Search
  • Follow NativePlanet
Share
» »சென்னைக்கு அருகில் ஆபத்தான இரட்டை மலை?

சென்னைக்கு அருகில் ஆபத்தான இரட்டை மலை?

'ரிஸ்க்' எடுப்பது எல்லாம் ரஸ்க் சாப்பிடுற மாதிரி என நினைக்கும் உங்களுக்கு தான் இந்த அட்வெஞ்சர் ட்ரிப்... அதுவும் சென்னையில் இருந்து 150 கி.மீ., துாரத்தில், அதுவும் 3 மணி நேர பயணத்தில் அமைந்து இருக்கிறது புலிகுண்டு மலை; இந்த மலையை இரட்டை மலை என்றும் அழைப்பர்.

எங்களை வைத்து காமெடி எதுவும் பண்ணலையே னு நீங்க கேக்குறது காதுல விழுது பாஸ்... உண்மையில் இது ஆபத்தான மலையேற்றம் தான். அப்படி இருக்கிற 'டெஸ்டினேஷன்' குறித்து தான் பார்க்க போறோம்; ஆபத்தான பயணத்தை துவங்குவோம்..!

'ட்வின்-பிரதர்ஸ்'

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள புலிகுண்டு மலை. தரையில் இருந்து 1000 அடி உயரம் கொண்ட இந்த இரட்டை பாறை மலையாகும். சென்னையில் இருந்து 150 கி.மீ., தொலைவில் அமைந்திருக்கும் இந்த மலையில் மேலே சிவன் கோவில் அமைந்துள்ளது.

puligundudualrock1

உயரம் காரணமாக, சுற்றியுள்ள மலைகளின் அழகிய காட்சியை பார்க்க முடியும்

இரட்டை பாறை மலையில், ஒரு மலை சிவன் (புலி குண்டு ஈஸ்வர்), மற்றொன்று பார்வதி தெய்வம் என நம்பப்படுகிறது. இந்த மலையை காவல் கோபுரமாக பயன்படுத்த ஆங்கிலேயர்கள் கைப்பற்ற முயன்றதாகவும், அதை அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஆங்கிலேயர்களிடம் இருந்து தடுத்து நிறுத்தி பாதுகாத்தனர் என்றும் வரலாறு கூறுகிறது. அதற்கு ஆதாரமாக, புலிகுண்டு பாறை மலை உச்சியில் இந்திய கொடி இருக்கும்.

பைக் ட்ரிப் லவ்வர்ஸ்...!

உச்சி வெயிலை தவிர்க்க வேண்டும் எனில், காலை 6 மணிக்கு மலையேற தொடங்க வேண்டும். புலிகுண்டு சிவன் கோவிலுக்குச் செல்லும் வழியில் பச்சை பசேல் மரங்கள், சிறிய சிறிய மலைகள், அழகிய நீர்வீழ்ச்சிகள் ஊடே நண்பர்கள் சூழ நாம் செல்லும் பாதையே, நமக்கு பாதி அமைதியை தந்துவிடும் என்பதில் மாற்று கருத்து கிடையாது கைய்ஸ்.

தமிழ்நாட்டையும், ஆந்திரா வையும் இணைக்கும் இந்த பாதையில், இரு மாநிலத்தவர்களை காண முடியும். காரில் போகுபவர்களை காட்டிலும், பைக்கில் போகும் போது காற்றை கிழித்து பச்சை பசேல் என இருக்கும் அழகியலை ரசித்து கொண்டே செல்லலாம்.

காரில் செல்பவர்களுக்கு, இது கொஞ்சம் சவாலான பயணமாக தான் இருக்கும். கால்நடையாக மலையேறுபவர்களுக்கு கொஞ்சம் எளிதாக இருக்கலாம். அது ஆரம்பத்தில் மட்டும் தான்...!

மலைகளில், நடு நடுவே நின்று அழகை ரசிக்க 'சைட் சீயிங் ஸ்பாட்ஸ்'க்கு பஞ்சம் இருக்காது. ஆபத்தான மலையேற்றம் என கூறும் இந்த இரட்டை பாறைகளை இணைக்கும் வகையில் இரும்பு பாலம் உள்ளது.

puligundudualrock

எப்படி செல்வது

கார் அல்லது பைக். பொது போக்குவரத்தை நீங்கள் தேர்வு செய்வது எனில் சென்னையில் இருந்து 195 ரூபாய் கட்டணத்தில் சித்துார் செல்லலாம். எந்த போக்குவரத்து முறையை நீங்கள் தேர்வு செய்தாலும், உங்கள் பாதுகாப்பை முதலில் நீங்கள் உறுதி செய்து கொண்டு என்ஜாய் செய்யுங்க...!

அவசியம் கவனத்தில் கொள்ள வேண்டியது...!

Ø மலை ஏறும் போது, உங்கள் வசம் போதுமான தண்ணீர், சிற்றுண்டியை எடுத்துச் செல்லுங்கள்.

Ø அதிகாலையில் பயணத்தைத் தொடங்குவது சிறந்தது; முயற்சிக்கவும். மிகவும் வெப்பமாக இருக்கும் பகுதி என்பதால் எளிதில் நீங்கள் சோர்வடையலாம்.

Ø மழைக்காலத்தில் நீங்கள் செல்கிறீர்கள் எனில் செல்லும் பாதைகளில் கவனமாக இருங்கள். பாறைகள் மிகவும் வழுக்கும்.

Ø மலை ஏறும் போது மொபைல் போன் பயன்படுத்த வேண்டாம். இலக்கை அடைந்து பின், நீங்கள் விரும்பிய காட்சிகளை உங்கள் மொபைல் போனில் எடுத்து கொள்ளுங்கள்

Ø பாதுகாப்பு அரணாக இருக்கும் எந்த தடைகளிலும் சாய்ந்து விடாதீர்கள். அவை பெரியதாக வலுவாக இல்லை என்பதை மறக்காம கவனத்தில் கொள்ளுங்கள். திரும்பவும் சொல்கிறோம் ஆபத்தான பயணம் என்பதை ஒரு முறைக்கு இரு முறை நினைவில் நிறுத்தி கொள்ளவும். என்ஜாய் இந்த வீக் எண்ட் வித் அட்வெஞ்சர் ட்ரிப்...!

More News

    Read more about: chennai tamil nadu trekking
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+