Search
  • Follow NativePlanet
Share
» »வட இந்தியர்கள் சென்னையை தங்களது 2ஆவது வீடாக நினைக்கிறார்கள் தெரியுமா – அன்பான சென்னை!

வட இந்தியர்கள் சென்னையை தங்களது 2ஆவது வீடாக நினைக்கிறார்கள் தெரியுமா – அன்பான சென்னை!

படிப்பு மற்றும் வேலை நிமித்தமாக பெரும்பாலான வட இந்தியர்கள் தமிழ்நாட்டிற்கு வருகை தருகின்றனர். அவர்களின் சொந்த ஊர், நண்பர்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இங்கே புதிதாக இடம், கலாச்சாரம், உணவு, பழக்கவழக்கம் என அனைத்தையும் இந்த ஊருக்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்டு வாழ்வது சற்றே கடினமாக இருந்தாலும், பெரும்பாலான வெளி மாநிலத்தவர்கள் சென்னை தங்களுக்கு மிகவும் பாதுகாப்பானதாத இருப்பதோடு, எங்களிடம் அன்புடன் இருப்பதாக உணர்கின்றனர்!

சமூக வலைத்தளத்தில் கேட்கப்பட்ட கேள்வி

சமூக வலைத்தளமான Quoraவில் சென்னை வட இந்தியர்களை எப்படி பார்க்கிறது? என்ற ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சென்னையில் வேலை நிமித்தமாக செட்டில் ஆன பல வட இந்தியர்களும் பதிலளித்துள்ளனர். பலரும் தாங்கள் அவர்களுடைய சொந்த ஊரை மிகவும் மிஸ் பண்ணுவதாகவும், உறவினர்களை மிஸ் பண்ணுவதாகவும், பிடித்த உணவுகளை மிஸ் செய்வதாகவும் தெரிவித்தனர். இருந்தாலும் சென்னை எங்களுக்கு எந்த குறையும் வைக்கவில்லை என்றும், சென்னை மக்கள் தங்களிடம் மிகவும் பாசமாக நடந்துக் கொள்வதாகவும், சென்னை தங்களுக்கு மிகவும் பாதுகாப்பாக இருப்பதாகவும் பதிலளித்துள்ளனர்.

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவி செய்யும் சென்னை மக்கள்

இந்தியாவில் எங்கு சென்றாலும், பன்முகத்தன்மை தொடர்பான சில அடிப்படை விஷயங்களை நீங்கள் அனுபவிப்பீர்கள், சென்னையும் அதற்கு வேறுபட்டதல்ல. மக்கள் தொகையில் பெரும் பகுதி மக்களுக்கு இந்தி தெரியாது. ஆகையால் நீங்கள் ஆங்கிலத்தில் பேசி உங்களுக்கு தேவையானவற்றை கேக்கலாம்.

northsetttlement1

இங்கே கிடைக்கும் பலவகையான உணவுகளையும், கடற்கரைகளையும், பொழுதுபோக்கு நடவடிக்களையும் நீங்கள் நிச்சயம் என்ஜாய் பண்ணுவீர்கள். இங்குள்ளவர்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உங்களுக்கு உதவுவார்கள். அவர்களிடம் கேட்கவே தேவையில்லை. இங்கு இந்து-முஸ்லிம்-கிறிஸ்தவன் என்ற பேதம் இல்லை. உங்கள் மதத்தைப் பொருட்படுத்தாமல் மக்கள் ஒருவருக்கொருவர் மதிக்கிறார்கள் என அனிமேஷ் ஜெனா என்பவர் கூறியுள்ளார்.

நீங்கள் இங்கே தனிமையை உணர மாட்டீர்கள்

இங்குள்ள மக்கள் நிச்சயம் அற்புதமானவர்கள். மனிதர்களின் உதவும் குணமும், அவர்களின் தாராள மனப்பான்மையும் உங்களை ஒருபோதும் உங்கள் தனிமையை உணர வைக்காது. நான் ஒரு சுத்த சைவம், இங்கே பலவகையான சுவையான சைவ உணவுகள் கிடைக்கின்றன. இங்கு ஈரப்பதம் அதிகம், சென்னையைப் பற்றி நான் உணரும் ஒரே எதிர்மறையான விஷயம் இதுதான். ஆனால் பெரும்பாலும் நாங்கள் எங்கள் ஏசி அலுவலகங்கள் அல்லது ஏசி ஆய்வகங்களில் தங்கியிருப்போம். தனிப்பட்ட முறையில், நான் சென்னையில் தங்கியிருந்து எனது வாழ்க்கையில் நிறைய முன்னேற்றம் அடைந்துள்ளேன் என கனிகா குப்தா தெரிவித்துள்ளார்.

வட இந்திய நகரங்களை விட சென்னை மிகவும் பாதுகாப்பானது

வட இந்திய உணவுகளை வழங்கும் பல உணவகங்களை இங்கே காணலாம் ஆனால் அனைத்தும் வட இந்திய சுவைக்கு நியாயம் செய்வதில்லை. வாரயிறுதியில் உங்களை ஈடுபடுத்துவதற்காக சென்னையில் பல மால்கள் மற்றும் கடற்கரைகள் உள்ளன. சிறந்த பகுதி மிகவும் சிக்கனமான நீங்கள் உங்கள் வார இறுதிகளை இங்கே கழிக்கலாம். இங்குள்ள மக்கள் பந்தா காட்டுவதை விட தொழில்நுட்பம், கல்வியில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். வட இந்திய நகரங்களை விட சென்னை மிகவும் பாதுகாப்பானது என பிரியங்கா குப்தா தெரிவித்துள்ளார்.

மற்ற பெருநகரங்களை விட சென்னை மலிவு

வடக்கில் உள்ள மற்ற பெருநகரங்களுடன் ஒப்பிடும் போது சென்னை மலிவு. வீட்டுவசதி, திரைப்பட டிக்கெட்டுகள், பயணம் போன்றவை நியாயமானவை. கடற்கரைக்கு அருகில் ஒரு வீட்டை நியாயமான விலையில் எளிதாக வாடகைக்கு எடுக்கலாம். பெரும்பாலான மக்கள் இங்கே ஆங்கிலம் பேசுவதால் மொழி ஒரு பெரிய பிரச்சினையாக இருக்காது. குறைந்த மாசுபாடு, நெரிசல் இல்லாதது, நல்ல உணவு, சிறந்த கலாச்சாரம் மற்றும் கடற்கரைகளை விரும்புவோருக்கு சென்னை ஒரு சொர்க்கமாகும்.

தமிழர்கள் இந்தி பேசும் மக்களை வெறுக்கிறார்கள் என்பது ஒரு கட்டுக்கதை

பெங்களூரில் வசிக்கும் லக்னோவைச் சேர்ந்த அஜய் மோகன், சென்னை உணவுகளின் ரசிகர் என்று பதிவு செய்துள்ளார். Nativeplanet இடம் பேசிய அவர், "மீண்டும் ஒருமுறை சென்னைக்குச் சென்று அங்குள்ள உணவைச் சுவைக்க விரும்புகிறேன். எனது அனுபவத்தின்படி தமிழர்கள் மிகவும் கடினமாக உழைக்கிறார்கள் மற்றும் கிட்டத்தட்ட எல்லாவற்றிலும் அறிவியல் அணுகுமுறையைக் கொண்டுள்ளனர். தமிழர்கள் இந்தி பேசும் மக்களை வெறுக்கிறார்கள் என்பது ஒரு கட்டுக்கதை. உண்மையில், இதை வைத்து அரசியல் மட்டுமே நடத்தப்படுகிறது. நீங்கள் அங்கு இருக்கும் போதெல்லாம் ஒரு பெரிய விருந்தோம்பலை அனுபவிக்க முடியும், சென்னை மக்கள் மிகவும் பாசமானவர்கள் என்று கூறியுள்ளார்.

உங்களுக்கு வட இந்திய நண்பர்கள் உண்டா? அவர்கள் சென்னையைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று கூறுங்கள்!

More News

    Read more about: chennai tamilnadu
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+