இந்தியாவில் ஏறக்குறைய 9,000 சுற்றுலாத் தலங்கள் உள்ளனவாம். கணக்கில் உள்ளவை 9,000, ஆனால் கணக்கில் வராதவை, நாம் அன்றாடம் சென்று வரும் இடங்கள், கோவில்கள், சிறு சிறு மலைப் பிரதேசங்கள் என பல்லாயிரக்கணக்கான சுற்றுலாத் தலங்கள் உள்ளன. இந்தியாவில் உள்ள சுற்றுலாத் தலங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. 2023 ஆம் ஆண்டில் ராமர் கோவில், அயோத்தியாவில் மசூதி, ராமேஸ்வரத்தின் பாம்பன் பாலம், உலகிலேயே மிகப்பெரிய ஹாக்கி ஸ்டேடியம் மற்றும் இந்திரா காந்தி விமான நிலையத்தில் 4 ஆவது ரன்வே என இந்தியாவில் திறக்கப்படும் புதிய சுவாரஸ்யமான ஸ்பாட்டுகளின் லிஸ்ட் இதோ!

ராமர் கோவில், அயோத்தி
350 அடிக்கு 250 அடி பரப்பளவில் 12 வாயில்கள் பிராமாண்டமாக அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுகிறது. கோவிலின் தரை தளத்தில் 166 தூண்களும், முதல் தளத்தில் 144 தூண்களும், இரண்டாவது தளத்தில் 82 தூண்களும் அமைக்கப்படுகிறது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி நல்ல வேகத்தில் நடந்து வருகிறது, காலக்கெடுவுக்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராம் மந்திர் அறக்கட்டளை டிசம்பர் 2023 காலக்கெடுவாக நிர்ணயித்துள்ளது. தற்போது, கருவறை மற்றும் கீழ் தளத்தில் ஐந்து மண்டபங்களுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாக ஸ்ரீ ராம் கோயில் கட்டுமானக் குழு தெரிவித்துள்ளது. ராமர் கோவில் திறப்பு விழா இந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கி 2024 ஜனவரி 14ம் தேதி மகர சங்கராந்தி வரை நடைபெறும் என்று தகவல்கள் வெளி வந்துள்ளன.

புதிய பாம்பன் பாலம், ராமேஸ்வரம்
1914 இல் திறக்கப்பட்ட இந்தியாவின் முதல் கடல் பாலமான பாம்பன் பாலத்திற்குப் பதிலாக இந்தப் பாலம் கட்டப்பட்டு வருகிறது. 2 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த பாலம் ரூ. 279.63 கோடி செலவில் தயாராகிக் கொண்டிருக்கிறது. புதிய பாலத்தின் தனித்தன்மை என்னவென்றால், அதன் 72-மீட்டர் நீளமுள்ள செங்குத்து லிப்ட் ஸ்பான் ஆகும், அதை 17 மீட்டர் உயர்த்தினால் அதன் கீழே கப்பல்கள் செல்ல முடியும்.
பாம்பன் பாலத்தின் மீது ரயிலில் செல்லும் எவரும் அந்த காட்சியை புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க தவறுவது இல்லை. இந்த புதிய பாம்பன் பாலத்தின் முழு பணியும் மார்ச் 2023 இல் முடிவடையும் என்றும், பணி முடிந்த சில நாட்களில் பாலம் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன்னிப்பூர் அயோத்தி மசூதி
ராம ஜென்மபூமி-பாபர் மசூதி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அயோத்தியில் கட்டப்பட்டு வரும் மசூதியின் கட்டுமானப் பணி இந்த ஆண்டு டிசம்பரில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மருத்துவமனை, சமூக சமையலறை, நூலகம் மற்றும் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றுடன் இந்த மசூதி கட்டப்பட்டு வருகிறது.
மசூதியின் பூமி பூஜை ஆகஸ்ட் 2020 இல் பிரதமர் நரேந்திர மோடியால் செய்யப்பட்டது, மேலும் இது டிசம்பர் 2023 இல் பக்தர்களுக்கு திறக்கப்படும் என்று மசூதி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பிர்சா முண்டா சர்வதேச ஹாக்கி ஸ்டேடியம்
ஒடிசாவின் ரூர்கேலாவில் புதிதாகக் கட்டப்பட்ட இந்த ஸ்டேடியம் 20,000 பார்வையாளர்களைக் இடமளிக்கும் இந்தியாவின் மிகப்பெரிய ஹாக்கி ஸ்டேடியங்களில் ஒன்றாகும். FIH ஹாக்கி ஆடவர் உலகக் கோப்பை 2023 ஜனவரி 13 ஆம் தேதி இந்த ஸ்டேடியத்தில் தொடங்குகிறது.
உலகின் மிகப்பெரிய ஹாக்கி ஸ்டேடியங்களில் ஒன்றான பிர்சா முண்டா சர்வதேச ஹாக்கி ஸ்டேடியத்தில் FIH ஹாக்கி ஆடவர் உலகக் கோப்பையை கண்டு களியுங்கள்.

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 4 ஆவது ஓடுபாதை
இந்திய பெருநகரங்களில் மிகவும் முதன்மையான மற்றும் இந்தியாவின் தலைநகரான டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் இந்தியாவின் முக்கிய விமான நிலையங்களில் ஒன்றாகும். இந்த விமான நிலையத்தின் நான்காவது ஓடுபாதை இந்த ஆண்டு தொடக்கத்தில் செயல்படத் தொடங்குகிறது.
கருவி தரையிறங்கும் அமைப்பை நிறுவுதல் மற்றும் ஓடுபாதையில் பெயிண்டிங் மற்றும் அளவுத்திருத்தம் போன்ற பிற பணிகள் இந்த டிசம்பரில் முடிவடைவதால் நான்கு ஓடுபாதைகளைக் கொண்ட ஒரே இந்திய விமான நிலையமாக இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் விரைவில் மாறப் போகிறது.



Click it and Unblock the Notifications







