Search
  • Follow NativePlanet
Share
» »நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலின் சிறப்புகள்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலின் சிறப்புகள்

By Naveen

இன்று இந்தியா முழுக்க ஹனுமான் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. வாயு புத்திரனனான ஹனுமான் இராமாயண காவியத்தின் முக்கிய பாத்திரமாவார். இதில் அனுமனுக்கும் ராமனுக்குமான உறவு நட்பின் இலக்கணமாக போற்றப்படுகிறது. சூரியனையே கனி என்று நினைத்து பறிக்கப் பறந்த பேராற்றல் உடைய அனுமனுக்கு இந்தியா முழுவதிலும் ஏராளமான கோயில்கள் இருக்கின்றன.

அதில் தமிழகத்தில் மிகவும் பிரசித்திபெற்ற அனுமன் கோயிலென்றால் அது நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் தான். அக்கோயிலை பற்றிய சிறப்புகளை தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

எங்கே அமைந்திருக்கிறது?

எங்கே அமைந்திருக்கிறது?

பெயரிலேயே இருப்பது போல இந்த கோயில் கோழிப்பண்ணைகளுக்கும், கோழிப்பண்ணை போன்று மாணவர்களை நடத்தும் பள்ளிகளுக்கும் பிரபலமான நாமக்கல் மாவட்டத்தில் சேலம்-நாமக்கல்-திருச்சி சாலையில் அமைந்திருக்கிறது.

கோயிலின் சிறப்புகள்:

கோயிலின் சிறப்புகள்:

இந்த கோயிலின் முக்கிய சிறப்பே இங்கே மூலவராக இருக்கும் ஆஞ்சநேயரின் சிலை தான். இந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய ஆஞ்சநேயர் சிலைகளில் ஒன்றான இது 18அடி உயரத்தில் ஒரே கல்லில் குடையப்பட்டதாகும்.

இந்த சிலை ஐந்தாம் நூற்றாண்டில் குடையப்பட்டது என நம்பப்படுகிறது.

நரசிம்ம சுவாமி கோயில்:

நரசிம்ம சுவாமி கோயில்:

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலின் அருகில் இருக்கும் மலையின் மேல் நரசிம்ம சுவாமி கோயில் ஒன்று உள்ளது. இந்த கோயிலில் நரசிம்ம அவதார ரூபத்தில் வீற்றிருக்கும் விஷ்ணு பகவானை தற்போதிருக்கும் இடத்தில் இருந்து அனுமன் வழிபட்டதாக சொல்லப்படுகிறது:

கோயில் பூசை நேரம்:

கோயில் பூசை நேரம்:

இந்த ஆஞ்சநேயர் கோயில் காலை ஆறு மணியில் இருந்து மதியம் ஒரு மணி வரைக்கும் பின்னர் மாலை நான்கு முப்பது மணி முதல் இரவு ஒன்பதரை வரையும் திறந்திருக்கிறது.

பங்குனி உத்திரம்:

பங்குனி உத்திரம்:

தமிழ் மாதமான பங்குனி மாதத்தில் பங்குனி உத்திரம் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின் போது ஆஞ்சநேயரின் திருவுருவப்படம் ஊர்வலமாக பஜனைகள் இசைத்தபடி கொண்டுவரப்படுகிறது.

அலங்கார ஆஞ்சநேயர்:

அலங்கார ஆஞ்சநேயர்:

இந்தியாவில் வேறு எந்த கோயிலிலும் இத்தனை வித அலங்காரத்தில் ஆஞ்சநேயரை தரிசிக்க முடியாது. சிறப்பு பூசை நாட்களில் அனுமாருக்கு லட்சம் வடைகள் கொண்ட மாலை சாற்றப்படுகிறது.

நாமக்கல்:

நாமக்கல்:

இந்த ஆஞ்சநேயர் கோயில் அமைந்திருக்கும் நாமக்கல் நகரை பற்றிய மேலும் பல பயனுள்ள தகவல்களை தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்துகொள்ளுங்கள்.

More News

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+