Search
  • Follow NativePlanet
Share
» »2.7 கோடி பயணிகளால் காசு கொடுத்து ரயில் பயணச்சீட்டு வாங்கியும் கூட பயணிக்க முடியாமல் போய்விட்டது!

2.7 கோடி பயணிகளால் காசு கொடுத்து ரயில் பயணச்சீட்டு வாங்கியும் கூட பயணிக்க முடியாமல் போய்விட்டது!

ரயிலில் முன்பதிவு செய்யும் நபர்களுக்கு மட்டுமே கன்பார்ம் ரயில் டிக்கெட்டைப் பெறுவது எவ்வளவு பெரிய கஷ்டம் என்று தெரியும்! பெரும்பாலான மக்கள் காத்திருப்புப் பட்டியலில் பெயர் மாட்டிக் கொள்வதால் வசதியான பயணம் செய்ய முடியாத காரணத்தினால் ரயில் பயணத்தை தவிர்த்துள்ளனர். 2022-23 ஆம் ஆண்டில் 2.7 கோடிக்கும் அதிகமான பயணிகள் காசு கொடுத்து டிக்கெட் வாங்கியும் கூட காத்திருப்புப் பட்டியலில் தங்கள் பெயர் இருந்ததால் ரயிலில் பயணிக்காமல் விட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை சற்று திடுக்கிட வைத்துள்ளது!

irctctravelcover

ரத்து செய்யப்படும் PNR எண்கள்

நாம் அனைவரும் நம் வாழ்வில் ஏதாவது ஒரு கட்டத்தில் பயணிக்க ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துள்ளோம். பெரும்பாலும், நம் பெயர்கள் காத்திருப்புப் பட்டியலில் சேர்க்கப்படுகிறது, மேலும் நம் பயண நாளுக்கு முன்பு நம் டிக்கெட்டுகள் கன்பார்ம் ஆகிவிடும் என்று நம்புகிறோம். ஆனால், அது எப்போதும் நடக்கிறதா? சமீபத்தில், RTI வினவல் மூலம் 2022-23ல் ரயில் பயணம் மறுத்த பயணிகளின் எண்ணிக்கை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவர்கள் டிக்கெட் வாங்கியிருந்தாலும், காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்ட பிறகு அவர்களின் PNR ரத்து செய்யப்பட்டது.

2.7 கோடியாக உயர்ந்த எண்ணிக்கை

மத்தியப் பிரதேசத்தில், சந்திர சேகர் கவுர் என்ற ஆர்வலர், RTI மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் விதமாக, 2022-23 நிதியாண்டில் ரத்து செய்யப்பட்ட பயணிகளின் பெயர் பதிவு (PNR) எண்களின் எண்ணிக்கையை ரயில்வே வாரியம் வெளிப்படுத்தியது. 2021-22 நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 1.65 கோடியாக இருந்தது, இந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை 2.7 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும் ரயில்களின் பற்றாக்குறையே எண்ணிக்கையில் உயர்வுக்கு காரணமாக இருந்தது என்று கூறப்படுகிறது.

Indian railways, IRCTC

இந்திய ரயில்வே எதிர்கொள்ளும் சவால்

பயணிகளின் PNRகள் ரத்து செய்யப்பட்ட பிறகு, டிக்கெட் தொகை திரும்பப் பெறப்பட்டாலும், உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளை வழங்க இயலாமை இந்திய ரயில்வேக்கு பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. 2014-15 ஆம் ஆண்டில், ரத்து செய்யப்பட்ட பிஎன்ஆர்களின் எண்ணிக்கை 1.13 கோடியாகவும், 2015-2016 ஆம் ஆண்டில் 81.05 லட்சமாகவும் இருந்தது. 2016-2017-ல் 72.13 லட்சமாகவும், 2017-18-ல் 73 லட்சமாகவும், 2018-2019-ல் 68.97 லட்சமாகவும் இருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை கணிசமாக இப்போது உயர்ந்துள்ளது.

Indian railways, IRCTC

ரயில்கள் எண்ணிக்கை உயர்ந்தாலும் பயணிகளின் எண்ணிக்கை உயரவில்லை

தேவைக்கேற்ப ரயில்களை இயக்குவதற்கான திறனை அதிகரிக்க முயற்சித்து வருவதாக ரயில்வே தெரிவித்துள்ளது. "இது பயணிகள் காத்திருப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கும் என்றும் கூறப்படுகிறது. கோவிட் தொற்றுநோய்க்கு முன்பு, ரயில்வே 10,186 ரயில்களை இயக்கியது, இது தற்போது 10,678 ரயில்களாக உயர்ந்துள்ளது என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். "நெட்வொர்க் முழுவதும் சிக்னலிங் மற்றும் டிராக் பணிகள் நடந்து வருகின்றன. மேலும் ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் வகையில் இதுவும் செய்யப்படுகிறது" என ரயில்வே வட்டாரம் தெரிவித்துள்ளது.

Indian railways, IRCTC

நடவடிக்கை எடுக்கும் இந்திய ரயில்வே

இந்த எண்கள் வெளியான பிறகு, காத்திருப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் பயணிகளின் எண்ணிக்கையை முழுவதுமாக குறைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ரயில்வே வாரியம் குறிப்பிட்டுள்ளது. கிடைக்கக்கூடிய ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மற்றும் ரயில் பயணத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதில் அவர்கள் கவனம் செலுத்துகின் என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்! நீங்கள் இதுபோல என்றாவது புக் செய்த டிக்கெட்டில் பயணம் செய்யாமல் தவிர்த்தது உண்டா?

More News

    Read more about: indian railways irctc
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+