Search
  • Follow NativePlanet
Share
» »அதிசயமான் ஆண்ட தர்மபுரி இப்போது என்னெல்லாம் இருக்கு தெரியுமா?

அதிசயமான் ஆண்ட தர்மபுரி இப்போது என்னெல்லாம் இருக்கு தெரியுமா?

தர்மபுரி சுற்றுலாத் தலங்கள் - காணத்தக்க இடங்கள் மற்றும் எப்படி அடைவது

இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் தர்மபுரி, கோயில்களுக்கும், ஆலயங்களுக்கும் சிறப்புப் பெற்ற ஸ்தலமாகும். கர்நாடக மாநில எல்லைக்கு அருகில் இருக்கும் இந்த நகர், இயற்கை எழில் கொஞ்சும் புண்ணிய இடமாக விளங்குகிறது. அதே நேரத்தில் சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையிலும் அமைந்திருக்கிறது. சென்னை மற்றும் பெங்களூருக்கு நடுவில் தர்மபுரி அமைந்திருப்பதால் இந்த நகரங்களில் இருந்து ஏராளமான மக்கள் தர்மபுரிக்கு அடிக்கடி வருகை தருகின்றனர். வரலாற்று ரீதியாக சோழர்கள், ராஷ்டிரகூடர்கள் மற்றும் பாண்டியர்கள் தர்மபுரியை ஆட்சி செய்திருக்கின்றனர்.

தர்மபுரியை சுற்றியுள்ள புனித தலங்கள்

தர்மபுரியை சுற்றியுள்ள புனித தலங்கள்

*தர்மபுரியைச் சுற்றி மிகப் பிரபலமான இந்து சமய கோயில்கள் மற்றும் கிறிஸ்தவ சமய ஆலயங்கள் உள்ளன.

* கோட்டை கோவில், சென்றாய பெருமாள் கோயில் மற்றும் இங்கிருக்கும் தீர்த்தமலையில் அமைந்திருக்கும் திரு தீர்த்தகிரீஸ்ரர் கோயில் போன்ற இந்து சமய திருத்தலங்கள் பக்தர்களைக் கவரும் வகையில் உள்ளன.

* கிறிஸ்தவ ஆலயங்களான மவுண்ட் கார்மல் ஆலயம், சிஎஸ்ஐ சீயோன் ஆலயம், திரு இருதய கத்தீட்ரல் போன்றவையும் தர்மபுரியை அழகுபடுத்துகின்றன.

*இந்த ஆன்மீகத் தலங்களுக்கு ஒவ்வொரு நாளும் ஏராளமான அளவில் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

GOVINDARAJ

அதியமான் கோட்டை

அதியமான் கோட்டை

* அதியமான் கோட்டை தர்மபுரி மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. இந்த பழைய கோட்டை தர்மபுரிக்கு 7 கிமீ தொலைவில் உள்ளது
* தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் பழமையான கோட்டைகளில் ஒன்றாக இந்த அதியமான் கோட்டை அமைந்திருக்கிறது.

* கடையேழு வள்ளல்களில் ஒருவரான அதியமான் அரசரால் இந்த கோட்டை கட்டப்பட்டிருக்கிறது. இந்த கோட்டை களிமண்ணால் வட்ட வடிவில் கட்டப்பட்டிருக்கிறது.

* அதியமான் கோட்டை ஒரு மிக முக்கிய சுற்றுலா ஸ்தலமாகும். இந்த கோட்டையை சுற்றிலும் ஒரு ஏரி உள்ளது. இந்த ஏரியை இந்த பகுயில் இருப்பவர்கள் மிக முக்கியமான ஒன்றாக கருதுகின்றனர்.

* மன்னர் அதியமான் காலத்தில் அவரது அரசின் தலைநகராக தர்மபுரியும், அவரது கோட்டையாக இந்த அதியமான் கோட்டையும் விளங்கி இருக்கிறது.

* அதியமான் கோட்டைக்கு செல்ல ஏராளமான போக்குவரத்து வசதிகள் உள்ளன.

Vinodhinisiva

கரிமங்கலம்

கரிமங்கலம்


*ஒரு சிறிய நகரான கரிமங்கலம், தர்மபுரி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

*இந்த நகரம் சிறியதாக இருந்தாலும், தமிழ்நாட்டின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இது இருக்கிறது.

*தர்மபுரி மாவட்டத்தின் மிக முக்கிய பகுதியாக கரிமங்கலம் விளங்குகிறது. ஏனெனில் இந்த கரிமங்களத்தில் பல இந்து சமய கோயில்கள் உள்ளன.

*இந்த கோயில்கள் நகராட்சி அதிகாரிகளால் நிரவாகம் செய்யப்படுகின்றன. இந்த கரிமங்கலத்திற்கு மிக உறுதியான வரலாற்று பின்னனியும் உண்டு.

*அதாவது இந்த கரிமங்கலம் புராணத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்தே இருந்து வருகிறது. மேலும் கரிமங்கலம் பழை சமய இலக்கியங்களில் முக்கிய இடம் பெற்றிருக்கிறது.

RAJUKHAN SR RAJESH

கோட்டை கோவில்

கோட்டை கோவில்

*தர்மபுரி மாவட்டத்தின் வடக்கு பகுதியில் கோட்டை கோவில் அமைந்திருக்கிறது. இந்த கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

*கோட்டை கோவில் வீற்றிருக்கும் சிவபெருமான் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்று பக்தர்கள் நம்புகின்றனர். அதனால் சிவபெருமானிடம் அருள்வரங்களைப் பெற ஆயிரக்கணக்கில் பக்தர்கள் இந்த கோயிலுக்கு வந்து செல்கின்றனர்.

* கோட்டை கோவில் ராமாயண நிகழ்வுகள் நடந்த ஒரு பகுதியாக இந்து சமய புராணங்கள் குறிப்பிடுகின்றன.

*கோட்டை கோயிலில் வடிவமைக்கப்பட்டிருக்கும் சித்திரங்கள் இந்த கோயிலின் பெருமைகளை எடுத்துக் காட்டுகின்றன.

*கோட்டை கோயிலின் மிக முக்கிய அம்சம் இங்கிருக்கும் தொங்கும் தூண்களாகும்.

Parvathisri

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+