Search
  • Follow NativePlanet
Share
» »நீரார் அணைக்கு எப்படி செல்வது - சுற்றுலா வழிகாட்டி

நீரார் அணைக்கு எப்படி செல்வது - சுற்றுலா வழிகாட்டி

நீரார் அணைக்கு எப்படி செல்வது - சுற்றுலா வழிகாட்டி

By Udhaya

நீரார் அணை வால்ப்பாறையில் இருந்து 15 கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கின்றது. சமவெளிகளில் பல வீடுகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் மின்சாரம் அளிக்கின்ற நீர் மின் செயற்திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த அணை கட்டப்பட்டது. தமிழ் நாடு மற்றும் கேரளாவில் பல இடங்களுக்கு விவசாயத்திற்கு தண்ணீர் விநியோகம் செய்வதில் இவ்வணை முக்கிய பங்கு வகிக்கின்றது. சோலையார் அணை, ஆழியார் அணை, நீரார் அணை வால்ப்பாறையில் இருக்கும் மூன்று முக்கிய அணைகள் ஆகும். இந்த அணையின் பக்கத்தில், கொடைக்கானலின் அருகே இருக்கும் கேஸ்கேட் அருவியைப் போன்ற ஒரு அருவியும் இருக்கின்றது. நீரார் அணையும் அதன் நீர்த்தேக்கமும் பச்சைப்பசும் காடுகளுக்கும், மலைகளுக்கும் நடுவே அமைந்து இருக்கின்றது. தொண்மையும் பழமையும், புதுமையோடு ஒன்றாகக் கலந்து, காலத்தினால் உறைந்தது போன்ற பரந்தவெளி. இந்த பரந்தவெளியின் இயற்கை அழகை இந்த அணை கெடுக்காமல், மெருகேற்றுவதாக தோன்றுகின்றது.

நீரார் அணை - எப்படி செல்வது, என்னவெல்லாம் செய்யலாம் | Nirar Dam - How to reach, things to do and more

Divyacskn1289

சோலையாருக்கு புகழ்சேர்ப்பது, வால்பாறையில் இருந்து 20 கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கும் மேல் சோலையார் அணை. ஆசியாவிலேயே இரண்டாவது ஆழமான அணை இது, ஆண்டு முழுவதும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை இது ஈர்க்கின்றது. தமிழ் நாடு நீர் மின் செயற்திட்டத்தின் ஒரு பகுதியாக இது இருக்கின்றது. இந்த அணையை பார்வையிட சிறப்பு அனுமதி பெற வேண்டும். இந்த அணையின் பிரம்மாண்டமான வலிமையும், பீரிட்டு வரும் நீரும், பார்ப்பதற்கே கண்கொள்ளாக் காட்சி ஆகும். இதன் அமைதியான இருப்பிடத்தின் காரணமாக, ஆண்டுதோறும் இந்த அணை சுற்றுலா பயணிகளால் நிறைந்து காணப்படுகின்றது.

நீரார் அணை - எப்படி செல்வது, என்னவெல்லாம் செய்யலாம் | Nirar Dam - How to reach, things to do and more

D momaya

எப்படி அடைவது

வால்பாறையிலிருந்து அரை மணி நேர பயண தூரத்தில் அமைந்துள்ளது இந்த அணை. மேலும் இது சிறுகுன்று மற்றும் சின்ன கோண வழியாக பயணிக்க வேண்டி வரும் வழித்தடமாகும். அதிக பட்சம் 10 கிமீ வரை தூரம் கொண்டது. மலைப் பாதை இருபுறமும் அழகழகான பச்சை நிற கண்காட்சிகளை கண்டுகொண்டே செல்லலாம்.

More News

    Read more about: travel
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+