Search
  • Follow NativePlanet
Share
» »நண்பர்களுடன் நீங்கள் நினைத்ததுபோல இருக்க சாதகமான இடங்களைப் பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா?

நண்பர்களுடன் நீங்கள் நினைத்ததுபோல இருக்க சாதகமான இடங்களைப் பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா?

ஊர் சுத்தனும்னு கூப்டா யாருதான் வேணாம்னுவாங்க...அதுவும் உங்க பிரெண்ட்ஸ் கூட

By Udhaya

உங்க பிரெண்ட்ஸ் கூட ஊர் சுத்தனும்னா நீங்க நோ சொல்வீங்களா.. எவ்ளோ நாள் தானுங்க இந்த ஊரையே சுத்தி சுத்தி வர்றது. வெளியூர் எங்கயாச்சும் போய்ட்டு வரணும்னு திட்டம் போட்ருக்கீங்களா சரி உங்க நண்பரோட சுற்றுலா செல்ல ஏற்ற டாப் 20 இடங்களைப் பற்றி இங்கு காணலாம்.

இந்தியாவின் தெற்கு பகுதியில் சுற்றுலா செல்வது என்பது நமக்கு மிகவும் பிடித்தமான ஒன்றுதான் என்றாலும், நம் நண்பர்களுடன் இதுவரை செல்லாத சில இடங்களும் இருக்கலாம். பள்ளி சுற்றுலா, கல்லூரி சுற்றுலா அல்லது தனிமையாக சென்ற சுற்றுலா என நண்பர்கள் தான் நம்மைச் சுற்றி எல்லா பயணத்திலும் உடனிருப்பர்.

குடகு

குடகு

நீல நிற மலைத்தொடர்களில் பாட்டுப்பாடிக் கொண்டே ஆடி வரும் நீர் வீழ்ச்சிகளைக் காண ஆனந்தம் அளப்பறிக்குமே.

மலையேற்ற விரும்பிகளுக்கு மிக அருமையான தளம் இந்த குடகுமலை

கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள இந்த மலைப் பகுதி அதிகளவு சுற்றுலாப்பயணிகள் வந்து செல்லும் இடமாக அறியப்படுகிறது.

PC: manish_nadir

கோகர்னா

கோகர்னா


பூமியில் சொர்க்கம் இருக்கிறதா அதுவும் கடற்கரையை ஒட்டி என்று யாரும் கேட்டால், நிச்சயமாக இருக்கிறது என்று அடித்துச் சொல்லுங்கள். ஏனென்றால் கோகர்னா கடற்கரையை பார்க்கும் ஒவ்வொருக்கும் இதே உணர்வுதான் ஏற்படுகிறது.

இந்த சிறு நகரம் தன்னில் ஏராளமான வரலாற்று கோவில்களைப் பெற்றுள்ளது. புதுவருடத்தில் நீங்கள் பார்க்கவிரும்பும் சுற்றுலாத் தளமாக இது விளங்கும்.

PC:Leon Meerson

சிக்மகளூர்

சிக்மகளூர்


உங்களுக்குள் மறைந்திருக்கும் திறமையை உங்களிடமே எடுத்துக்காட்டும் இயற்கையின் ரகசியங்களை மறைத்து வைத்திருக்கும் பகுதி சிக்மகளூர்.

மலைக்குன்றுகள் ஆங்காங்கே அமைந்து, வான விளையாட்டை நடத்துவதற்கு துணைச் செல்லும். அவ்வப்போது மனம் குளிர்ந்து மேகங்கள் மழையைத் தூவும்.

அன்றாட வாழ்க்கையிலிருந்து வெளியே வந்து நம் நண்பர்களுடன் மனம்குளிர கொண்டாட்டத்தில் ஈடுபட சிக்மகளூர் சிறந்த இடம்

PC: Dheeraj Rao

வயநாடு

வயநாடு

கடவுளின் சொந்த ஊரான கேரளாவில் அமைந்துள்ளது வயநாடு.

அழகிய மேற்குத் தொடர்ச்சி மலை மீது 2132 சதுர கி.மீ வரை உள்ள இடங்களில் பல்லுயிர் பெருக்கம் மிகுந்து காணப்படுவதால் கேரள மாவட்டங்களுள் தனது இயற்கை அழகை நிலைநிறுத்தி வைத்துள்ள மாநிலங்களுள் ஒன்றாக வயநாடு திகழ்கிறது.

விமான நிலையம் : கோழிக்கோடு.
ரயில் நிலையம் : கோழிக்கோடு

சாலை : கோழிக்கோடு, கன்னூர், ஊட்டி, மைசூர் ஆகிய நகரங்களோடு சாலை வழி மூலம் இணைக்கப்பட்டுள்ளது.

PC: srikanth

ஆலப்புழா

ஆலப்புழா

கிழக்கு வெனிஸ் என்று அழைக்கப்படுகின்ற ஆலப்புழா கேரள வரலாற்றில் ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது. தற்போது இது அங்கு நடைபெறும் படகுப்போட்டிகள், விடுமுறை காயல் வீடுகள், கடற்கரைகள், கடல் உற்பத்திப் பொருட்கள் ஆகியவற்றிற்கு உலகப் புகழ் கொண்ட நகராக திகழ்கிறது.

ஆலப்புழாவில் இருக்கும்போது நாம் காணும் மிகவும் அருமையான ஒரு அனுபவம் படகு இல்லப் பயணமாகும்.

PC: jeya kumar

மூனாறு

மூனாறு

நம்ம ஊருக்கு அருகில் இப்படியொரு பிரமாதமான மலை இருக்கிறதா என்று பார்வையாளர்களை மலைக்க வைக்கும் இயற்கை எழிற்காட்சிகளைக் கொண்டுள்ள இந்த மூனாறு மலைவாசஸ்தலம்' கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

பிரமிக்க வைக்கும் அடுக்கடுக்கான பசுமையான மலைப்பிரதேச அமைப்புகளுடன் வீற்றிருக்கும் இந்த சுற்றுலாப்பிரதேசம் இந்தியாவின் முக்கிய புவியியல் அடையாளமான மேற்குத்தொடர்ச்சி மலைகளில் உள்ளது.

PC: Robin Raj

 ஹம்பி

ஹம்பி


க‌ல்‌லிலே கலை வ‌ண்ண‌ம் க‌ண்டா‌ன் எ‌ன்ற பாடலு‌க்கு‌ம் சொ‌ந்தமான ஊ‌ர் எ‌ன்றா‌ல் அது ஹ‌ம்‌பிதா‌ன்.

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் வடக்குப் பகுதியில், துங்கபத்திரை ஆற்றங்கரையில் உள்ள ஒரு சு‌ற்றுலா நகர‌ம். ம‌னித‌ன் தா‌ன் க‌ண்ட கனவுகளை க‌ல்‌லி‌ல் செது‌க்‌கினா‌ல் எ‌ப்படி இரு‌க்கு‌ம்,

நேரில் சென்று காணுங்கள் ஹம்பியின் வரலாற்று சிறப்புகளை...

PC: Raj Mohapatra

ஊட்டி

ஊட்டி

இயற்கை எழில் கொஞ்சும் அழகிய மலைகள், பச்சை கம்பளம் விரித்த புல்வெளிகள், அடர்ந்த வனத் தோட்டங்கள், தேயிலை தோட்டங்கள், ஆர்ப்பரிக்கும் அருவிகள், கம்பீர அணைகள் என காண்பதற்கு ஏராளமான இடங்கள் உள்ளன.

ஊட்டியில் கட்டாயம் காணவேண்டிய பகுதிகளாக அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், மரவியல் பூங்கா, தொட்டபெட்டா, பைக்காரா அணை ஆகிய இடங்கள் உள்ளன. இவற்றை பார்க்க சர்க்யூட் பஸ் இயக்கப்படுகிறது.

PC: Rajarathinam Chakravarthy

புதுச்சேரி

புதுச்சேரி

கோவாவுக்குச் செல்ல திட்டங்கள் பல தீட்டி, இன்றுவரை போகமுடியவில்லை என்கிறீர்களா. கவலையை விடுங்கள் அருகிலேயே அழகாகக் காத்திருக்கிற பாண்டிச்சேரிக்குச் செல்லலாமே.

அழகான கடற்கரைகள், பிரெஞ்சு பாணி கட்டிடங்கள், கழிமுகங்கள், படகுச்சவாரிகள் என சுவாரஸ்யமான பல அம்சங்களைக் கொண்டுள்ளது புதுச்சேரி. ஆசிரமங்கள், கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் என ஆன்மிகத் தலங்களுக்கும் குறைவில்லை.

PC: Subash Chandran

சக்லேஷ்பூர்

சக்லேஷ்பூர்


காலை எழுந்ததும் சூரியன் முகத்தில் ஒளி வீச, சன்னலைத் திறந்தால் சுகமான காற்று வீச சுட சுட காப்பியுடன் உங்கள் நண்பர்களுடன் கொண்டாடினால், அப்படியொரு பகுதிதான் சக்லேஷ்பூர்.

குளிர்ந்த மேகங்கள் விளையாட வானத்து வள்ளல் மழைக் கொடை வழங்கினால் பூமி செழிக்கும். கூடவே நம் மனம் செழிக்க அற்புத காட்சிகளையும் இயற்கை நமக்கு வழங்கும்.

PC: Arun Ponniah Sethuramalingam

கண்ணூர்

கண்ணூர்

கேரள வரலாற்றில் கண்ணூர் எனும் பெயருக்கு ஒரு முக்கியமான இடம் வழங்கப்பட்டிருப்பதை இங்குள்ள எண்ணற்ற பாரம்பரிய கட்டிடங்கள், நகரமைப்புகள் மற்றும் உணவுப்பாரம்பரியம் போன்றவற்றிலிருந்து புரிந்துகொள்ளலாம்.

செல்ஃபி எடுத்துக்கொள்ள அருமையான இடமாக கருதப்படுகிறது. உங்கள் காது மடல்களை சுகப்படுத்தும் இந்த காற்றின் ஓசைகள், பைக்கில் செல்லும்போது நீங்கள் உணரும் தருணங்கள் அனைத்தையும் தவறவிடாதீர்கள். உடனே உங்கள் நண்பருடன் சுற்றுலாவுக்கு திட்டமிடுங்கள்...

PC: Parth Bhatt

பீமேஷ்வரி

பீமேஷ்வரி

பெங்களூருக்கு அருகிலிருக்கும் இந்த ஊர் அழகியல்கள் நிறைந்தது. ஒருமுறை சென்றால் மீண்டும் மீண்டும் செல்லத் தூண்டும் அற்புதமான இடம் பீமேஷ்வரி.

உங்கள் நண்பர்களுடன் சுற்றுலா மேற்கொள்வீர்களேயானால் அதற்கு மிகச் சிறந்த இடம் பீமேஷ்வரி ஆகும்.

PC: Sibi John

More News

    Read more about: பயணம் travel
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+