Search
  • Follow NativePlanet
Share
» »நந்தன்கானன் விலங்கியல் பூங்கா - நுழைவுக் கட்டணம், ஈர்க்கும் இடங்கள் மற்றும் எப்படி செல்வது

நந்தன்கானன் விலங்கியல் பூங்கா - நுழைவுக் கட்டணம், ஈர்க்கும் இடங்கள் மற்றும் எப்படி செல்வது

நந்தன்கானன் விலங்கியல் பூங்கா - நுழைவுக் கட்டணம், ஈர்க்கும் இடங்கள் மற்றும் எப்படி செல்வது

நந்தன்கானன் ஜூ எனப்படும் இந்த விலங்கியல் பூங்கா ஒரு தாவரவியல் பூங்காவையும் உள்ளடக்கியதாக 400 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. இது ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் அருகிலேயே அமைந்துள்ளது. கோடைக்காலங்களில் இங்கு செல்வது சற்று சிரமமானது. ஆனால் குளிர்காலம் உங்களை எளிதில் வரவேற்கும். வாருங்கள் நந்தன்கானனுக்கு பயணிக்கலாம்.

 எப்போது திறக்கப்பட்டது

எப்போது திறக்கப்பட்டது

1979ம் ஆண்டு இது பொதுமக்களுக்கு திறந்துவிடப்பட்டது. தற்போது புபனேஷ்வர் நகரத்தின் முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக இந்த நந்தன்கானன் விலங்குக்காட்சி சாலை பிரசித்தமாக அறியப்படுகிறது.

Rishidigital1055

குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்

குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்


குழந்தைகளுடன் புபனேஷ்வர் நகரத்திற்கு விஜயம் செய்பவர்கள் அவசியம் இந்த பூங்காவுக்கு வரலாம்.

Jitendraamishra

 காட்டுயிர் சரணாலயம்

காட்டுயிர் சரணாலயம்

பசுமையான சந்தகா-தம்பரா காட்டுயிர் சரணாலயம் மற்றும் கஞ்சிதா ஏரிக்கு நடுவே இந்த நந்தன்கானன் விலங்கியல் மற்றும் தாவரவியல் பூங்கா அமைந்திருக்கிறது. தனது பெயருக்கேற்றபடி இந்த அற்புத தோட்டப்பூங்காவாக இந்த நந்தன்கானன் காட்சியளிக்கிறது.

Bhabani S. Sahoo

 தாவர வகைகள்

தாவர வகைகள்


இங்குள்ள விலங்குகாட்சி சாலையில் பல்வேறு காட்டு விலங்குகள் மட்டுமல்லாது அரிய வகை மரங்கள் மற்றும் தாவரங்களையும் பார்த்து ரசிக்கலாம்.

Mouli1999das

 விலங்குகள்

விலங்குகள்

126 வகையான விலங்குகள் இங்கு வசிக்கின்றன. நல்ல முறையில் இவை பாதுகாக்கப்பட்டு பரமாரிக்கப்பட்டு வருகின்றன.

Avijit.paul.1986

சுற்றுலா பயணிகள்

சுற்றுலா பயணிகள்

தினமும் அதிக எண்ணிக்கையில் இங்கு பார்வையாளர்கள் வருவது மட்டுமல்லாமல் வார இறுதி விடுமுறை நாட்கள் மற்றும் திருவிழா நாட்களில் இன்னும் அதிகமான மக்கள் திரளாக வருகை தருகின்றனர்..

Jitendraamishra

நுழைவுக் கட்டணம்

நுழைவுக் கட்டணம்


இந்த பூங்காவுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு நுழைவுக் கட்டணமாக 50 ரூபாய் பெறப்படுகிறது. அதே நேரத்தில் குழந்தைகளுக்கு 10 ரூபாயும், வெளிநாட்டவர்களுக்கு 100ரூபாயும் பெறப்படுகிறது.

புகைப்படங்கள் எடுக்க மொபைல் கேமரா, வீடியோ கேமரா, சினிமா கேமரா என மூன்று பிரிவுகளில் கட்டணம் முறைப்படுத்தப்பட்டுள்ளது. மொபைல் கேமரா கொண்டு செல்ல 100 ரூபாய் கட்டணம் உள்ளது.

Anubhav Sarangi

விளையாட்டுகள் கட்டணம்

விளையாட்டுகள் கட்டணம்

குழந்தைகளுக்கான பெரம்புலேட்டர் எனப்படும் சிறு அல்லது கைக்குழந்தைகள் வாகனம் கொண்டு செல்ல எந்த கட்டுப்பாடும் இல்லை.

சிங்கம் மற்றும் வெள்ளைப் புலிகள் காண செல்லும் சவாரிக்கு 30 ரூபாயும், கரடி மற்றும் குரங்கு காண செல்லும் சவாரிக்கு 15 ரூபாயும் கட்டணமாக பெறப்படுகிறது.

Jitendraamishra

 படகு சவாரி

படகு சவாரி

அரை மணி நேர படகு சவாரிக்கு கால்மிதி படகு இரு நபருக்கு 50 ரூபாயும், நான்கு நபருக்கு 100 ரூபாயும் கட்டணமாக பெறப்படுகிறது.

Suman Kumar Hansada

Read more about: travel odisha
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X