Search
  • Follow NativePlanet
Share
» »ரோட்டுல கார் ஓட்டி போர் அடிச்சுடுச்சா..? கடல்லயே கார் ஓட்டலாம் வாங்க...!

ரோட்டுல கார் ஓட்டி போர் அடிச்சுடுச்சா..? கடல்லயே கார் ஓட்டலாம் வாங்க...!

எந்த நேரமும் நெரிசல் மிகுந்த சிட்டி சாலைகள், அடிக்கடி நெடுஞ்சாலை பயணங்களும் சலித்துவிட்டது. சரி வாரம் அல்லது மாத விடுமுறை நாட்களில் ஊட்டி, கொடைக்கானல் சென்றுவரலாம் என்றார் மலைச் சாலைகளும் அத்துப்படிதான். முன்பெல்லாம் மலைச் சாலையிலும், நெடுஞ்சாலையிலும் இருந்த த்ரில்லும், அனுபவமும் குறைந்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். நீங்களும், ஏதாவது ஒரு புதுமையான பயணமாக இருந்தால் நன்றாக இருக்குமே என்று மனதில் நினைத்து யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்காகத்தான் இந்த பட்டியலே. மிக மிக வித்தியாசமான அனுபவத்தை பெறுவதற்கான இடமாக தென்னிந்தியாவின் பிரபலமான கடற்கரைகளுக்கு ஒரு விசிட் அடிக்கும் விதத்தில் இக்கட்டுரை தொகுக்கப்பட்டுள்ளது. லாங் டிரைவுடன் குதூகலிப்பதற்கான சுற்றுலாத் தடங்ஙகளைத் தேடுவோருக்கு இந்த இடங்கள் சரியானதாக இருக்கும்.

முழப்பிளாங்காட் பீச்

முழப்பிளாங்காட் பீச்

கேரள மாநிலத்தில் அமைந்திருக்கும் ஓர் சிறந்த டிரைவ் இன் பீச் முழப்பிளாங்காட் பீச். இதுதான் ஆசியாவின் மிக நீளமான டிரைவ் இன் பீச் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, 4 கிலோ மீட்டர் தொலைவிற்கு கடற்கரையிலேயே நீங்கள் கார் ஓட்டிச் செல்ல முடியும். கண்ணூர் மற்றும் தலசேரி இடையில் இந்த இடம் உள்ளது. சென்னையில் இருந்து 650 கிலோ மீட்டர் தொலைவில் இந்த கடற்கரை அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை 46 வழியாக சென்றால் சுமார் 12 நிமிடங்களில் அடைந்து விடலாம்.

Sreejithk2000

தர்கார்லி பீச்

தர்கார்லி பீச்

தர்கார்லி பீச்சில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மனித நடமாட்டம் அதிகம் இருக்காது. மஹாராஷ்டிர மாநிலம் கொங்கன் கடற்கரை பகுதியில் இந்த பீச் அமைந்திருக்கிறது. சென்னையிலிருந்து 1,000 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. குறைந்தது 18 மணிநேரம் பிடிக்கும். அக்டோபர் முதல் டிசம்பர் வரை செல்வது ஏற்றது. இந்த பீச்சிற்கு நேரடியாக செல்வதைவிட, கோவா செல்பவர்கள் இந்த பீச்சிற்கும் ஒரு ட்ரிப் அடித்து விட்டு வர மறக்காதீர்கள்.

Shagil Kannur

லைட்ஹவுஸ் பீச்

லைட்ஹவுஸ் பீச்

கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ளது லைட்ஹவுஸ் பீச். இரவில் பல வண்ண விளக்கு அலங்காரத்தில் இந்த லைட்ஹவுஸ் ஜொலிப்பதை காண ஏராளமானோர் கூடுகின்றனர். இந்த பீச்சிலும் உங்களது காரை ஓட்டிப் பார்த்து சிலிர்ப்பான அனுபவத்தை பெறலாம். சென்னையிலிருந்து 770 கிலோ மீட்டர் தொலைவில் இந்த பீச் அமைந்திருக்கிறது. தேசிய நெடுஞ்சாலை 7 மற்றும் 45 வழியாக இந்த இடத்தை அடையலாம்.

BishkekRocks

பாரடைஸ் பீச்

பாரடைஸ் பீச்

சென்னையிலிருந்து ஒரே நாளில் ஒரு ட்ரிப் சென்று வர விரும்புபவர்களுக்கு பாண்டிச்சேரி பாரடைஸ் கடற்கரை சிறந்த தேர்வாக இருக்கும். பாண்டிச்சேரி தெற்காக, 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுண்ணாம்பார் ரெசார்ட் அருகில், தேசிய நெடுஞ்சாலை 45-ஏ ஒட்டியே இந்த கடற்கரை அமைந்திருக்கிறது. சென்னையிலிருந்து 175 கிலோ மீட்டர் பயணித்தாலே இதனை அடைந்துவிடலாம். கடற்கரையை ஒட்டியே செல்லும் ஈசிஆர் சாலையில் காரை ஓட்டிச் செல்வதே பெரும் ஆனந்தம் தரும் அம்சமாக உள்ளது. அத்துடன் பாரடைஸ் பீச்சும் உங்கள் மனதுக்கு உற்சாகம் தரும்.

Rohith D'Souza

மராரி கடற்கரை

மராரி கடற்கரை

இந்தியாவின் வெனிஸ் என்று அழைக்கப்படும் ஆழப்புழா படகு இல்லங்களுக்கு பிரசித்தி பெற்றது. அழப்புழாவிலிருந்து 11 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மரரா கடற்கரையும் சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த இடமாக இருக்கிறது. கடற்கரைக்கு அருகில் காரில் செல்ல முடியும் என்பதுடன், படகு இல்லங்களில் ஒரு ரவுண்டு போய்விட்டு வருவது கூடுதல் சுகத்தை தரும் விஷயமாக அமையும்.

Mahendra M

பட்டர்ஃப்ளை பீச்

பட்டர்ஃப்ளை பீச்

கோவாவில் உள்ள ஒரு ரகசிய கடற்கரை பிரதேசம் என்றால் பட்டர்ஃப்ளை பீச் தான். தெற்கு கோவாவின் பலோலெம் கடற்கரைக்கு வடக்கில் இந்த கடற்கரை அமைந்துள்ளது. படகு மூலமாகவே இந்த பீச்சிற்கு செல்ல முடியும். ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை சிறந்த காலக்கட்டமாக இருக்கும்.

May Hachem93

கல்ஜிபாகா பீச்

கல்ஜிபாகா பீச்

கோவாவில் இருக்கும் பிரசிதிபெற்ற கடற்கரைகளில் ஒன்று கல்ஜிபாகா கடற்கரை. கூட்ட நெரிசல் இல்லாமல் கடற்கரையின் மொத்த அழகையும் கண்டு ரசிக்க ஏற்ற இடம். கர்நாடக மாநில எல்லையிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.

Saad Faruque

போகேவ் பீச்

போகேவ் பீச்

இயற்கை விரும்பிகளுக்கும், புராதான இடங்களை போற்றுபவர்களுக்கும் சிறந்த கடற்கரை போகேவ் பீச். மிகவும் வித்தியாசமான பயண அனுபவத்தை கொடுக்கும். சென்னையில் இருந்து தேசிய நெடுஞ்சாலை 4 வழியாக பெங்களூர், பெல்காம் கடந்தால் இதனை அடையலாம்.

Rudolph.A.furtado

கப்பில் பீச்

கப்பில் பீச்

கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள ஓர் அழகிய கடற்கரை தான் கப்பில் பீச். பேகல் கோட்டை மற்றும் பள்ளிக்குன்னம் கோவில்களுக்கு அருகாமையில் உள்ளது. பேக்கல் கோட்டையிலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் கப்பில் பீச் அதன் பரந்து விரிந்து கிடக்கும் மணற்பரப்புக்காகவும், அமைதிக்காகவும் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலம். பேக்கல் நகரின் மற்ற சுற்றுலா தலங்களுக்கெல்லாம் சென்று கடைசியில் இங்கு இளைப்பாற வருவதற்கு பெரும்பாலான பயணிகள் விரும்புகின்றனர். அதோடு சாகசத்தின் மீது ஆர்வமுள்ளவர்கள் இந்தப் பகுதியில் உள்ள கொடி குன்றில் பாறையேற்றத்தில் ஈடுபட்டு பொழுதை கழிக்கலாம்.

Ikroos

கிழுன்னா எழரா பீச்

கிழுன்னா எழரா பீச்

கேரள மாநிலம் கண்ணூரிலிருந்து 11 கிலோ மீட்டர் தொலைவில் கிழுன்னா எழரா பீச் உள்ளது. இங்கு கடற்கரை அழகுடன் சேர்த்து கதகளி நடனத்தையும் கண்டு ரசிக்க முடியும். தலசேரியில் இருந்து 13 கிலோ மீட்டர் பயணித்தாலும் இக்கடற்கரையை அடையலாம்.

MANOJTV

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X