» »ஸ்ரீரங்கம் கோயிலால் இறந்தவர்கள் திடுக்கிடும் வரலாறு

ஸ்ரீரங்கம் கோயிலால் இறந்தவர்கள் திடுக்கிடும் வரலாறு

Posted By: Udhaya

பல நூற்றாண்டுகளாக காவிரி நதிக்கரையில் ஒய்யாரமாய் வீற்றிருக்கும் ஸ்ரீரங்கநாதரின் ஸ்ரீரங்கத்துக்கு நாம் இன்றளவிலும் சென்று வழிபட்டு வருகிறோம்.

ஆனால் இந்த கோயிலால் இறந்தவர்களின் வரலாற்றைத் திரும்பி பார்க்கும்போது நம் கண்களில் இன்றும் கண்ணீர் சுரந்து வெளியேறுகிறது.

அப்படி என்னதான் வரலாறு தெரியுமா இத்தனை பேர் இறந்தது எப்படி என்பது தெரியுமா? வாருங்கள் பார்க்கலாம்

ஸ்ரீரங்கம்

ஸ்ரீரங்கம்


ஸ்ரீரங்கம், திருச்சியில், அமைந்துள்ள, மனதை தன் வசப்படுத்தக்கூடிய கண்கவர் தீவு நகரமாகும்.

மகாவிஷ்ணுவின் திருத்தலம்

மகாவிஷ்ணுவின் திருத்தலம்

ஸ்ரீரங்கம், மகாவிஷ்ணுவின் எட்டு முக்கிய திருத்தலங்களுள் முதல் திருத்தலமாகக் கொண்டாடப்படும் தனிப்பெருமை வாய்ந்ததாகும்.

108ல் ஒன்று

108ல் ஒன்று

ஸ்ரீரங்கத்திலுள்ள விஷ்ணு கோயில், இத்திருத்தலங்களுள் முதலாவது மட்டுமல்ல; 108 விஷ்ணு கோயில்களுள் மிக முக்கியமான கோயிலாகவும் கருதப்படுகிறது.

இத்தனை இறப்புகளுக்கு காரணம் என்ன?

இத்தனை இறப்புகளுக்கு காரணம் என்ன?


இந்த கோயிலால் நிறைய பேர் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். அதாவது கிட்டத்தட்ட அந்த காலத்தில் வாழ்ந்த இவ்வூரின் சரிபாதி பேர்.

 வண்ணம் பூசப்படாததற்கு காரணம் தெரியுமா?

வண்ணம் பூசப்படாததற்கு காரணம் தெரியுமா?

இந்த ஸ்ரீரங்கம் கோயில் கோபுரம் வண்ணம் பூசப்படாமல் நிறைய ஆண்டுகளாக இருந்தது. இதற்கு காரணமாக சில மர்மக்கதைகளை சொல்கின்றனர் இக்கோயில் பக்தர்கள்.

Giridhar Appaji Nag Y -

என்ன மர்மம்?

என்ன மர்மம்?


அலாவுதீன் கில்ஜி எனும் மன்னன் தென்னகத்தே புகுந்து அனைத்து கோயில்களையும் அதன் செல்வங்களையும் அனுபவிக்கத் துணிந்தான். அவன் படைகளையும் அனுப்பி அனைத்தையும் கவர ஆணையிட்டான்.

வந்தது ஸ்ரீரங்கம்

வந்தது ஸ்ரீரங்கம்

அப்போதுதான் ஸ்ரீரங்கம் எனும் அற்புத தீவு அவன் கண்ணுக்கு புலப்பட்டது. இதன் கோயிலை ஒரு கண் வைத்திருந்த அம்மன்னன் தக்க சமயம் பார்த்து ஆட்களை அனுப்பி இந்த கோயிலின் நகைகளை கொள்ளையடித்துச் சென்றான்.

/en.wikipedia.org

இளவரசி

இளவரசி

கொள்ளையடிக்கப்பட்ட பொருள்களுள் எதையும் விரும்பாத மன்னனின் மகள் ஆசை பட்டது எல்லாம் நகைகளுடன் கொள்ளையடிக்கப்பட்ட பெருமாளின் சிலை மீதுதான்.

sowrirajan s

பொம்மை போல

பொம்மை போல

இளவரசி தனக்கு அருகே அதனை ஒரு பொம்மை போல வைத்து விளையாடி வந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Simply CVR

ஆடல்கலையால் மீட்கப்பட்ட சிலை

ஆடல்கலையால் மீட்கப்பட்ட சிலை

ஆடல் பாடல் கலைகளில் நல்ல அறிவு கொண்டிருந்த மன்னனை, ஸ்ரீரங்கம் ஊரார் சந்திக்க, ஆட்டம் ஆடி பாட்டுப் பாடி பரிசாக சிலையை கேட்டனர். மன்னனும் ஒப்புக்கொண்டு சிலையை வழங்கிவிட்டான்.

sowrirajan s

 கோபம் கொண்ட இளவரசி

கோபம் கொண்ட இளவரசி

கோபம் கொண்ட இளவரசி, நேரடியாக யானை மீதமர்ந்து ஸ்ரீரங்கம் சென்று அங்கேயே உயிர் விட்டாள். அவளுக்காக ஸ்ரீரங்கத்தில் ஒரு சன்னதியே உள்ளது தெரியுமா?

துளுக்க நாச்சியார் சன்னதி

துளுக்க நாச்சியார் சன்னதி


ஸ்ரீரங்கம் தேரோட்டத்தின் போது, பெருமானின் சிலையை நகர்வலத்தின் ஆரம்பத்திலும், இறுதியிலும் துளுக்க நாச்சியார் சன்னதி வழி சென்று அவருக்கு காண்பிக்கின்றனர்.

sowrirajan s

மீண்டும் படையெடுப்பு

மீண்டும் படையெடுப்பு

மீண்டும் படையெடுக்க வந்த மன்னர் படைக்கு அஞ்சாமல் பாதிபேர் நேருக்கு நேர் மோத, மீதி பேர் சிலையை கொண்டு சென்றனர்.

அழிந்தது ஊரில் பாதி

அழிந்தது ஊரில் பாதி

சிலையை காணாத மன்னர் ஊரையே அழிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இதை படைகள் பின்பற்றி அனைவரையும் வெட்டிச் சாய்த்தது..

இறந்தது பல்லாயிரக்கணக்கான மக்கள்

இறந்தது பல்லாயிரக்கணக்கான மக்கள்

பல்லாயிரக்கணக்கான மக்கள் இதனால் உயிரிழந்தனர். ஊரே வெறிச்சோடியது. சிலையை யார்யாரோ கொண்டு சென்றுவிட்டனர்.

40 ஆண்டுகளுக்குப் பிறகு

40 ஆண்டுகளுக்குப் பிறகு


40 ஆண்டுகளுக்கப் பிறகுதான் இந்த சிலை ஸ்ரீரங்கத்தை அடைந்ததாக கூறுகின்றனர்.

பெரிய அளவில் செயல்படும் கோயில்

பெரிய அளவில் செயல்படும் கோயில்


இக்கோயில், உலகெங்கிலும் உள்ள இந்துக் கோயில்களுள் பெரிய அளவில் செயல்படும் கோயிலாக, நம்பப்படுகிறது. இக்கோயில் சுமார் 631,000 சதுர அடியில், சுமார் 4 கி.மீ. அல்லது 10,710 அடி சுற்றளவில் கட்டப்பட்டுள்ளது.

Raj

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

மலைக்கோட்டை கோயில், திருவானைக்கோவில் திருக்கோயில், உறையூர் வெக்காளி அம்மன் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், குமார வையலூர் கோயில், மற்றும் காட்டழகிய சிங்கர் கோயில் ஆகியன, இப்பகுதியில் உள்ள பிரபலமான மற்ற சில கோயில்களாகும்.

BOMBMAN

எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?


ஸ்ரீரங்கத்திலேயே ஒரு ரயில் நிலையம் உள்ளது.
திருச்சி செல்லும் பேருந்துகள் மூலமாக, இவ்வூரை சாலை வழியாகவும் அடையலாம். இந்நகருக்கு அருகில் அமைந்துள்ள விமான நிலையம், திருச்சி விமான நிலையம் ஆகும்.

Jayashree B

Read more about: travel temple srirangam