Search
  • Follow NativePlanet
Share
» »உலகையே அதிரச் செய்யும் இந்தியாவின் இசை திருவிழாக்கள்

உலகையே அதிரச் செய்யும் இந்தியாவின் இசை திருவிழாக்கள்

திருவிழாக்கள் நம்மை குதூகலப்படுத்துவது மட்டுமல்லாமல், நம்மை சிறுகுழந்தையாக மாற்றிவிடுகின்றன. நாம் குதிக்கிறோம், தாவுகிறோம், கொண்டாடுகிறோம், குதூகலிக்கிறோம். மனங்களால் இணைந்து எல்லாரையும் இணைத்துக்கொண

By Udhaya

திருவிழாக்கள் நம்மை குதூகலப்படுத்துவது மட்டுமல்லாமல், நம்மை சிறுகுழந்தையாக மாற்றிவிடுகின்றன. நாம் குதிக்கிறோம், தாவுகிறோம், கொண்டாடுகிறோம், குதூகலிக்கிறோம். மனங்களால் இணைந்து எல்லாரையும் இணைத்துக்கொண்டு மகிழ்ச்சி எனும் கடலில் தத்தளிக்கிறோம். ஒருவருக்கொருவர் இணைந்து அன்பை பரிசளிக்கிறோம். முடிவில் நல்ல நண்பர்களும் கிடைக்கிறார்கள். இப்படி இசையை கொண்டாடுபவர்கள் கட்டாயம் செல்லவேண்டிய இசைத் திருவிழாக்கள் பற்றி இந்த பதிவில் காண்போம்.

சம்பலி சங்கீத்தல்சவ்

சம்பலி சங்கீத்தல்சவ்

திருச்சூரில் குருவாயூரப்பன் முன்னிலையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி, மிகவும் பிரசித்தி பெற்றது. இதில் பல்வேறு கலைஞர்கள் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை காட்டுவார்கள். நாடெங்கிலுமிருந்து சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தந்து இந்த திருவிழாவை கொண்டாடுவார்கள்.

திருசூருக்கு எப்போ போலாம்

பரபரப்பான வணிகக்கேந்திரமாக திகழும் திரிசூர் நகரமானது வருடமுழுதுமே வரவேற்கும் இனிமையான சூழலுடன் காட்சியளிக்கிறது. வெப்பமும் ஈரப்பதமும் அதிகமாக காணப்படும் ஏப்ரல் - மே மாதங்களில் இங்கு சுற்றுலா மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. இருப்பினும், இம்மாதங்களில் பூரம் திருவிழா எனும் எட்டு நாள் கோயில் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுவதால் இந்த வைபவங்களை கண்டு ரசிக்க அதிக பக்தர்களும், பயணிகளும் திரள்கின்றனர். பொதுவாக, அக்டோபர்-பிப்ரவரி மாதங்களில் இங்கு சுற்றுலா மேற்கொள்வது சிறந்தது. திரிசூர் நகரில் விமான நிலையம் இல்லை. பல நகரங்களுடன் சாலை மார்க்கமாக இது நல்ல போக்குவரத்து வசதிகளைக்கொண்டுள்ளது. மற்ற வழிகளை விட ரயில் மூலம் திரிசூருக்கு பயணம் மேற்கொள்வதே சொகுசான, எளிமையான பயண மார்க்கமாக உள்ளது.

மேலும் தகவல்களுக்கு:


Glasreifen

 ஜீரோ திருவிழா

ஜீரோ திருவிழா

அருணாச்சல பிரதேசத்தின் அபதானி பழங்குடியினருடன் சுற்றுலாப் பயணிகள் இணைந்து கொண்டாடும் திருவிழா இது. இசையும் ஆட்டமும் பாட்டமும் ஒரே கூத்தாக இருக்கும். மலைப்பகுதி மக்களின் வாழ்க்கை முறையுடன் அவர்களின் விழாக்களிலும் கலந்து கொண்டு புத்துணர்ச்சி பெறலாம்.

ஆர்க்கிட் மலர்களின் சொர்க்கம்

ஆர்க்கிட் மலர்களின் சொர்க்கம்' எனும் பொருத்தமான பெயரை அருணாச்சல் பிரதேசம் பெற்றிருக்கிறது. இங்கு 500 வகைகளுக்கும் மேற்பட்ட ஆர்க்கிட் மலர்த்தாவரங்கள் காணப்படுகின்றன. இந்தியாவில் காணப்படும் ஆர்க்கிட் வகைகளில் பாதிக்கும் மேற்பட்டவை இம்மாநிலத்தில்தான் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இவற்றில் அரிதான மற்றும் அருகி வரும் வகைகளும் அடங்கும். இந்த தாவரங்களை பாதுகாப்பதற்காக ‘ஆர்க்கிட் ரிசர்ச் அன்ட் டெவெலப்மெண்ட் ஸ்டேஷன்' எனும் ஆராய்ச்சி மையத்தையும் அருணாச்சல் பிரதேச மாநில அரசு அமைத்துள்ளது. ஈடாநகர், செஸ்ஸா, டிப்பி, தரங், ரோயிங் அன்ட் ஜெங்கிங் போன்ற இடங்களில் மாநில அரசின் வனத்துறையால் பராமரிக்கப்படும் ஆர்க்கிட் மையங்கள் அமைந்துள்ளன.

மேலும் தகவல்களுக்கு:

Tauno Tõhk

 பிரீடம் ஜாம்

பிரீடம் ஜாம்

பெங்களூரு அல்லது பாண்டிச்சேரியில் வருடம்தோறும் சுதந்திர தின விழா கொண்டாட்டமாக இந்த நிகழ்ச்சி நடைபெறும். மிகவும் ஆர்ப்பாட்டமான சிறப்பான நிகழ்ச்சி இதுவாகும். சுதந்திர தினத்தன்று சுதந்தி பறவையாகி காற்றில் பறக்க இந்த நிகழ்ச்சியை தவற விடாதீர்கள்.

பெங்களூரு

கர்நாடகாவின் முன்பனிக் காலமான அக்டோபரிலிருந்து, டிசம்பர் வரையோ, அல்லது பனிக்காலமான ஜனவரியிலிருந்து, பிப்ரவரி வரையிலான காலங்களிலோ சுற்றுலா வருவது சிறந்த அனுபவமாக இருக்கும். கர்நாடகாவின் கோடை காலத்தையோ, மழை காலத்தையோ சுற்றுலாப் பயணிகள் தவிர்ப்பது நல்லது.

 ராஜஸ்தான் இன்டர்நேசனல் போல்க் திருவிழா

ராஜஸ்தான் இன்டர்நேசனல் போல்க் திருவிழா

மெக்ராங்கர் கோட்டை ஒவ்வொரு ஆண்டும் ஒளியால் நிரப்பப்பட்டு, பிரம்மாண்ட திடலிட்டு கூட்டம் கூட்டி நடத்தப்படும் இந்த போல்க் திருவிழா அக்டோபர் மாதம் நடைபெறும். அடுத்த முறை நீங்கள் தவறவிடமாட்டீர்கள்தானே

ராஜஸ்தான்

ராஜஸ்தானில் மழைக் காலத்தை தவிர மற்ற பருவங்களில் மிகவும் வறண்ட வானிலையே காணப்படும். அதிலும் குறிப்பாக கோடை காலத்தில் ராஜஸ்தானின் வெப்பநிலை அதிகபட்சமாக 48 டிகிரி அளவுக்கு கூட சென்று விடும். எனினும் ராஜஸ்தானின் மவுண்ட் அபு நகரம் மட்டும் இதற்கு விதிவிலக்காக இதமான வானிலையை கொண்டிருக்கும்

Varun Shiv Kapur

மகேந்திரா ப்ளூஸ்

மகேந்திரா ப்ளூஸ்

மும்பையில் மின்னணு கிட்டார் இசை பிரியர்களுக்காகவே நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி இளம் திறமையாளர்களை கண்டறிந்து உலகுக்கு அறிமுகப் படுத்தும். மும்பைக்கு செல்பவர்கள் கட்டாயம் காணவேண்டிய திருவிழா இது.

மகாராஷ்டிரா

மகாராஷ்டிராவில் உள்ள 350 கோட்டைகளும் மராட்டிய மன்னர்களின் வீரத்தை உலகுக்கு எடுத்துரைத்துக் கொண்டிருக்கிறது. இதில் ஏறக்குறைய 13 கோட்டைகள் சத்ரபதி சிவாஜியின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. இந்த கோட்டைகளிலேயே இரட்டை கோட்டைகளாக அறியப்படும் விஜயதுர்க் மற்றும் சிந்துதுர்க் கோட்டைகளே மகாராஷ்டிராவின் மிகச் சிறந்த கடற்கோட்டைகளாக கருதப்படுகின்றன.மேலும், புனேவிலிருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஷிவ்னேரி கோட்டை, சிவாஜியின் பிறப்பிடம் என்பதால் பிரசித்தமாக அறியப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், சிவாஜிக்கும், அஃப்சல் கானுக்கும் இடையே நடந்த வரலாற்றுப் போரின் நினைவுகளை வீரகாவியமாய் நமக்கு சொல்வது போல காட்சியளித்துக் கொண்டிருக்கிறது பிரதாப்காட் கோட்டை.

மேலும் தகவல்களுக்கு:

wiki

 ஸ்ட்ரோம் பெங்களூரு

ஸ்ட்ரோம் பெங்களூரு

குடகு மலை மக்கள் புத்தாண்டை வரவேற்கும் அதே சமயத்தில் இசையுலகில் மிதந்து கொப்பளித்து மிரள பெங்களூரு சூறாவளி இசைத் திருவிழா உங்களை வரவேற்கும். வித்தியாசமான தீம் களில், வேறு வேறு நபர்களைக் கொண்டு நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியை தவறவிடக்கூடாது.

பெங்களூருக்கு உள்ளேயும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளுக்கும் பயணம் செய்வது மிக சுலபமாக உள்ளது. மக்கள் போக்குவரத்துக்கு அரசு பேருந்துகளையும், ஆட்டோ ரிக்‌ஷாக்களையும் மற்றும் வேன் போன்றவற்றையும் பயன்படுத்துகின்றனர். தற்சமயம் மெட்ரோ ரயில் வசதியும் புதிதாக ஏற்படுத்தப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வாயு வஜ்ரா பேருந்து சேவைகள் பெங்களூர் விமான நிலையத்தையும் நகரத்தையும் இணைக்கின்றன. பெங்களூர் எல்லா முக்கிய பெருநகரஙளுடனும் சாலை, ரயில் மற்றும் விமான மார்க்கத்தால் சிறப்பான முறையில் இணைக்கப்பட்டுள்ளது.

மேலும் தெரிந்துகொள்ள:

stormfestivalindia

 என் ஹெச் 7 வீக் எண்டர்

என் ஹெச் 7 வீக் எண்டர்

அக்டோபர் முதல் டிசம்பர் மாதங்களின் வார இறுதி நாள்களில் உலகே அதிரும் வகையில் இந்த இசைத் திருவிழா கொண்டாடப்படும். இதில் ஏஆர் ரஹ்மான் உள்ளிட்ட இன்னும் பிற உலக பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர். இந்த வருடம் இன்னும் சில மாதங்களில் தொடங்கவுள்ளது.


OML

டுமாரோலேண்ட்

டுமாரோலேண்ட்


இதுவும் உங்கள் செவிப்பறையை தெறிக்கச் செய்யும் ஒரு குதூகல இசைத் திருவிழா. சென்ற முறை ஹைதராபாத்தில் வெளுத்து வாங்கிய இந்த திருவிழா நாயகர்கள், இந்த முறை உங்களை கொள்ளை கொள்ள காத்திருக்கிறார்கள்.


OML Entertainment Pvt. Ltd.

சன்பர்ன் திருவிழா

சன்பர்ன் திருவிழா

எலக்ட்ரோ மியூசிக், கிரேஸி டான்ஸிங் என்று பல அற்புத விசயங்களை நமக்கு ஊட்டும் மிக சிறப்பான திருவிழா இதுவாகும். இந்தியாவின் பார்ட்டி கேப்பிட்டலில் நடைபெறும் இந்த திருவிழாவுக்கு நாடெங்கிலும் இருந்து இசைப் பிரியர்கள் வருகை தருவார்கள்.

Haritha Prasad

சூர்யா இசைத் திருவிழா

சூர்யா இசைத் திருவிழா

திருவனந்தபுரத்தில் நடைபெறும் இந்த இசைத் திருவிழா மிகவும் ரசிக்கும்படியாக இருக்கும். இதைக் காண நாடு முழுவதிலுமிருந்து இசைப் பிரியர்கள் வந்து செல்கிறார்கள். திருவனந்தபுரத்தில் ஏகேஜி ஹாலில் பொதுவாக இந்த இசை விழா நடக்கும்.

மழைக்காலத்தின்போது இந்த நகரம் ஓணம் திருவிழாக் கொண்டாட்டங்களை வரவேற்க தயாராகிவிடுகிறது. வசந்த கால அறுவடைத்திருவிழா, பாம்பு படகுப்போட்டி மற்றும் யானை ஊர்வலம் போன்ற பாரம்பரிய நறுமணம் கமழும் கொண்டாட்டங்களில் நகரமக்கள் உற்சாகமாக பங்கேற்பதை காணலாம். இந்த விழாக்காலத்தின் போது திருவனந்தபுரம் நகரம் முழுதுமே ஒரு சொர்க்க பூமி போன்று ஜொலிப்பதை நேரில் பார்த்தால் சுலபமாக புரிந்து கொள்ள முடியும். மோகினியாட்டம், கதகளி, கூடியாட்டம் மற்றும் இன்னும் பல எண்ணற்ற, வண்ணமயமான நிகழ்த்து கலை(பாரம்பரிய கூத்து/நடனக்கலை) வடிவங்கள் கனவுக்காட்சிகள் போன்று இக்காலத்தில் அரங்கேற்றப்படுகின்றன.

மேலம் தெரிந்துகொள்ள:

Tinkubasu

Read more about: travel india
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X