Search
  • Follow NativePlanet
Share
» »கோடையில் வெயில் கொளுத்துவது தெரியும்...பனிப்பொழியும் இந்திய நகரங்கள் பற்றி தெரியுமா?

கோடையில் வெயில் கொளுத்துவது தெரியும்...பனிப்பொழியும் இந்திய நகரங்கள் பற்றி தெரியுமா?

கிழக்கு சிக்கிமில் அதிக பனிப்பொழிவு காரணமாக சாலைகள் மூடப்பட்டன. இதனால் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. JN சாலையில் சாங்கு ஏரி வரையிலும், RN சாலையில் ஜூலுக் வரையிலும் மட்டுமே பயணிக்க அனுமதி வழங்கப்படும். சாலைகளை சீரமைத்து, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். ஆனால் வட இந்தியாவின் சில பகுதிகளில் பனிப்பொழியும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?

Snowfall

உண்மை தான். கோடை காலத்தில் இந்த பகுதிகளில் மட்டும் பனிப்பொழிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். கோடையை கொண்டாட விரும்புபவர்கள் இங்கு கண்டிப்பாக சுற்றுலா செல்லலாம்.

கோடையில் பனிப்பொழிவும் இடங்கள் :

தவாங்

தவாங் இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு முக்கியமான நகரம் மற்றும் மாவட்டமாகும். இது இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது. இது புத்த மதத்தினருக்கு மிகவும் புனிதமான மற்றும் பிரபலமான இடமாகும். இது இந்தியாவின் மிகப்பெரிய பௌத்த மடாலயங்களில் ஒன்றாகும். இதன் கட்டிடக்கலை மற்றும் ஆன்மீகச் சூழல் பல சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. இங்கு கோடையில் பனிப்பொலிவு ஏற்பட வாய்ப்புள்ளது.

Snowfall

பூம் லா கணவாய்:

இது இந்தியாவையும் சீனாவையும் இணைக்கும் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு கோடை காலத்திலும் பனிப்பொழி சில சமயங்களில் ஏற்படும் என்றால், மற்ற மாதங்களில் கேட்கவே வேண்டாம். உறைபனியாக தான் காணப்படும்.

சேலா கணவாய்:

இது தவாங்கை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் முக்கியமான மலைப்பாதை. பாதை முழுவதும் வெள்ளை கம்பளம் விரித்தது போல் பனியாக சில சமயங்களில் காட்சி தரும்.

நூரானாங் நீர்வீழ்ச்சி (ஜங் நீர்வீழ்ச்சி):

இது ஒரு அழகான நீர்வீழ்ச்சியாகும். இப்பகுதியின் இயற்கை அழகை மேலும் கூட்டுகிறது. இங்கு சென்றால் இந்தியாவில் தான் இருக்கிறோமா, அல்லது சுவிட்சர்லாந்திற்கு வந்திருக்கிறோமோ என்ற சந்தேகமே வந்து விடும்.

லாச்சுங், சிக்கிம்:

கடல் மட்டத்திலிருந்து சுமார் 9,600 அடி உயரத்தில் அமைந்துள்ள லாச்சுங், இயற்கை எழில் கொஞ்சும் மலைகள், பனி மூடிய சிகரங்கள் மற்றும் பசுமையான பள்ளத்தாக்குகளால் சூழப்பட்டுள்ளது. இங்கு கோடையில் சில சமயங்களில் பனிப்பொழியும்.

யும்தாங் பள்ளத்தாக்கு:

லாச்சுங்கிலிருந்து சுமார் ஒரு மணி நேர பயணத்தில் உள்ள இந்த பள்ளத்தாக்கு, அதன் வசீகரமான இயற்கை அழகு மற்றும் வெப்ப நீர் ஊற்றுகளுக்குப் பெயர் பெற்றது.

ஜீரோ பாயிண்ட்:

யும்தாங் பள்ளத்தாக்கிற்கு அப்பால் அமைந்துள்ள இந்த இடம், பனி மூடிய மலைகளின் அற்புதமான காட்சிகள் இயற்கையையும் குளுமையையும் விரும்புபவர்களுக்கு ஏற்ற பகுதி.

லாச்சுங் மடாலயம்:

இது இப்பகுதியில் உள்ள முக்கியமான பௌத்த மடாலயங்களில் ஒன்றாகும். இந்த பகுதியை சுற்றி பனி மூடியே காணப்படும்.

பீம் நாலா நீர்வீழ்ச்சி:

லாச்சுங்கிற்கு செல்லும் வழியில் உள்ள இந்த நீர்வீழ்ச்சி ஒரு பிரபலமான நிறுத்தம். நாட்டில் உள்ள மிக குளுமையான, பனி மூடிய பகுதிகளில் இதுவும் ஒன்றாகும்.

பாராலச்சா லா

இது லடாக் யூனியன் பிரதேசத்தையும், இமாச்சல் பிரதேசத்தின் லாஹவுல் மாவட்டத்தையும் இணைக்கிறது. இதன் உயரம், கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,890 மீட்டர் (16,043 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. இது லே-மணாலி நெடுஞ்சாலையில் உள்ளது. இங்கிருந்து சுற்றியுள்ள பனி மூடிய மலைகளின் காட்சி மிகவும் அழகாக இருக்கும். சூரிய தால் ஏரி இந்த கணவாய்க்கு அருகில் அமைந்துள்ளது. செனாப் நதியின் இரண்டு முக்கிய கிளை நதிகளான சந்திரா மற்றும் பாகா ஆகியவையும் இங்கிருந்துதான் உற்பத்தியாகின்றன.

யூம்தாங் பள்ளத்தாக்கு

இது வட சிக்கிம் மாவட்டத்தில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,564 மீட்டர் (11,693 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. கண்கவர் இயற்கை அழகு, வெந்நீர் ஊற்றுகள், ஆறுகள், பசுமையான புல்வெளிகள் மற்றும் இமயமலைகளால் சூழப்பட்ட இந்த பள்ளத்தாக்கு சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு சொர்க்கமாகும்.
இந்த பள்ளத்தாக்கில் ஷிங்பா ரோடோடென்ட்ரான் சரணாலயம் அமைந்துள்ளது. இது 24 க்கும் மேற்பட்ட வகையான ரோடோடென்ட்ரான் மலர்களைக் கொண்டுள்ளது. பள்ளத்தாக்கின் முடிவில் ஒரு வெந்நீர் ஊற்று உள்ளது. இது கந்தகம் கலந்த நீரை கொண்டுள்ளது மற்றும் மருத்துவ குணங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது.

ரோஹ்தாங் கணவாய்

ரோஹ்தாங் கணவாய் என்பது இந்தியாவின் இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு உயரமான மலைப்பாதை ஆகும். இது பிர் பஞ்சால் மலைத்தொடரில், மணாலியிலிருந்து சுமார் 51 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.இது ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும். இங்கு பனிச்சறுக்கு, ஸ்லெடிங் போன்ற குளிர்கால விளையாட்டுகளும், மலையேற்றம் போன்ற சாகச விளையாட்டுகளும் பிரபலம்.

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+