

சென்னையில் பிரமாண்டமாக தயாரிக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள் - எங்கே, எப்படி தெரியுமா?

உள்நாட்டிலேயே சிறப்பாக வடிவமைக்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சதாப்தி எக்ஸ்பிரஸை போல அதிவேகமாக செயல்படும் ஒரு குறுகிய தூர ரயில் சேவையாகும். இந்திய ரயில்வேக்கு பயண தொழில்நுட்பத்தில் ஒரு புதிய சகாப்தத்தை குறிக்கும் தனித்துவமான ரயில் இது என்பதில் சந்தேகமில்லை.

Making of Vande Bharat in Chennai

பயோ-வாக்யூம் டாய்லெட்டுகள், வைஃபை ஆன்போர்டு, முழு தானியங்கி கதவுகள், CCTV கேமரா போன்ற பல தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ள வந்தே பாரத் ரயில்கள் சென்னை பெரம்பூரில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த கோச் தொழிற்சாலையில் (Integral Coach Factory) சிறப்பாக வடிவமைக்கப்படுகிறது. ICF இல் வந்தே பாரத் ரயில்கள் எப்படி தயாரிக்கப்படுகின்றன என்பதை இங்கே தெரிந்துக் கொள்வோம்!

Making of Vande Bharat in Chennai

சென்னை ஐ.சி.எப் இல் தயாரிக்கப்படும் வந்தே பாரத்

சென்னை ஒருங்கிணைந்த கோச் தொழிற்சாலை சுதந்திர இந்தியாவின் ஆரம்பகால உற்பத்தி அலகுகளில் ஒன்றாகும். இது இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்களால் அக்டோபர் 2, 1955 அன்று திறந்து வைக்கப்பட்டது.

இன்று வரை இந்தியாவில் செயல்படும் ரயில்களை சென்னை ICF தயாரித்து வருகிறது. வந்தே பாரத் ரயில்களைப் பொறுத்தவரை, சென்னையின் ICF இல் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன.

Making of Vande Bharat in Chennai

பிரத்யேகமாக தயாரிக்கப்படும் வந்தே பாரத்

சென்னை ICF இல் 7000 பணியாளர்கள் வேலை செய்தாலும், வந்தே பாரத் ரயிலை தயாரிக்க பிரத்யேகமாக ஒரு தனி யூனிட் செயல்படுகிறது. ஒரு முழு 16 பெட்டிகள் வந்தே பாரத் ரயிலை தயாரித்து முடிக்க கிட்டத்தட்ட 2 முதல் 3 மாதங்கள் ஆகும். பிரமாண்ட ரயிலை எப்படி தயாரிக்கிறார்கள் என்று விரிவான தகவல்கள் இதோ!

Making of Vande Bharat in Chennai

முதலில் ரயிலின் அண்டர்பிரேம்

முதலில் அண்டர்பிரேம் ரயிலின் அடிப்பக்கம் தனியாகவும், மேல் பக்கம் தயார் செய்யப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக 21 மீட்டர் அளவுள்ள சைடு வால் தயார் செய்யப்படுகிறது. பின்னர், மற்ற தேவையான பிரேம்வொர்க்ஸ், வெல்ட் பார்ட்ஸ் ஆகியவை டாக் வெல்ட் எனப்படும் முறையில் வெல்ட் செய்யப்படுகிறது. அதற்கு அடுத்தப்படியாக ரோபோடிக் ஸ்பாட் வெல்ட் எனப்படும் மெஷினில் முழுவதுமாக வெல்ட் செய்யப்படுகிறது.

Making of Vande Bharat in Chennai

கார்பாடி அசெம்பிளியில் ரயில் பாகங்கள் பொருத்தம்

தயார் செய்த சைடு வால் முழுவதுமாக திக் வெல்ட் செய்யப்பட்டு அசெம்பிளி செக்ஷனுக்கு அனுப்பப்படுகிறது. அதற்கு பிறகு கார்பாடி அசெம்பிளி எனப்படும் செக்ஷனில் சைடு வால், மேற் கூரை, பின்புற சுவர் ஆகியவை ஒட்டவைக்கப்படுகிறது. அதற்கு அடுத்ததாக ரயிலின் நான்கு தானியங்கி கதவுகளும் பொருத்தப்படுகிறது. முழுவதுமாக ரயில் பெட்டி தயார் ஆனதும், அடித்தளம், இருக்கைகள் ஆகியவை பொருத்தப்படுகின்றன.

Making of Vande Bharat in Chennai

மெயின் ஷாப்பில் பாடி பில்டிங்

அங்கிருந்து மெயின் ஷாப் எனப்படும் இடத்திற்கு அனுப்பப்படும் பெட்டி பாடி பில்டிங் செய்யப்படுகிறது. பட்டி பார்த்து, நீல நிற எனாமல் அடித்து, பின்னர் வெள்ளை நிற எனாமல் அடித்து பெட்டி முற்றிலும் வண்ணம் தீட்டப்படுகிறது. பெயிண்டிங் வேலை முடிந்ததும், எலக்ட்ரிகல் வேலை, மோட்டார் ஃபிக்சிங், சீட் ஃபினிஷிங் ஆகியவை செய்யப்படுகிறது.

Making of Vande Bharat in Chennai

180 கிமீ வேகத்தில் டெஸ்ட் ரன்

பின்னர் பிரேக் பிக்சிங்கிற்காக அனுப்பப்படும் ரயிலில் 6 டன் அழுத்தம் கொண்ட பிரேக் பொருத்தப்படுகிறது. அவ்வளவு தான், முழு வந்தே பாரத் ரயிலும் ரெடி. அடுத்த கட்டமாக 180 கிமீ வேகத்தில் டெஸ்ட் ரன் நடத்தப்படுகிறது. முழு வேகத்தில் சென்றாலும் ஒரு சொட்டு நீர் கூட கீழே விழக்கூடாது என்ற வாட்டர் ஸ்பில் டெஸ்டில் (water spill test) ரயில் பாஸ் ஆனால் தான் ஃபேக்டரியில் இருந்து வெளியே அனுப்பப்படும்.

Making of Vande Bharat in Chennai

வந்தே பாரத் ரயிலில் உள்ள வசதிகள

1. தானாகவே திறக்கும் 4 தானியங்கி கதவுகள்

2. பிளாட்பாரத்தை பொருத்து திறக்கப்பட்டு கதவுகள்

3. பெடடிக்கு உள்ளே 4, வெளியே 4 என மொத்தம் 8 CCTV கேமராக்கள்

4. ஜிபிஎஸ் அடிப்படையிலான பயணிகள் தகவல் அமைப்பு

5. தடையின்றி கிடைக்கும் வைஃபை

6. பயோ-வாக்யூம் டாய்லெட்டுகள்

7. எக்ஸிகியூட்டிவ் கிளாஸ் மற்றும் வசதியான நாற்காலிகள்

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+