Search
  • Follow NativePlanet
Share
» »காதலுக்காகவே கடவுள் தந்த அழகியத் தீவுகளுக்கு உங்க ஆளோட போய்ட்டு வாங்க..!

காதலுக்காகவே கடவுள் தந்த அழகியத் தீவுகளுக்கு உங்க ஆளோட போய்ட்டு வாங்க..!

நேரம் கிடைக்கும்போது, சுற்றுலா சென்று வர மனதும் அமைதியாகும், மனசுக்கு பிடிச்சவங்களும் கொஞ்சம் நம்ம வழிக்கு வருவாங்க. சரி, இப்ப காலர்களுக்கெனவே காத்திருக்கும் தீவுகளைப் பற்றி பார்க்கலாமா?

அதிகப்படியான வேலைப்பளு, ஏதேனும் ஒரு பிரச்சனை... கொஞ்ச நேரமாவது ஓய்வெடுக்கலாம்னா அதுக்கும் கூட நேரம் இருக்காது. நண்பர்களோ அல்லது காதலியோ அவர்களுடனான நேரம் செலவிட வேண்டும். நண்பர்களைக் கூட நாம ஈசியா சமாளிச்சுடலாம். ஆனா, இந்தக் காதலிய..? நம்ம மன அழுத்தம் குறையவே செய்யாது. அப்படி மனதை இனிமையாகவே வைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும். அதற்காகத்தானே சுற்றுலா என்ற ஒன்று இருக்கிறது. நேரம் கிடைக்கும்போது, சுற்றுலா சென்று வர மனதும் அமைதியாகும், மனசுக்கு பிடிச்சவங்களும் கொஞ்சம் நம்ம வழிக்கு வருவாங்க. சரி, இப்ப காலர்களுக்கெனவே காத்திருக்கும் தீவுகளைப் பற்றி பார்க்கலாமா?

காக்காதுருத்து தீவு

காக்காதுருத்து தீவு


கேரளாவின் கொச்சிக்கு அருகிலுள்ள வேம்பநாடு ஏரியிலுள்ள காக்காதுருத்து தீவு, சூரிய உதயம், அஸ்தமனத்தை அமைதியான கைகோர்ப்புடன் காதல் தவழ காண ஏற்ற இடம் என்றால் அது இதுதான். இங்கே பிரசித்தமான வஞ்சிப் படகில் ஜாலியாக இருவரும் பயணித்து ரம்மியமான அழகை கண்டு ரசிக்கலாம். கொச்சின் விமான நிலையத்தில் இருந்தும், எரமல்லூர் ஜங்க்‌ஷன் அல்லது எர்ணாகுளம் ரயில் நிலையத்திலிருந்து கொடும்புரம் வரை உள்ளூர் வாடகைக் கார்கள் ஏராளமாக உள்ளன. அங்கிருந்து படகு மூலம் தீவை எளிதில் அடையலாம்.

Julia Maudlin

பும்திஸ் தீவு

பும்திஸ் தீவு


மணிப்பூர் மாநிலம், லோக்தக் ஏரியில் சர்க்கிள் வடிவிலான தீவுதான் பும்திஸ். காலை சூரியனின் ஒளியில் மினுமினுக்கும் தங்கா, சென்ட்ரா என்ற மிதக்கும் தீவுகள் உள்ள ஏரி சுற்றுவட்டாரத்தால் தனித்துவிடப்பட்டிருந்தாலும், இங்குள்ள தக்மு நகரருகில் அரசு நீர் விளையாட்டுகளுக்கான மையம் உங்களுக்கான ஜாலி ஸ்பாட் தான். இங்கு மீன் பிடிப்பதைக் கடந்து டூரிஸ்டுகளுக்கான கைடுகளும் உண்டு. ஏரியிலுள்ள தேசிய பூங்காவான கெய்புல் லாம்ஜாவோ உலகின் முதல் மிதக்கும் பூங்கா. மணிப்பூரின் இம்பாலிலிருந்து சுமார் 38 கிலோ மீட்டர் தொலைவில் தான் லோக்தக் ஏரி உள்ளது.

Sudiptorana

உமாநந்தா தீவு

உமாநந்தா தீவு


அசாம் மாநிலம் குவகாத்தியில் உள்ள பிரம்மபுத்திரா நதியின் நடுவில் அமைந்துள்ள தீவு உமா நந்தா. அகோம் மன்னர் சுபாட்பா உத்தரவின் பேரில் உருவானது இத்தீவிலுள்ள உமாநந்தா கோவில் சிறப்புபெற்றது. கோல்டன் லங்கூர் குரங்குகள் அதிகம் வாழும் தீவுகளில் உமாநந்தாவும் ஒன்று. சிவராத்திரி இங்கு மிக சிறப்பாக விமரிசையாக கொண்டாடப்படும் விழாவாகும். குவகாத்தியிலிருந்து பேருந்து அல்லது வாடகைக் கார்கள் மூலம் கச்சேரி மலைகணவாய் அடைந்து அங்கிருந்து படகு மூலம் உமாநந்தா தீவை அடையலாம்.

Ashwin Ganesh M

காளிஜெய் தீவு

காளிஜெய் தீவு


ஒடிசாவின் பிரபலமான சுற்றுலாத் தலங்களின் ஒன்றுதான் இந்த சிலிகா ஏரியும், அதில் அமைந்துள்ள காலிஜெய் தீவுவும். கொஞ்சிவிளையாடும் 134 டால்பின்கள் இத்தீவில் உள்ளதாக ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அதுமட்டும் இல்லைங்க, இயற்கைக் காதலர்கள் கண்டு ரசிக்க ஏற்ற பல பறவை இனங்களும் இங்கே சங்கமிக்கிறது. வங்காள விரிகுடாவில் கலக்கும் தயா ஆற்றிலிருந்து நீரைப் பெற்று 1,100 கி.மீ பரப்பளவில் ரஷ்யா, மங்கோலியா, தென்கிழக்கு ஆசியா, லடாக், இமாலயம் ஆகிய இடங்களிலிருந்து இடம்பெயர்ந்து வரும் 160 வகையான பறவைகளுக்கு இளைப்பாற இடம் தருகிறது சிலிகா ஏரி. புவனேஸ்வர் நகரிலிருந்து எளிதில் இத்தலத்தை அடையலாம். தீவின் அருகில் பாலுகாவன் ரயில் நிலையம் உள்ளது.

Sagarchatterjee

ஹோப் தீவு

ஹோப் தீவு


சீமாந்திராவின் காக்கிநாடா துறைமுகத்திலிருந்து ஹோப் தீவை அடையலாம். கோதாவரி ஆறு கொண்டு வந்து சேர்த்த மணல்களால் உருவான இத்தீவு ஹைபிரிட் மாங்குரோவ் காடுகளுக்காக புகழ்பெற்றது. ராஜமுந்திரி விமான நிலையத்தில் இருந்து காக்கிநாடாவுக்கு பேருந்து மூலம் வந்து அங்கிருந்து படகு மூலம் 7 கிலோ மீட்டர் பயணித்தால் ஹோப் தீவை அடையலாம்.

Aziz J.Hayat

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X